உணர்வோசை

அது என்ன கார்ப்பரேட் பெண்ணியம் ? பெரியாரிய, கம்யூனிஸ பெண்ணியத்துக்கும் அதற்கும் உள்ள வேறுபாடு என்ன ?

பெண்ணியம் சார்ந்து பல விமர்சனங்களும் முன் வைக்கப்படுகிறது. பெண்ணியத்தை எப்படி புரிந்து கொள்வது?

அது என்ன கார்ப்பரேட் பெண்ணியம் ? பெரியாரிய, கம்யூனிஸ பெண்ணியத்துக்கும் அதற்கும் உள்ள வேறுபாடு என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

பெண்ணியம் என்கிற ஒரு கருத்தியல் சமீபகாலமாக அதிகம் முன் வைக்கப்படுகிறது. பெண்ணுரிமை, பெண் விடுதலை, உழைக்கும் வர்க்கம் எனத் தொடங்கிய உரையாடல் பெண்ணியம் என்கிற இடத்தை இன்று அடைந்திருக்கிறது.

பெண்ணியம் என்பது என்ன?

பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண்ணின் விருப்பங்கள், பெண்ணுக்கான வாழ்க்கை, பெண்ணுக்கான உடல், பெண்ணுக்கான எழுத்து, பெண்ணுக்கான காமம் என பெண் சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கிய கோரலைத்தான் பொதுவாக பெண்ணியம் என்பதாக விளக்குகிறார்கள்.

அதே சமயம் பெண்ணியம் சார்ந்து பல விமர்சனங்களும் முன் வைக்கப்படுகிறது. பெண்ணியத்தை எப்படி புரிந்து கொள்வது?

அது என்ன கார்ப்பரேட் பெண்ணியம் ? பெரியாரிய, கம்யூனிஸ பெண்ணியத்துக்கும் அதற்கும் உள்ள வேறுபாடு என்ன ?

பெண்ணியத்தில் இருவகை உண்டு. பெரியாரியம், கம்யூனிஸம் போன்று சமூகநோக்கு உள்ள பெண்ணியம், கார்ப்பரெட் பெண்ணியம். முதலாவது ஆணை நிராகரிக்காது. ஆணுக்கு புரிதலை உருவாக்க முனையும். இரண்டாவது ஆணை நிராகரிக்கும். ஆணே தேவையில்லை என வாதிடும்.

‍‍‍‍இரண்டாம் வகைதான் அதிகம் பரவியிருக்கிறது. ஏனெனில் அதனுடன் வேலை, தொழில், சம்பளம் என பல லாபங்கள் தொக்கி நிற்கின்றன. இந்த வகைதான் ஆணை, காதலை, குடும்ப பொறுப்பை என எல்லாவற்றையும் நிராகரிக்க வைக்கும். முதல் வகை சமூக சீர்திருத்தம். சமூக சீர்திருத்தத்தை யார் விரும்ப போகிறார்கள்? அதில் தம்படி காசுக்கு பிரயோஜனம் கிடையாது இல்லையா?

‍‍‍‍‍‍ ‍‍ஆணாதிக்க பிரச்சினைகள் பலவுக்கும் பெரியார் மருந்தாக சொல்வது காதலைத்தான். காதலித்தால் சாதி ஒழியும். தான் காதலித்த பெண்ணை காயப்படுத்த தோன்றாது. அவளுக்கான இடத்தை கொடுக்க வைக்கும். ஆணுக்கு புரிதலை ஏற்படுத்தும் இடம் அது என அவர் புரிந்திருந்தார். மகள் விருப்பத்துக்கு ஏற்று கொள்ளும் அப்பா, அம்மா என எல்லாருமே மனம் மாறும் சூழல் கொண்டது அது.

அது என்ன கார்ப்பரேட் பெண்ணியம் ? பெரியாரிய, கம்யூனிஸ பெண்ணியத்துக்கும் அதற்கும் உள்ள வேறுபாடு என்ன ?

கார்ப்பரெட் பெமினிஸம் அப்படி அல்ல. அது காதலையே புறக்கணிப்பது. ஏனெனில் காதலை புறக்கணித்தால்தான் பெண்ணை இன்னும் அதிகம் வேலைவாங்க முடியும். நுகர்வுக்கு அடிமையாக்க முடியும். பெண்களை கொண்டு ஆணை ஒடுக்கி விட்டால், கார்ப்பரெட்டுக்கு ஒரு வேலை குறையும்தானே! நிலப்பிரபுத்துவம் ஆணை கொண்டு பெண்ணை என்ன செய்ததோ அதையே இன்று கார்ப்பரேட், பெண்ணை கொண்டு ஆணை செய்கிறது. அதனால் ஆண் ஒடுக்கப்படுகிறான், உறவு சிக்கலாகிறது என்ற பிரச்சினைகளெல்லாம் கார்ப்பரெட்டுக்கு பிரச்சினையே அல்ல.

‍‍‍‍‍‍ ‍‍'நீ கேட்கும் போதெல்லாம் ஐ லவ் யூ நான் சொல்ல மாட்டேன். நான் சொல்லும்போதுதான் நீ கேட்க வேண்டும்' என்பதுதான் கார்ப்பரெட் பெண்ணியம். இருவர் சம்பந்தப்பட்ட காதலுணர்வில் கூட ஒரு தரப்பை நிராகரித்து 'நான்' தான் முக்கியம் என பேச வைக்கும். நான் முடிவு செய்வதுதான் காதல் என சொல்லி தரும்.

சாதி, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை அழிக்க விழையும் சமூகநோக்கு பெண்ணியம் ஆக்கத்துக்கானது. 'நான்', 'நான் மட்டும்தான் என் காதல்' என பெண்ணை நினைக்க வைக்கும் கார்ப்பரெட் பெண்ணியம் அழிவுக்கானது.

banner

Related Stories

Related Stories