முரசொலி தலையங்கம்

”முறை­கே­டு­களை மறைக்­க காவி வகுப்­பு­களை நடத்தி கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி” : முரசொலி கடும் தாக்கு!

தமிழ்­நாட்­டின் பல்­க­லைக் கழ­கங்­களை கடந்த இரண்டு ஆண்டு கால­மாக நாசம் செய்து கொண்­டி­ருக்­கி­றார் ஆளு­நர் ரவி.

”முறை­கே­டு­களை மறைக்­க காவி வகுப்­பு­களை நடத்தி  கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி” : முரசொலி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (03-07-024)

முறை­கே­டு­களை மறைக்­கவே காவிப் பேச்­சு­கள்!

குற்ற வழக்­கு­கள் உள்ள சேலம் பெரி­யார் பல்­க­லைக் கழ­கத் துணை­வேந்­தர் ஜெக­நா­த­னுக்கு பதவி நீட்­டிப்பு வழங்­கி­ய­தன் மூல­மாக தமிழ்­நாடு ஆளு­நர் ஆர்.என்.ரவி­யின் தரம் என்ன என்பது வெட்ட வெளிச்­சம் ஆகி இருக்­கி­றது.

எட்டு பிரி­வு­க­ளின் கீழ் குற்ற வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ள­வர் ஜெக­நா­தன். அரசு செய­லர் விசா­ரணை அறிக்­கை­யில் குற்றச்சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட்­ட­வர் ஜெக­நா­தன். அவ­ருக்கு ஓராண்டு பணி நீட்­டிப்பை வழங்கி இருக்­கி­றார் நித்­த­மும் ‘நல்லொ­ழுக்க வகுப்பு’ நடத்தி வரும் ஆளு­நர் ஆர்.என்.ரவி.

போலி ஆவ­ணங்­க­ளைத் தயா­ரித்து தனி­யார் நிறு­வ­னங்­க­ளு­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொண்­ட­தா­க­வும், அரசு அலுவலர்­களை தனது தனிப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு பயன்படுத்தி­ய­தா­க­வும் சேலம் பெரி­யார் பல்­க­லைக் கழக தொழிலா­ளர் சங்­கத்­தின் சட்ட ஆலோ­ச­கர் இளங்­கோ­வன் காவல் துறை­யில் துணை­வேந்­தர் ஜெக­நா­தன் மீது புகார் கொடுத்­தார்.

பணிக்­கா­லத்­தில் இவரே ஒரு அமைப்­பைத் தொடங்­கி­யும் இருக்கி­றார். அந்த அமைப்பை வைத்து பல்­க­லைக் கழ­கப் பணிகளை பார்த்து, முறை­கே­டு­ க­ளைச் செய்­துள்­ளார். இதன் மூல­மாக பல்­க­லைக் கழக நிதியை தனது லாபத்­துக்கு பயன்படுத்தி இருக்­கி­றார் என குற்­றச்­சாட்டு எழுந்­தது. இதன்­படி சேலம் கருப்­பூர் காவல் துறை­யால் கைது செய்­யப்­பட்­ட­வர் தான் ஜெக­நா­தன். முறை­கேடு வழக்கு மட்­டு­மல்ல, வன்­கொ­டுமை தடுப்பு சட்ட வழக்­கும் அவர் மீது இருக்­கி­றது. 8 பிரி­வு­க­ளின் கீழ் கைது செய்­யப்­பட்ட அவர் ஜாமீ­னில் தான் வெளி­யில் நட­மாடி வரு­கி­றாரே தவிர, விடு­தலை ஆகி­வி­ட­வில்லை. சூர­மங்­க­லம் காவல் நிலை­யத்­தில் தின­மும் கையெ­ழுத்து போட்­ட­வர் தான் இந்த ஜெக­நா­தன்.

பல்­க­லைக் கழக வளா­கத்­தில் காவல் துறை விசா­ரணை நடைபெற்­றுக் கொண்­டி­ருக்­கும் போதே அங்கு சென்­ற­வர் தான் ஆளு­நர் ரவி. சர்ச்­சைக்­கு­ரிய ஜெக­நா­தனை சந்­தித்து பேச்சுவார்த்தை­யும் நடத்­தி­னார் ஆளு­நர். அதா­வது, ‘ஜெகநாதனுக்கு நானே துணை’ என்­ப­தைப் போல இருந்­தது ஆளுந­ரின் நட­வ­டிக்­கை­கள். மூன்­றாண்டு பத­விக்­கா­லம் முடிந்த பிற­கா­வது அவரை அனுப்பி வைத்­தி­ருக்­க­வேண்­டும். முறைகேடுக­ளைச் செய்­ப­வர்­க­ளுக்கு உடந்­தை­யாக இருப்­பதை தைரி­ய­மாக இந்த நாட்­டுக்­குச் சொல்ல நினைக்­கி­றார் ஆளு­நர். ‘என்னை யார் கேள்வி கேட்க முடி­யும்?’ என்ற அதி­கா­ரத் தோரணை­யில் நடந்து கொள்­கி­றார் ஆளு­நர்.

துணை­வேந்­தர் ஜெக­நா­த­னின் மூன்­றாண்­டு­கால பத­விக் காலம் ஜூன் 30 ஆம் தேதி­யு­டன் முடிந்­து­விட்­டது. அடுத்து புதிய துணைவேந்­தரை, அதற்­கான குழு மூல­மாக தேர்ந்­தெ­டுக்க வேண்­டும். பல்­க­லைக் கழக ஆட்­சிக் குழு­வின் பிர­தி­நிதி ஒருவரும், ஆட்­சிப் பேர­வை­யின் பிர­தி­நிதி ஒரு­வ­ரும் தேர்வு

செய்­யப்­பட்டு ஆளு­ந­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட வேண்­டும். அக்கு­ழு­வின் அமைப்­பா­ள­ராக ஐ.ஏ.எஸ். அதி­காரி நிலை­யி­லான ஒரு­வர் பெயர் ஆளு­ந­ருக்கு அரசு சார்­பில் அனுப்பி வைக்­கப்­பட வேண்­டும். அந்த மூன்று பெயர்­கள் அடங்­கிய பட்­டி­யல் ஆளு­நர் மாளி­கை­யால் வெளி­யி­டப்­பட்டு அந்த அறி­விப்பு அர­சி­த­ழில் வெளி­யான பின்பு புதிய துணை­வேந்­தர் தேர்­வுக்­கான பணி­கள் தொடங்­கும்.

”முறை­கே­டு­களை மறைக்­க காவி வகுப்­பு­களை நடத்தி  கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி” : முரசொலி கடும் தாக்கு!

ஆட்­சிக்­குழு, ஆட்­சிப்­பே­ர­வை­யின் உறுப்­பி­னர்­க­ளான இரண்டு பேரின் பெயர், பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து ஆளு­நர் மாளிகைக்கு அனுப்பி வைக்­கப்­பட்டு 20 நாளைக்கு மேல் ஆகி­றது. குழு­வின் அமைப்­பா­ளர் பெயர் உயர்­கல்­வித்­து­றை­யில் இருந்து ஒரு மாதத்­திற்கு முன்பே ஆளு­நர் மாளி­கைக்கு அனுப்பி வைக்கப்பட்­டுள்­ளது. ஆனால் புதிய துணை­வேந்­தர் தேடு­தல்

தேர்­வுக் குழு­வுக்­கான அறி­விப்பை ஆளு­நர் மாளிகை வெளியிடவில்லை. ஏற்­க­னவே சர்ச்­சை­யில் சிக்­கிய ஜெகநாதனுக்கே பணி நீட்­டிப்பை வழங்கி இருக்­கி­றார் ஆளு­நர் ரவி.

ஜெக­நா­தன் மீது, நடத்­தப்­பட்ட விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை அர­சால் ஆளு­ந­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்டு பல மாதங்­கள் ஆகின்­றன. அதன் மீதும் ஆளு­நர் எவ்­வித மேல் நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. பெரி­யார் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பணி நிய­ம­னம், கணினி உப­க­ர­ணங்­கள்

கொள்­மு­தல், இணை­ய­தள தள­வா­டங்­கள் கொள்­மு­தல், இணையதள சேவை கட்­ட­மைப்­பு­கள் உரு­வாக்­கு­தல், பட்­டி­ய­லின மாண­வர்­க­ளின் திறன் மேம்­பாட்­டுக்கு ஒதுக்­கப்­பட்ட ரூ.2 கோடியில் முறை­கேடு, அமே­சான் இணைய முறை­கேடு, வளாக பரா­ம­ரிப்­பில் முறை­கேடு என எழுந்த புகார்­களை விசா­ரிக்க பழனிச்­சாமி ஐ.ஏ.எஸ். தலை­மை­யில் இரு நபர் குழு அமைக்கப்பட்­டது.

அந்த குழு, ஓராண்­டில் விரி­வான விசா­ரணை நடத்தி அர­சி­டம் அறிக்கை கொடுத்­தது. அதில், துணை­வேந்­தர் ஜெக­நா­தன் மீது 6 குற்­றச்­சாட்­டு­க­ளும், பதி­வா­ளர் தங்­க­வேல் மீது 8 குற்றச்சாட்டுகளும், தமிழ்த்­து­றைத்­ த­லை­வர் பெரி­ய­சாமி மீது 5 குற்­றச்­சாட்­டு­க­ளும் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லை­யில் கணினி அறி­வி­யல் பேரா­சி­ரி­ய­ரும், பதி­வா­ள­ரு­மான தங்­க­வேல் மீது 8 குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தால், அவரை உயர்­கல்­வித் துறை உட­ன­டி­யாக பணி­நீக்­கம் செய்­தது.

சேலம் கருப்­பூர் காவல்­நி­லை­யத்­தில் ஜெக­நா­தன் உள்­ளிட்­டோர் மீதான குற்ற வழக்கு விசா­ர­ணைக்கு நீதி­மன்­றத்­தால் தடை தான் விதிக்­கப்­ பட்­டுள்­ளது. வழக்கு ரத்து செய்­யப்­படவில்லை. அவர் மீதான ஜாமீன் ரத்து வழக்கு விசா­ர­ணை­யும் நீதி­மன்­றத்­தில் நிலுவை­யில் உள்­ளது. தீன­த­யாள் உபாத்­தி­யாயா பெய­ரி­லான நிதியை வைத்தே ஊழல் செய்­துள்­ளார்­கள். அதையே கண்டுகொள்­ள­வில்லை ஆளு­நர். பட்­டி­ய­லின மாண­வர்­கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்­கள். அதைப் பற்­றி­யும் கவலை இல்லை. ஜெக­நா­த­னுக்கு பணி­நீட்­டிப்பு வழங்கி இருப்­ப­தன் மூல­மாக யாரும் எதை­யும் செய்­ய­லாம் என்ற லைசென்ஸை ஆளு­நர் வழங்கி இருப்­ப­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

தமிழ்­நாட்­டின் பல்­க­லைக் கழ­கங்­களை கடந்த இரண்டு ஆண்டு கால­மாக நாசம் செய்து கொண்­டி­ருக்­கி­றார் ஆளு­நர் ரவி. இந்த தவ­று­க­ளை­யும் முறை­கே­டு­க­ளை­யும் மறைப்­ப­தற்­கா­கத் தான் காவி வகுப்­பு­களை நடத்தி திசை திருப்­பிக் கொண்­டி­ருக்­கி­றார்.

banner

Related Stories

Related Stories