உத்திரபிரதேசத்தின் புந்தோல் கண்ட் பகுதியில் புதன் கிழமையன்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பிரதமர் மோடியை கடுமையாக விமரிசித்தார். அப்போது 'மோடி பிரதமராக இல்லை. தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ளும் நபராகவே இருக்கிறார். பந்தோல்கண்ட் பகுதியில் வரலாறு காணாத வரலர்ச்சி நிலவும் நேரத்தில், பிரதமர் பயணிக்கும் சாலைகளை லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து சுத்தம் செய்கிறார்கள். என்று அவர் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து உத்திரப்பிரதேத்தின் ஃபதேபூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது: அரசியல்ரீதியாக நமது நாட்டில் மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. எனவே, மக்கள் நமது பகுதி, நமது நலன் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் வாக்களிக்க கூடாது. வாக்களிக்கும் முன்பு நமது எதிர்க்கால தலைமுறையின் நன்மைகளை கருத்தில் கொள்ளவேண்டும். நாட்டில் நாம் பாதுக்காப்பாக வாழவேண்டும் என்பதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் ரீதியான வேறுபாடுகள், கசப்புணர்வுகளை மனதில் கொள்ள வேண்டும். வெகுஜனமக்களின் நன்மைக்காக பாடுபடுபவர்களையும், அவர்களின் கவலைகளையும் பிரச்சனைகளையும் புரிந்துகொண்டு தீர்வுக்கான முயற்சி செய்பவர்களுக்கு, வாக்களிக்கும் போது முன்னுரிமை தர வேண்டும்.
ஜனநாயகத்தில் மக்களை விட பெரிய சக்திகள் வேறு கிடையாது. உங்கள் அனைவருக்குமே வாக்குரிமை உள்ளது. இது உங்களின் உரிமை மட்டுமல்ல, உங்களது மிகப்பெரிய பலமும் உங்கள் கைகளில் உள்ள வாக்குதான். உங்களிடம் உள்ள வாக்குரிமை ஓர் ஆயுதமும் கூட. இந்த ஆயுதத்தை மிகச் சரியாக பயன்படுத்தவேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து பொய்களைப் பேசி வருபவர்களையும், உங்களுக்கு தேவையில்லை விஷயங்களை பேசி கவனத்தை திசை திருப்புவர்களையும் புறக்கணிக்க வேண்டும். என பிரச்சாரக் கூட்டத்தில் பிரியங்கா தெரிவித்தார்.