திருப்பரங்குன்றத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணனனுக்கு வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது :
“தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல, மக்களுக்காக தொடர்ந்து களத்தில் இருக்கின்றோம். இங்கு ஒரு சகோதரி நான் கடந்த தேர்தலில் அதிமுக-விற்கு வாக்களித்துள்ளேன். இனி உங்களுக்கு மட்டும்தான் வாக்களிப்பேன் என தெரிவித்தார். என்னை அதிகமாக ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். மக்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க முடியாத அரசாங்கமாக இந்த அதிமுக அரசு உள்ளது.
ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் மரணத்தில் மர்மம் உள்ளது என துணை முதல்வர் ஓ.பி.எஸ், தன் பதவியைப் பறிக்கப்பட்ட போது முதன்முதலில் தெரிவித்தார். பின்னர் தான் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தைப் பிறப்பித்து உத்தரவிட்டனர். விசாரணை ஆணையம் 4 முறை சம்மன் அனுப்பியும் ஒரு முறை கூட பன்னீர் செல்வம் ஆணையத்திற்கு பதில் அளிக்கவில்லை.
இதேபோல் கொடநாடு பிரச்சனை. அங்கு நான்கு பேர் மர்ம மரணம் அடைந்துள்ளனர். இதைவிட கொடுமை பொள்ளாட்சி சம்பவம். ஏன் 5 நாட்களுக்கு முன்பு கூட அதிமுக வை சேர்ந்தவர்கள் பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்து அவர்களை மிரட்டி வருகிறார்கள். கலைஞர் மரணத்தின் போது அவருக்கு இடம் கூட கொடுக்காத அரசு தான் இந்த எடப்பாடி அரசு.தேச தலைவருக்கு இடம் கொடுக்காத அதிமுக அரசு இங்கு இருக்கவேண்டுமா என முடிவு செய்யுங்கள்.
இந்த தொகுதியில் முன்பு நடந்த தேர்தலில் போது அம்மையார் ஜெயலலிதா அவர்களின் கைரேகையைச் சுயநினைவில் வைக்கவில்லை என்று வழக்கு தொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மோசடிகள் செய்து தான் ஆட்சியில் இந்த அரசு உள்ளது.
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ஜி.எஸ்.டி., கேபிள் டிவி கட்டணத்தை கட்டுப்படுத்தி குறைத்திடுவோம். பெண்கள் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு வழங்க உறுதி செய்வோம். என உறுதியளித்தார். மேலும் இந்த ஆட்சியின் அவலநிலையை விரட்டியக்க திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நீங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் டாக்டர் சரவணன் அவர்களை ஆதரிக்க வேண்டும்” என்று வாக்கு சேகரித்தார்.