முரசொலி தலையங்கம்

”அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு இதனை உணரும் நோக்கம் இருக்காது” : முரசொலி பதிலடி!

20 ஆயிரம் புக் அண்ணாமலை, ‘20 மார்க்’ அண்ணாமலையைப் போல பேசுகிறார்.

”அண்ணாமலை போன்ற 
தற்குறிகளுக்கு இதனை உணரும் நோக்கம் இருக்காது” :  முரசொலி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (22-07-2024)

இந்தியாவும் தமிழ்நாடும் குஜராத்தும்!

தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு இருந்தது. இதனை தமிழ்நாடு பா.ஜ.க. அண்ணாமலையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நிதி ஆயோக் அறிக்கைப் படி தமிழ்நாடு பின் தங்கி இருக்கிறது என்று வாய்க்கு வந்தபடி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

ஆய்வு நோக்கமோ, அரசியல் ஞானமோ இருக்குமானால் ‘தி இந்து’ வெளியிட்ட அறிக்கையின் புள்ளிவிபரங்களை எடுத்து வைத்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். தலையை மீறிய தற்குறித்தனம் இருப்பதால் அது அவருக்குள் நுழையாது. வழக்கம் போல தனது அவதூறு பாணியைக் கையில் எடுத்துள்ளார்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தி.மு.க. நாளிதழா? இல்லை. அவர்களும் குத்துமதிப்பாக அதனைச் சொல்லவில்லை. ‘நிதி ஆயோக்’ அறிக்கையை வைத்துத்தான் அந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார்கள். அனைத்து மனித வளக் குறியீட்டிலும் அகில இந்திய சராசரி எவ்வளவோ, அதைவிடக் கூடுதலாக தமிழ்நாடு இருக்கிறது என்பதுதான் ‘தி இந்து’ கட்டுரையின் உள்ளடக்கம் ஆகும்.

* வறுமையின்மையில் இந்திய விழுக்காடு 72 ஆக இருக்கும் போது தமிழ்நாடு 92 ஆக இருக்கிறது.

* பட்டினி ஒழிப்பில் இந்திய விழுக்காடு 52 ஆக இருக்கும் போது தமிழ்நாடு 75 ஆக இருக்கிறது.

* தரமான கல்வியை வழங்குவதில் இந்திய விழுக்காடு 61 ஆக இருக்கும் போது தமிழ்நாடு 76 ஆக இருக்கிறது.

* பாலின சமத்துவத்தில் இந்திய விழுக்காடு 49 ஆக இருக்கும் போது தமிழ்நாடு 53 ஆக இருக்கிறது.

* தூய்மையான குடிநீர் வழங்குவதில் இந்திய விழுக்காடு 89 ஆக இருக்கும் போது தமிழ்நாடு 90 ஆக இருக்கிறது.

* குறைந்த விலை, சுத்தமான ஆற்றல் குறியீட்டில் இந்தியா 68 ஆக இருக்கும் போது தமிழ்நாடு 100 ஆக இருக்கிறது.

* வேலைவாய்ப்பு, பொருளாதாரக் குறியீட்டில் இந்திய விழுக்காடு 68 ஆக இருக்கும் போது தமிழ்நாடு 81 ஆக இருக்கிறது.

* தொழில், உட்கட்டமைப்பில் இந்திய விழுக்காடு 61 ஆக இருக்கும் போது தமிழ்நாடு 67 ஆக இருக்கிறது.

* சமவாய்ப்பின்மை குறைப்பில் இந்திய விழுக்காடு 65 ஆக இருக்கும் போது தமிழ்நாடு 76 ஆக இருக்கிறது.

* காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் இந்திய விழுக்காடு 67 ஆக இருக்கும் போது தமிழ்நாடு 81 ஆக இருக்கிறது.

* அமைதி, நீதித்துறை செயல்பாட்டில் இந்திய விழுக்காடு 74 ஆக இருக்கும் போது தமிழ்நாடு 78 ஆக இருக்கிறது.

* மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, உடல்நலத்தில் இந்திய விழுக்காடும், தமிழ்நாடு விழுக்காடும் ஒரே மாதிரி 77 ஆக இருக்கிறது.

* பொறுப்பான நுகர்வு, உற்பத்தியிலும் இரண்டும் ஒரே மாதிரி 78 ஆக இருக்கிறது.

இவை அனைத்தும் ஒன்றிய நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள 2023-24 ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண்கள் ஆகும். இதில் அண்ணாமலை என்ன குறை கண்டார்? இது நிதி ஆயோக் அறிக்கை இல்லை என்று மறுக்கிறாரா?

”அண்ணாமலை போன்ற 
தற்குறிகளுக்கு இதனை உணரும் நோக்கம் இருக்காது” :  முரசொலி பதிலடி!

இதில் உத்தரகாண்ட் மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கேரளா இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. 100க்கு 78 புள்ளிகளை தமிழ்நாடு பெற்றுள்ளது.

தரவரிசையில் மொத்த மதிப்பெண்ணில் முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என்றுதான் சொல்வார்கள். அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் 20 ஆயிரம் புக் அண்ணாமலை, ‘20 மார்க்’ அண்ணாமலையைப் போல பேசுகிறார்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது தமிழ்நாடு என்பது முதல் பெருமை. அகில இந்திய வளர்ச்சிக் குறியீடுகளை விட தமிழ்நாடு அதிகம் பெற்றுள்ளது என்பது இரண்டாவது பெருமை. இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

‘தி இந்து’ செய்தியைப் பார்த்து தன் அடிவயிற்றில் அடித்துக் கொள்ளும் அண்ணாமலை, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரையைப் பார்த்தாரா எனத் தெரியவில்லை.

மாட்சிமை தாங்கிய நரேந்திர மோடியின் இந்தியாவில் 50 விழுக்காடு மக்களுக்குத்தான் மூன்று வேளையும் உணவு கிடைக்கிறது என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. 21 மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க.வின் கோட்டையாக இருக்கும், நரேந்திர மோடியால் 13 ஆண்டுகள் ஆளப்பட்ட குஜராத் மாநிலத்தில் 31 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கிறது என்கிறது அந்த அறிக்கை. இதே நிலைமையில்தான் பா.ஜ.க.வின் ஆளுகைக்கு உட்பட்ட ராஜஸ்தான் மாநிலமும் இருக்கிறது. 25 கோடிப் பேரை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக பா.ஜ.க. அரசு தம்பட்டம் அடிக்கும் நிலையில்தான் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் கடைசி இடத்தில் உள்ளது. பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் கடைசி 5 இடத்தில் உள்ளன.

‘திராவிட மாடல்’ ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டிலும் ‘கம்யூனிஸ்ட்’ மாடல் ஆட்சி நடக்கும் கேரளாவிலும் 98 விழுக்காடு மக்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது அந்தக் கட்டுரையில். தற்குறிகளுக்கு இதனை உணரும் நோக்கம் இருக்காது, இருக்காது.

banner

Related Stories

Related Stories