உணர்வோசை

உலகப் புகழ்பெற்ற வைரத்துக்குப் பின்னே ரத்தமும், கொலையும்... வைரத்தின் ஜொலிப்பில் மங்கிய உண்மை!

வறுமை, தீவிரவாதம், வன்முறை, கடத்தல், போர், ஆயுதங்கள், ரத்தம்! ஆனால் அவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான இன்னொரு விஷயமும் ஆப்பிரிக்காவில் இருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற வைரத்துக்குப் பின்னே ரத்தமும், கொலையும்... வைரத்தின் ஜொலிப்பில் மங்கிய உண்மை!
Lynsey Addario
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

வைரங்கள் அழகு மிக்கவை. அவை கொண்டிருக்கும் வெட்டுகளும் கூர்மையும் மனம் பறிப்பவை. உள்ளே புதைந்திருக்கும் ஒளியும் அதன் பிரதிபலிப்பும் காணத் திகட்டாதவை. காலந்தோறும் வைரங்கள் வரலாற்றிலும் பல செய்திகளுக்கு பின்புலமாக இருந்து வந்திருக்கின்றன. ஆங்கிலக் காலனியாதிக்கத்தின் மணி மகுடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் இன்றுமே இந்தியாவுக்கு ஒரு கவுரவப் பிரச்சினை. உலக வரலாற்றிலும் வணிகத்திலும் நம் வாழ்க்கைகளிலும் உயரிய இடத்தை பிடித்திருக்கும் வைரம் எப்படி நம்மை வந்தடைகிறது தெரியுமா?

உதாரணமாக உலகப்புகழ் பெற்ற ஒரு வைரத்தின் பெயர் Millennium Star. மனதை ஈர்க்கும் அந்த வைரத்தை 1999ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் டி பியர்ஸ் என்கிற வைர நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

De Beers-ன் அதிகாரப்பூர்வ தகவல்படி, மூல வடிவத்திலிருந்து Millennium Star வைரத்தை உருவாக்க மூன்று வருடங்கள் ஆகியிருக்கிறது. வைரத்தின் மூலக்கல்லை பெல்ஜியத்துக்கு கொண்டு சென்று வெட்டியிருக்கிறார்கள். பிறகு அது தென்னாப்பிரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு மெருகேற்றப்பட்டது. வைரத்துக்கான முழுமையை கொடுக்கும் வேலைகள் நியூயார்க்கில் செய்யப்பட்டன. இறுதிக்கட்ட வடிவத்தில் வைரத்தின் எடை 203 கேரட்டுகள். நிறமற்ற பெரிய வைரங்களில் உலகிலேயே இரண்டாவது பெரிய வைரம் Millennium Star.

டி பியர்ஸ்ஸின் பெருமைக்குரிய சேகரிப்பாக இருக்கும் Millennium star வைரம் கண்டெடுக்கப்பட்டது ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில்.

ஆப்பிரிக்கா என்றதும் உங்களின் ஞாபகத்துக்கு என்ன வருகிறது?

வறுமை, தீவிரவாதம், வன்முறை, கடத்தல், போர், ஆயுதங்கள், ரத்தம்! ஆனால் அவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான இன்னொரு விஷயமும் ஆப்பிரிக்காவில் இருக்கிறது. வைரம்!

உலகச் சந்தையில் விற்கப்படும் 65 சதவிகித வைரங்களுக்கு பூர்விகம் ஆப்பிரிக்க கண்டம். சியரோ லியோன் நாட்டின் போராளிக் குழுக்கள், அங்கோலா மற்றும் காங்கோ நாடுகளின் உள்நாட்டு கலவரங்கள் ஆகியவையே வைரங்கள் நம்மை வந்து சேரும் பாதைகள். கற்பனைக்கும் எட்டாத அளவு ரத்தத்தில் முகிழ்த்து எடுக்கப்பட்டே வைரங்கள் நம் கைகளைச் சேருகின்றன.

உலகப் புகழ்பெற்ற வைரத்துக்குப் பின்னே ரத்தமும், கொலையும்... வைரத்தின் ஜொலிப்பில் மங்கிய உண்மை!

உறவின் மேன்மையை, அன்பை, காதலை அடையாளப்படுத்துவதாக கருதப்படும் வைரங்கள் மதிப்பு வாய்ந்த வழிகளில் பெறப்படுவதில்லை. மனித உறவை உதாசீனப்படுத்தியே வைரங்கள் சந்தைக்கு வருகின்றன. மனித நேயத்தை அழித்தே வைரங்கள் விற்கப்படுகின்றன. நாம் கண்டிராத மக்களின் வாழ்க்கைகள் வைரங்களில் புதைக்கப்பட்டிருக்கின்றன. பல இனங்களின் வேர்கள் வைரங்களால் அறுக்கப்பட்டிருக்கின்றன. நாம் பயன்படுத்தும் வைரங்கள் பெரும்பாலானவற்றில் மக்களின் ரத்தம் கலந்திருக்கிறது. அத்தகைய வைரங்களுக்கு உலகம் கொடுத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

Blood Diamonds! ரத்த வைரங்கள்!

Millennium Star வைரம் அறிமுகப்படுத்தப்பட்டதும் பல பத்திரிகைகள் அச்செய்தியை வெளியிட்டன. பல பிரபலங்கள் வைரத்தை அணிந்து புகைப்படம் எடுத்தனர். அந்தப் புகைப்படங்களை ஊடகங்கள் ஊர்தோறும் கொண்டு சென்று சேர்த்தன. 99ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் காலத்தை Millennium Star வைரம் தனக்கானதாக மாற்றியது. Millennium Star-ன் விலை என்ன தெரியுமா? 270 கோடிகள்!

Millennium Star படத்தை தாங்கியிருந்த எல்லாப் பத்திரிகைகளிளும் வைரத்தைப் பற்றி ஒரே செய்தியே வெளியிடப்பட்டிருந்தது. ’1990ல் கண்டெடுக்கப்பட்ட வைரம், டி பியர்ஸ் நிறுவனத்தால் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டது’, ’ஆறு மாதங்கள் நிறுவனத்தின் வல்லுனர்கள் வைரத்தை ஆய்வு செய்தனர்’ போன்ற செய்திகள்.

இதில் எங்கு ரத்தம் இருக்கிறது?

வைரத்தை தேடுவதையே பிழைப்பாக வைத்திருக்கும் பலர் காங்கோவில் இருக்கின்றனர். வெவ்வேறு இடங்களில் தோண்டிப் பார்ப்பார்கள். பலர் தங்களின் விருப்பத்தின் பேரில் தோண்டுவார்கள். அப்படி தேடிய இருவருக்கு Millennium Star வைரம் கிடைத்திருக்கிறது. அவர்கள் Mbuji Maya மாவட்டத்துக்கு சென்றிருக்கிறார்கள். Mbuji Maya மாவட்டத்தில்தான் கள்ளச் சந்தை தரகர்கள் இருக்கிறார்கள். தங்கள் நாட்டில் கிடைக்கும் வைரங்களை உலக நாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசி விற்பவர்கள் அவர்கள். பெரும்பாலும் அவர்கள் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளாக இருப்பார்கள்.

அவர்களில் ஒருவரின் உதவியை இருவரும் நாடியிருக்கின்றனர். முதற்பார்வையிலேயே வைரத்தின் மதிப்பை உணர்ந்திருக்கிறார். வைரம் கொண்டு வந்த இருவரையும் அழைத்துக் கொண்டு நேராக டி பியர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார். அலுவலக மேலாளர் வைரத்தை பார்த்ததும் மிரண்டு போயிருக்கிறார். அத்தனை பெரிய வைரத்தை அதற்கு முன் அவர் பார்த்திருக்கவில்லை. பேரம் பேசப்பட்டது. 42 கோடி ரூபாய்க்கு வைரம் விற்கப்பட்டது.

42 கோடி ரூபாயும் ரொக்கமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிரச்சினை அதோடு நிற்கவில்லை. வைரம் கண்டெடுக்கப்பட்ட ஊரின் சுரங்க உரிமையாளருக்கு எந்தப் பங்கும் கொடுக்கப்படவில்லை. வைரத்தை விற்ற இரண்டு பேரும் போராளிக் குழுக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து Millennium Star கண்டெடுக்கப்பட்ட பின்னணியில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர், தாக்கப்பட்டனர் என்பதைப் பற்றிய தகவல் எதையும் டி பியர்ஸ் வெளியிடவேயில்லை.

காங்கோ மற்றும் அங்கோலா மட்டுமென இல்லை. ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் உள்நாட்டுப் போர்களை அமெரிக்கா தக்க வைக்கும் வழியே ரத்த வைரங்கள்.

பன்னாட்டு ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் பல ரத்த வைரங்களுக்குப் பின்னான அரசியலை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன.

ஆனாலும் வைரத்தின் ஜொலிப்பில் ரத்த சாயல் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories