உணர்வோசை

Imagined Reality என்னும் கற்பனை யதார்த்தம்.. மனித வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

பின் நவீனத்துவம் பேசப்படும் காலத்தில் இந்தக் கூட்டுக் கற்பனை தேவைதானா? இல்லைதான். என்றுமே அவற்றுக்கான தேவை இருந்ததில்லைதான்.

Imagined Reality என்னும் கற்பனை யதார்த்தம்.. மனித வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Imagined Reality என்ற சொல்லாடலை Sapiens புத்தகத்தில் எழுத்தாளர் பயன்படுத்தி இருப்பார். கற்பனை செய்யப்பட்ட யதார்த்தம் என மொழி பெயர்க்கலாம்.

நம் பேச்சை அதிகபட்சம் எத்தனை பேர் கேட்பார்கள்? நம் மீது கொண்டுள்ள மதிப்பாலோ நேசத்தாலோ பயத்தாலோ என்றாலும் எத்தனை பேர் நம் சொல்படி நடப்பார்கள்? ஐந்து பேர், பத்து பேர், அதிகபட்சம் ஒரு ஐம்பது பேர்? அதற்கு மேல் எண்ணிக்கை போகுமானால், நம் பேச்சில் வித்தியாசம் கொள்ளும் கருத்துகள் உருவாகும். விமர்சனம் தோன்றும். எதிர் கருத்து உருவாக்கப்படும். கூட்டு உடையும்.

Imagined Reality என்னும் கற்பனை யதார்த்தம்.. மனித வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

ஒரு டீம் லீடராக கூட இருந்து பாருங்களேன். 20 பேரை கொண்ட டீமிலேயே உங்கள் நடவடிக்கைகளில் மாற்று கருத்து கொண்டவர்கள் இருப்பார்கள். இந்த மாற்று கருத்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆனால், நீங்கள் டீம் லீடராக இருக்க மாட்டீர்கள். அப்படித்தான், எந்த தலைமையாக இருந்தாலும் மிக அதிகபட்சமாக ஒரு நூற்று நூற்றைம்பது பேரை மட்டும்தான் அதன் பேச்சுக்கு கட்டுப்படுத்த முடியும். அதற்கே அது மிக வலிமையான தலைமையாக இருக்க வேண்டும். அதற்கு மேல், எண்ணிக்கை வளர்ந்தால், தலைமை கண்டிப்பாக நீடிக்க முடியாது. வேறொரு தலைமை அந்த இடத்துக்கு வந்து சேரும்.

இந்த நூற்று நூற்றைம்பது பேருக்கு மேலான எண்ணிக்கையை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் imagined reality என்னும் கற்பனை யதார்த்தம்.

Imagined Reality என்னும் கற்பனை யதார்த்தம்.. மனித வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

நீங்கள் ஒரு நோக்கியா ஃபோன் வாங்குகிறீர்கள். அது நோக்கியாதான் என நம்புகிறீர்கள். நோக்கியா என்னும் brandதான் கூட்டு கற்பனை. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு ஹேண்ட்செட்டிலும் இருக்கும் நோக்கியா என்னும் முத்திரை அந்த கூட்டுக் கற்பனையை வலுப்படுத்தவே. ஆனால் உண்மையில் நீங்கள் வாங்கும் நோக்கியாவின் உதிரிபாகங்கள் எல்லாம் உங்கள் ஊரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டதாக இருக்கும். நோக்கியா முதன்முதலில் உருவாக்கப்பட்ட இடத்தில் இருந்த பொருட்களை கொண்டு இருக்காது. முதன் முதலில் உருவாக்கப்பட்ட ஹேண்ட்செட்டுடன் இன்று நாம் வாங்கும் ஹேண்ட் செட்டை இணைப்பதற்குத்தான் நோக்கியா என்னும் கூட்டு கற்பனை.

Imagined Reality என்னும் கற்பனை யதார்த்தம்.. மனித வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

இப்படியான கற்பனைகளை உன்னத பொய் (Noble Lie) என வரலாற்றில் பதியப்படுகிறது. இத்தகைய பொய்கள்தான் அதிகாரத் தலைமையை ஏற்று பெருவாரியான மக்கள் திரளை செயல்பட வைக்கும் என்பார் பிளாட்டோ. தத்துவ ஆசிரியர்களுக்கு இந்த பொய் பற்றிய உண்மை தெரியும். மதம், குடும்பம், இனம், நாடு, நாட்டு பற்று என இவ்வகைப் பொய்கள் பல உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இன்னும் உருவாக்கப்படுகின்றன.

உங்களையும் என்னையும் இணைக்க ஏதோ ஒரு கற்பனை யதார்த்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு கற்பனை யதார்த்தத்துக்கும் பின் ஒரு அரசியல் இருக்கிறது. எல்லா கற்பனை யதார்த்தங்களும் தவறு என சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலான கற்பனை யதார்த்தங்கள் தவறு என சொல்ல முடியும். சோகம் என்னவெனில் தவறான (மக்கள்விரோத) கற்பனை யதார்த்தங்களில் இருந்து உங்களை காப்பாற்றக் கூட இன்னொரு கற்பனை யதார்த்தமே தேவைப்படும் என்பதுதான்.

Imagined Reality என்னும் கற்பனை யதார்த்தம்.. மனித வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

பின் நவீனத்துவம் பேசப்படும் காலத்தில் இந்தக் கூட்டுக் கற்பனை தேவைதானா? இல்லைதான். என்றுமே அவற்றுக்கான தேவை இருந்ததில்லைதான். ஏனெனில் கூட்டுக் கற்பனையை உருவாக்க நிர்ப்பந்திக்கும் அதிகாரமே தேவையற்ற ஒன்றுதானே! ஆனால், கூட்டுக் கற்பனை இல்லாமல் அனைவரும் உதிரிகளாகி விட்டாலும் சிரமமே. ஏனெனில் மனிதனின் பரிணாமமே சமூகம்தான். சமூகத்தின் அடிப்படை கூட்டு. அந்த பெருங்கூட்டை விட்டு குறுங்குழு போல் குறுங்கூட்டை மனிதன் உருவாக்க தொடங்கிய பின் தான் இத்தனை கூட்டு கற்பனைகளும். இத்தனைப் பிரச்சினைகளும்.

மனிதம் என்ற பெருங்கூட்டு கற்பனையை மறந்து குறுங்கூட்டு கற்பனைகளில் ஒருவரையொருவர் கொன்று திரிகிறோம். அந்த பெருங்கூட்டை அடையவே இந்த குறுங்கூட்டு கற்பனைகளை நாம் உடைத்தல் வேண்டும். அதே நேரம் உதிரிகளாகி விடவும் கூடாது. அதிகாரத்தை, இல்லாமல் ஆக்க முடியாததெனினும் பரவலாக்கவாவது செய்ய வேண்டும். அப்படி ஒரு கற்பனை யதார்த்தம் உருவாக்கப்படுதல் வேண்டும்.

banner

Related Stories

Related Stories