அரசியல்

அதிமுக 50 ஆயிரம் ஓட்டு வாங்கட்டும் பார்க்கலாம் - செந்தில் பாலாஜி பதிலடி !

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வெறும் 50 ஆயிரம் ஓட்டு வாங்கட்டும் பார்க்கலாம் என அமைச்சர் செங்கோட்டையனுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக 50 ஆயிரம் ஓட்டு வாங்கட்டும் பார்க்கலாம் - செந்தில் பாலாஜி பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அரவக்குறிச்சி தொகுதியின் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டதை அடுத்து கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் பள்ளபட்டி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் றேற்று இரவு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, அரவக்குறிச்சி தேர்தல் வெற்றி அதிமுகவிற்கு என்பது உறுதியாகிவிட்டது. வேட்பாளர் செந்தில்நாதன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்,.

அரவக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 2 லட்சம் ஓட்டுகள் உள்ளது. இதில் அதிமுக வெறும் 50 ஆயிரம் ஒட்டுகள் வாங்குவதே பெரிதும். அப்படி வாங்கி விட்டால், அதுவே ஆளும் கட்சியின் சாதனையாகும் என்றார்.

புலனாய்வுத்துறை எங்கள் கையில் இருக்கிறது. மக்கள் மனதில் என்ன இருகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியதற்கு, சீனியர் அமைச்சர் என அவரை நினைத்தேன். அவர்களின் அறியாமை மற்றும் இயலாமையை காட்டுகிறது.

நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படுவதாக இருந்தால் அதை முன் கூட்டியே தெரியப்படுத்தும் புலனாய்வுத் துறையை அரசு தவறாக பயன்படுத்துகிறது அரசு என அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் நடந்து வருகிறது என்றும் இந்த நான்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத் தேர்தல் முடிவு தமிழக முதல்வரை நிர்ணையிக்கும் தேர்தலாக அமையும் என்றார்.

தமிழக அரசும், மத்திய அரசும் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு உணர்வார்கள்.அரசு அதிகாரிகள் வேறு வழியில்லாமல் ஆளும் கட்சியினர் கூறியதை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories