அரசியல்

அகிலேஷ் யாதவும், மாயாவதியும் மோடியை பார்த்து பயப்படுகிறார்கள் - ராகுல்காந்தி

உத்தரபிரதேச மாநிலம் படாம் என்ற இடத்தில் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.

அகிலேஷ் யாதவும், மாயாவதியும் மோடியை பார்த்து பயப்படுகிறார்கள் - ராகுல்காந்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உத்தரபிரதேச மாநிலம் படாம் என்ற இடத்தில் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது

உத்தரபிரதேச மாநிலத்தை பாரதீய ஜனதாவோடு சேர்ந்து சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகளும் நாசமாக்கிவிட்டன. இங்கு மறுபடியும் காங்கிரசை வலுவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிரியங்காவையும், ஜோதிர் ஆதித்யா சிந்தியாவையும் பொறுப்பாளர்களாக காங்கிரஸ் நியமித்து உள்ளது.

2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறோம். அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் இங்கு ஆட்சி அமைக்கும்.

அகிலேஷ் யாதவும், மாயாவதியும் மோடியை பார்த்து பயப்படுகிறார்கள். கடந்த கால வரலாறுகளை புரட்டி பார்த்தால் இது நன்றாக தெரியும். சி.பி.ஐ.யை வைத்து மோடி மிரட்டுவதால் அவர்கள் அச்சப்படுகிறார்கள்.ஆனால் நாங்கள் மோடிக்கு பயப்படுபவர்கள் அல்ல.

எங்களையும் சி.பி.ஐ.யை காட்டி மிரட்டுகிறார்கள். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மோடி தன்னை காவலாளி என்று அழைத்துக் கொள்கிறார். ஆனால் அவர் திருடர் என்று நான் சொல்கிறேன்.இதே வார்த்தையை சொல்லும் தைரியம் அகிலேஷ் யாதவுக்கோ, மாயாவதிக்கோ இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

banner

Related Stories

Related Stories