நேற்றைய தினம் திருச்செந்தூரில் செய்தியாளர்கள் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி,
மோடி தலைமையிலான ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பின்றி வாழ்கின்றனர். அதுமட்டுமின்றி மோடி தனது ஆட்சி 5 ஆண்டுகள் செய்த சாதனை பற்றி பேசாமல், தேர்தல் நேரத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து பேசுகிறார். 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறினார். ஆனால் அதனை அவர் நிறைவேற்றவில்லை.
மோடி ஆட்சியில் தமிழகம் மிகவும் வஞ்சிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகளை பாதிக்கும் எட்டு வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் மற்றும் தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு போன்ற மோசமான திட்டங்களால் தமிழக மக்களை பாதிப்புள்ளாகியுள்ளார்.
இதனை மனதில் வைத்துக்கொண்டு மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் மத்தியில் காங்கிரஸ்க்கும் மக்கள் வாக்களித்திருப்பர்கள். எனவே தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளிலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும். இதனால் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் எற்படும். என அவர் தெரிவித்தார்.