முரசொலி தலையங்கம்

வெப்ப அலையில் இருந்து மக்களை காக்கும் கழக அரசு - சுற்றுச்சூழலில் அக்கறை செலுத்தும் முதலமைச்சர்: முரசொலி !

"வெப்ப அலைக் காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம்" -- என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

வெப்ப அலையில் இருந்து மக்களை காக்கும் கழக அரசு - சுற்றுச்சூழலில் அக்கறை செலுத்தும் முதலமைச்சர்: முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வெப்ப அலையில் தற்காப்பு

"வெப்ப அலைக் காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம்" -- என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

* பொதுவாக கோடைக் காலம் என்பது வெப்பம் கூடுதலாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக வெப்பம் மிக மிக அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் மக்களைக் காக்கும் அதீத அக்கறை கொண்டதாக முதலமைச்சர் அவர்களின் அறிக்கை அமைந்துள்ளது. குழந்தைகள், முதியோர், உடல்நலக் குறைவு உள்ளவர்கள், மகப்பேறு மகளிர் ஆகியோர் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பதை முதல்வரின் அறிக்கை வழிகாட்டுகிறது. மக்களைக் காக்கும் தற்காப்பு வல்லுநர்களாக அரசு அலுவலர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் முதலமைச்சரின் அறிக்கை சுட்டிக் காட்டி உள்ளது.

ஏப்ரல், மே,சூன் மாதங்களில் தென் தீபகற்ப இந்தியா, மத்திய மற்றும் கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வெப்ப அலைத் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெப்ப அலையில் இருந்து மக்களை காக்கும் கழக அரசு - சுற்றுச்சூழலில் அக்கறை செலுத்தும் முதலமைச்சர்: முரசொலி !

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் மத்தியப் பகுதியில்தான் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இனி தென் பகுதியில் அதிகமாக இருக்கப் போகிறது. ஒரு பகுதியின் இயல்பு வெப்ப நிலையை விட 4.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகவோ அல்லது, ஒரு பகுதியின் அதிகபட்ச வெப்ப நிலை 4.5 டிகிரி செல்சியஸ் ஆக இரண்டு நாட்கள் தொடர்ந்து இரண்டு வானிலை ஆய்வு மையங்களில் பதிவானாலோ அது வெப்ப அலை எனப் பதிவு செய்கிறார்கள். இதுவே 6.4 ஆனால் அது தீவிர வெப்ப அலை எனச் சொல்லப்படும். வெப்ப அழுத்தம், வாதம், தசைப்பிடிப்பு ஆகிய பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.

வெயில் காலத்தில் மட்டுமல்ல பொதுவாகவே புவி வெப்பமயமாகி வருகிறது. 'மனித குலத்தின் மாபெரும் சவாலாக இருக்கப் போவது சுற்றுச் சூழல் பிரச்சினைகள்தான்' என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்கள். கால நிலை மாற்ற நிர்வாகக் குழு முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கால நிலை மாற்றம் குறித்து ஆராய இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான். ‘திராவிட மாடல்' முதலமைச்சர் அதனை நடத்திக் காட்டினார்கள். நார்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம், இந்திய அளவில் முக்கியப் பிரதிநிதியாக மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோரை அழைத்து வந்திருந்தார்.

துறையின் பெயரை "சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை” என்று முதலமைச்சர் அறிவித்தார். தமிழகத்திற்கான காலநிலைத் திட்டத்தை அறிவித்தார். தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழகத்தின் காடுகளின் பரப்பளவை 21 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவரை சுமார் 2.8 கோடி மரக் கன்றுகள் பதியன் போடப்பட்டு, அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

வெப்ப அலையில் இருந்து மக்களை காக்கும் கழக அரசு - சுற்றுச்சூழலில் அக்கறை செலுத்தும் முதலமைச்சர்: முரசொலி !

அண்ணா பல்கலைக் கழகத்தில் "காலநிலை ஸ்டுடியோ" செயல்படுத்தப்பட்டுள்ளது. சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக "Tamil Nadu Green Climate Company" உருவாக்கப்பட்டு இவற்றை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பசுமை நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. "வளர்ச்சி -- தொழில் மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு பக்கம் சுற்றுச்சூழல், இயற்கை அக்கறை ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியாக வேண்டும்" என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்கள். இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 2070 ஆம் ஆண்டிற்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும் என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்கள்.

அரசு இத்தகைய தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கி வந்தாலும் இப்போது ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் மிக முக்கியமானது ஆகும். வெப்ப அலைத் தாக்கம் அதிகமுள்ள இக்காலகட்டத்தில் செய்யக் கூடியவை -- செய்யக் கூடாதவை என பட்டியல் போட்டு வழிகாட்டி உள்ளது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

* வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும்.

*மதிய நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்

* தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.

* அதிக உடலுழைப்புத் தேவைப்படும் வேலைகளை மதிய வேளையில் செய்வதைத் தவிர்க்கவும்.

* வெளியில் செல்லும்போது தண்ணீரைக் கொண்டு செல்லவும்.

* புரதச்சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்கவும்.

* மோர், எலுமிச்சை தண்ணீர் போன்ற வீட்டுப்பானங்களை அடிக்கடி அருந்தவும்.

வளர்ப்பு உயிரினங்களை நிழலில் வைக்க வேண்டும் - என்பது போன்ற அறிவுரைகளைச் சொல்லி இருக்கிறார்கள். "வெப்ப அலைக் காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம்!"

banner

Related Stories

Related Stories