முரசொலி தலையங்கம்

உயர்கல்விக்கான தடையை நீக்கும் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள்... - முரசொலி புகழாரம் !

ஓராண்டாக கல்லூரிக்குச் செல்லாத சில மாணவியர், புதுமைப் பெண் திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதன்பிறகு கல்லூரியில் சேர்ந்துள்ளதாகப் பேட்டி அளித்துள்ளார்கள்.

உயர்கல்விக்கான தடையை நீக்கும் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள்... - முரசொலி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

புதுமைப் பெண்ணும் தமிழ்ப் புதல்வனும்!

"அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவியருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தைப் போல, அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவர்க்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கப்படும்” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்கள்தான், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்கள் ஆகும். 'தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களை மட்டுமல்ல; சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது' என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வது இதுபோன்ற பல திட்டங்களை மனதில் வைத்துத்தான்.

‘புதுமைப் பெண்' திட்டமானது 05.09.2022 அன்று சென்னையில் பாரதி மகளிர் கல்லூரியில் துவங்கப்பட்டது. டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் வருகை தந்திருந்தார்கள். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வித் திட்டமாக இது தொடங்கி வைக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகத்தான திட்டம் இது. எந்த நோக்கத்துக்காக இது தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை முழுமையாக அடைந்துள்ளது இந்தத் திட்டம்.

உயர்கல்விக்கான தடையை நீக்கும் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள்... - முரசொலி புகழாரம் !

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டப்படி 4.81 லட்சம் மாணவிகள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். குடும்ப சூழல் காரணமாக பணம் செலவு செய்ய முடியாத நிலை சில மாணவியருக்கு இருந்திருக்கிறது. அரசாங்கமே ஆயிரம் ரூபாய் தருகிறது என்பதை தனது பெற்றோரிடம் சொல்லி அடம் பிடித்து இப்போது கல்லூரியில் பல மாணவியர் சேர்ந்துள்ளார்கள்.

ஓராண்டாக கல்லூரிக்குச் செல்லாத சில மாணவியர், இந்த திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதன்பிறகு கல்லூரியில் சேர்ந்துள்ளதாகப் பேட்டி அளித்துள்ளார்கள்.

கல்லூரி மாணவியரின் உயர் கல்விச் சேர்க்கையானது அதிகமாகி வருகிறது. இந்தத் திட்டமானது தொடங்கப் பட்டதும் முதல் ஆண்டில் 12 விழுக்காடு மாணவியரின் கல்லூரிச் சேர்க்கை அதிகம் ஆனது. இரண்டாவது ஆண்டில் 34 விழுக்காடு அதிகம் ஆகி இருக்கிறது. 12 ஆம் வகுப்போடு மாணவியரின் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் ஏழை எளிய குடும்பத்து பெற்றோர், இத்திட்டத்துக்குப் பிறகு தங்கள் பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்க முன்வந்துள்ளார்கள். இதை விட இத்திட்டத்தின் பயன்பாடு வேறு இருக்க முடியாது.

இந்தத் திட்டத்தை தொடக்கி வைத்த அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கனவுகளைப் பதிவு செய்தார்கள். "பள்ளியுடன் படிப்பை நிறுத்தி விடும் பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதால், அவர் கல்லூரிக்குள் நுழைகிறார். இதன் மூலமாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். படித்தவர் எண்ணிக்கை அதிகமாகும். அறிவுத்திறன் கூடும். திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள். பாலின சமத்துவம் ஏற்படும்.

உயர்கல்விக்கான தடையை நீக்கும் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள்... - முரசொலி புகழாரம் !

குழந்தை திருமணங்கள் குறையும். பெண் அதிகாரம் பெறுவாள். சொந்தக் காலில் பெண்கள் நிற்பார்கள். - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். திராவிட மாடல் ஆட்சியின் மையக் கரு என்பது இதுதான். அனைவர்க்குமான வளர்ச்சியின் உள்ளடக்கம் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்பதாகும். அதனை மனதில் வைத்துத்தான் புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இவை அனைத்தும் நிறைவேறி வரும் காட்சியைத்தான் இன்று தமிழ்நாட்டில் நாம் பார்க்கிறோம்.

பெண் குழந்தைகளின் உயர்கல்வி உறுதிப்படுத்தப்படுவதோடு பொருளாதார சுதந்திரம், தன்னிறைவு, பாலின சமத்துவம் ஆகியவற்றிலும் அவர்கள் நிறைவு பெறுகிறார்கள். மாணவிகளுக்குப் பொருளாதாரம் சார்ந்த உதவியுடன் கல்வி, இடை நிற்றல் விகிதத்தைக் குறைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இத்திட்டம் முக்கியமான திட்டமாக அமைந்து வருகிறது. படிக்க வைக்க பணமில்லை, மனமில்லை என்ற இரண்டு தடைகளையும் இந்தத் திட்டம் உடைத்து விட்டது. பெண் கல்வியை அதிகரிக்கும் திட்டமாக மட்டுமல்ல, பெண் சக்தியை அதிகரிக்கும் திட்டமாகவும் இது அமைந்துவிட்டது.

'மாணவியருக்கு மட்டும் தானா? மாணவர்க்கு இல்லையா?' என்ற கோரிக்கையும் முதலமைச்சர் அவர்களுக்கு வந்தது. இதனை ஏற்று ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர்களும் பெறப் போகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்விச் சேர்க்கையானது வரும் ஆண்டு முதல் அதிகமாக இருக்கிறது. இது மாணவர் சமுதாயத்தின் வாழ்க்கை யிலும் மறுமலர்ச்சியை உருவாக்கத்தான் போகிறது. இளையோர் சக்தியும் வருங்காலத்தில் அதிகமாகும்.

"மாணவச் செல்வங்கள், படிப்பதற்கு சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதே திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை ஆகும் ." என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார். அத்தகைய தடைகளை உடைக்கும் திட்டமாகவே தமிழ்ப்புதல்வன் திட்டம் அமையப் போகிறது.

banner

Related Stories

Related Stories