அரசியல்

“நான் தமிழகத்துக்கு எதிரானவன் அல்ல” : மன்னிப்பு கோரினார் அரவிந்த் கெஜ்ரிவால்

“நான் தமிழக மாணவர்களுக்கு எதிரானவன் அல்ல. நான் பயன்படுத்திய உதாரணமே தவறு. எனவே நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

“நான் தமிழகத்துக்கு எதிரானவன் அல்ல” : மன்னிப்பு கோரினார் அரவிந்த் கெஜ்ரிவால்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தின்போது டெல்லியில் இயங்கிவரும் கல்வி நிலையங்களில், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் படிப்பதால், அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் டெல்லி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை எனவே மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் டெல்லி மக்களுக்கு கல்வி நிலையங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பாடும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கருத்துக்கு டெல்லியில் கல்வி நிலையிங்களில் பயிலும் தமிழக மாணவர்கள், மாணவ அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சமுக வலைதளங்களில் இது பெரிய விவாதத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “தமிழக மாணவர்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, எனக்கு தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. நாட்டின் வளர்ச்சி மற்றும் பல்வேறு விஷயங்களில் தமிழர்களின் பங்கு உள்ளது எனக்கு மிகவும் பிடிக்கும், அதை நான் பாராட்டுகிறேன். நான் கூறியது தவறாகத் திரிக்கப்பட்டு செய்தியாக வெளிவந்துள்ளது. நான் ஒரு குறிப்பிட்ட கல்வி நிலையங்களை மட்டும் வைத்துக்கொண்டு உதாரணம் கூறினேன். நான் தமிழக மாணவர்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல.

ஆனால், என் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மீது எனக்கு மிகுந்த அக்கறை உள்ளது. 12ம் வகுப்பில் 98% மதிப்பெண் பெற்ற டெல்லியை சேர்ந்த மாணவர்களுக்கு கூட, கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் பதற்றமடையும் நிலை ஏற்படுகிறது.

எனவே டெல்லியில் 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 85% இடங்களையும், மற்ற மாநில மாணவர்களுக்கு 15% இடத்தையும் ஒதுக்க விரும்புகிறோம். ஆனால், மத்திய அரசின் உதவி பெறும் கல்லூரிகளில் அனைத்து தரப்பு மாணவர்களும் சேரலாம். இதனால், நான் தமிழக மாணவர்களுக்கு எதிரானவன் அல்ல. நான் பயன்படுத்திய உதாரணமே தவறு. நான் தவறு செய்துவிட்டேன். எனவே நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories