முரசொலி தலையங்கம்

முதலீடுகளின் முதல்வரே வருக! வருக!!: முதலீடுகளை ஈர்த்து சென்னை திரும்பிய முதலமைச்சருக்கு முரசொலி வரவேற்பு!

‘முதலீடுகளின் முதல்வரே வருக! வருக!!' என்று தமிழ்நாடு வரவேற்கிறது! என முதலமைச்சருக்கு முரசொலி வரவேற்பு!

முதலீடுகளின் முதல்வரே வருக! வருக!!: முதலீடுகளை ஈர்த்து சென்னை திரும்பிய முதலமைச்சருக்கு முரசொலி வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாகக் கொண்டு செலுத்திவரும் 'திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'முதலீடுகளிலும் முதல்வரே' என்ற பெருமையோடு அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலையில் தமிழ்நாடு திரும்பு கிறார்கள்!

‘முதலீடுகளின் முதல்வரே வருக! வருக!!' என்று தமிழ்நாடு வரவேற்கிறது!

தினந்தோறும் புதிய புதிய திட்டங்கள் தீட்டி தமிழ்நாட்டின் ஒவ்வொரு விடியலையும் மறக்க முடியாத விடியலாக மாற்றிக் கொண்டிருப்பவர் முதலமைச்சர் அவர்கள். வாக்களித்தவர்க்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்து முதலமைச்சராகச் செயல்படுபவர் மட்டுமல்ல, 'தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதனின் கவலையையும் தீர்க்கும் அரசாக எனது அரசு இருக்கும்' என்று சொல்லிச் செயல்பட்டு வருபவர் நம்முடைய முதலமைச்சர். அதனால்தான், அவரது ஒவ்வொரு அசைவையும் அடுத்தடுத்த மாநிலங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

முதலீடுகளின் முதல்வரே வருக! வருக!!: முதலீடுகளை ஈர்த்து சென்னை திரும்பிய முதலமைச்சருக்கு முரசொலி வரவேற்பு!

வளர்ச்சிப் பாதையில் செல்லும் தமிழ்நாட்டைப் பின்பற்றி மற்ற மாநிலங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம். மற்ற மாநிலங்களில் இருந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் இங்கு வந்து திட்டப்பணிகளைப் பார்த்துச் செல்லும் காட்சிகளைக் கண்டு வருகிறோம். அந்த வகையில் தமிழ்நாட்டை முன்னேற்றும், இந்தியாவுக்கு முன்மாதிரியான ஆட்சியைக் கொடுத்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒன்றிய அரசு கணிக்கும் அத்தனை வளர்ச்சிக் குறியீடுகளிலும் ஒருசேர முன்னணி மாநிலமாகத் தமிழ்நாட்டை நிலைநிறுத்திக் காட்டுவது என்பது சாதாரணச் செயல் அல்ல. அசாத்தியமானவர்களால் செய்யப்படும், மாபெரும் செயல் ஆகும். அந்த வரிசையில் தொழில்துறை வளர்ச்சியானது, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை கொண்டு செலுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த மூன்றாண்டு காலத்தில் மட்டும் இதுவரை 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மொத்த மதிப்பு 9 லட்சத்து 99 ஆயிரத்து 93 கோடி ரூபாய் ஆகும். இவற்றின் மூலமாக 18 லட்சத்து 89 ஆயிரத்து 234 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 234 திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டது. 4 லட்சத்து 16 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டது.

மற்ற ஒப்பந்தங்களும் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாகத்தான் அமெரிக்கப் பயணத்தை கடந்த மாதம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மேற்கொண்டார் முதலமைச்சர்.

முதலீடுகளின் முதல்வரே வருக! வருக!!: முதலீடுகளை ஈர்த்து சென்னை திரும்பிய முதலமைச்சருக்கு முரசொலி வரவேற்பு!

உலகப் புகழ் பெற்ற 25 முன்னணி நிறுவனங்களோடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் 19 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. இதுவல்லவா மகத்தான சாதனை! உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களை 'ஃபார்ச்சூன் 500' என்று வகைப்படுத்துவார்கள். அதாவது உலகில் உள்ள 500 மிகப்பெரிய நிறுவனங்களின் தர வரிசைப்பட்டியல் அது. அதில் இருக்கும் 19 நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்த்து வருகிறார் முதலமைச்சர்.

சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் நடத்தப்பட்ட சந்திப்புகளின் பலனாக, 7,616 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 11,516 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் முதலமைச்சரின் சாதனை அமைந்துள்ளது.

ஜாபில் நிறுவனம் திருச்சி மாவட்டத்திலும், இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் மதுரை மாவட்டத்திலும், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் தங்கள் திட்டங்களை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்மேற்கொண்டுள்ளது.

உலகின் முன்னணி நிறுவனங்களாக விளங்கும் கூகுள், மைக்ரோசிப், பேபால், நோக்கியா, கேட்டர்பில்லர், அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஈட்டன், அஷ்யூரன்ஸ், ராக்வெல் போன்ற நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் 'நான் முதல்வன்' திட்டத்துக்கு உதவ இருக்கிறது.

காலணிப் பொருட்கள் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான 'நைக்' நிறுவனம், புகழ்பெற்ற நிறுவனங்களான ஆப்பிள், லிங்க்ட்இன் ஆகிய நிறுவன அதிபர்களை தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். ஆட்டோடெஸ்க் நிறுவனம், நமது சிறுகுறு நிறுவன வளர்ச்சிக்கு உதவ உள்ளது.

முதலீடுகளின் முதல்வரே வருக! வருக!!: முதலீடுகளை ஈர்த்து சென்னை திரும்பிய முதலமைச்சருக்கு முரசொலி வரவேற்பு!

அந்த வகையில் உலக முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. உயர்த்திக் காட்டி விட்டார் முதலமைச்சர்.

இத்தனை நிறுவனங்கள் வருகின்றன என்றால், இவை அனைத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து வருகின்றன. முந்தைய ஆட்சியில், இங்கு தொழில் தொடங்க வந்தவர்கள், வந்த வேகத்தில் பக்கத்து மாநிலத்துக்குப் போனார்கள். இப்போது பக்கத்து மாநிலத்தில் தொழில் தொடங்க நினைத்தவர்கள், தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். அதுதான் இதில் இருந்து உணர வேண்டிய முதல் செய்தி ஆகும்.

இந்நிறுவனங்களின் மூலமாக தமிழ்நாடு வளர்கிறது என்பது இரண்டாவது செய்தி.

இந்நிறுவனங்களின் மூலமாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுகிறது என்பது மூன்றாவது செய்தி.

திராவிட ‘முன்னேற்றக்' கழகம் என்ற சொல்லில் இருக்கும் முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டாக 'திராவிட மாடல்' ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, வருக! வருக!! வருகவே!!!

- முரசொலி தலையங்கம்!

banner

Related Stories

Related Stories