முரசொலி தலையங்கம்

தமிழ்நாடு வந்த மோடி தேர்தலுக்காக கூட நிவாரணத்தொகை தருவதாக சொல்லவில்லை - முரசொலி விமர்சனம் !

ஒன்­றிய அர­சின் சார்­பில் தொடங்­கப்­ப­டும் திட்­டங்­க­ளில் செய்­யப்­ப­டும் ஓர­வஞ்­ச­னையை பிர­த­மர் முன்­னி­லை­யில் ஒரு முறை முத­ல­மைச்­சர் விவ­ரித்­தார்.

தமிழ்நாடு வந்த மோடி தேர்தலுக்காக கூட நிவாரணத்தொகை தருவதாக சொல்லவில்லை - முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (05.03.2024)

3. வெள்ள நிவா­ர­ணம்

சென்­னை­யைச் சுற்­றிய மாவட்­டங்­க­ளில் கடந்த ஆண்டு டிசம்­பர் 3 ஆம் தேதி பெய்த மழை­யால் கடு­மை­யான பாதிப்­பு­கள் ஏற்­பட்­டன. டிசம்­பர் 17,18 ஆம் தேதி­க­ளில் தென் மாவட்­டத்­தில் மழை, வெள்­ளம் சூழ்ந்­தது.

சென்னை, காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் ஆகிய மாவட்­டங்­க­ளில் சீர­மைப்பு மற்­றும் நிவா­ர­ணப் பணி­களை மேற்­கொள்­வ­தற்­காக தற்­கா­லிக நிவா­ர­ணத்­தொ­கை­யாக 7,033 கோடி ரூபா­யும், நிரந்­தர நிவா­ர­ணத் தொகை­யாக 12,659 கோடி ரூபா­யும் முத­ல­மைச்­சர் அவர்­கள் முத­லில் கேட்­டார்­கள்.

திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி, தென்­காசி மாவட்­டங்­க­ளில் ஏற்­பட்ட பாதிப்­பு­கள் இன்­னும் முழு­மை­யாக அள­வி­டப்­ப­ட­வில்லை. எனவே, அவ­சர நிவா­ரண நிதி­யாக 2 ஆயி­ரம் கோடி தர­வேண்­டும் என்­றும் முத­ல­மைச்­சர் அவர்­கள் பிர­த­ம­ரி­டம் கேட்­டார்­கள். ஆனால் அவை தரப்­ப­ட­வில்லை. பிர­த­மர் அவர்­க­ளி­டம் டெல்­லிச் சென்று மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் நேர­டி­யா­கவே கோரிக்கை வைத்­தார்­கள். அதா­வது, டிசம்­பர் 19 ஆம் தேதி அன்றே இந்­தக் கோரிக்­கையை வைத்­தார்­கள். ஒன்­றிய நிதி அமைச்­சர் இங்கு வந்து பார்த்­துச் சென்­றார். அவ­ரி­ட­மும் கோரிக்கை வைக்­கப்­பட்­டது.

ஒன்­றி­யக் குழு மூன்று நாட்­கள் தங்கி ஆய்வை நடத்­தி­யது. அவர்­க­ளி­ட­மும் முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்த கோரிக்­கை­களை வைத்­தார். பின்­னர் சேதங்­கள் முழு­மை­யாக அள­வி­டப்­பட்டு 37 ஆயி­ரம் கோடி நிதி கேட்­டது தமிழ்­நாடு அரசு. இது­வரை இந்த நிதி தரப்­ப­ட­வில்லை.தூத்­துக்­கு­டிக்கு வந்த பிர­த­மர் வெள்­ளச் சேதப் பகு­தி­களை பார்த்­தாரா? இல்லை. நெல்­லைக்கு வந்த பிர­த­மர், பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளைப் பார்த்­தாரா? இல்லை. தேர்­தல் ஸ்டண்­டா­கக் கூட, அங்கே பேசும் போது, நிதி தரு­கி­றேன் என்று அறி­வித்­தாரா என்­றால் அது­வும் இல்லை. ஆனால் தமிழ்­நாடு ஒத்­து­ழைக்க மறுக்­கி­றது என்று எதை வைத்­துச் சொல்­கி­றார்?

தமிழ்நாடு வந்த மோடி தேர்தலுக்காக கூட நிவாரணத்தொகை தருவதாக சொல்லவில்லை - முரசொலி விமர்சனம் !

4. நிதி ஒதுக்­கு­வ­தில் பார­பட்­சம்

ஒரு ரூபாயை தமிழ்­நாட்­டில் இருந்து பெற்­றால் அதில் இருந்து 29 பைசா­வைத்­தான் திரும்­பத் தரு­கி­றது பா.ஜ.க.

வரி வரு­வாய் நிதி­யா­னது மாநி­லங்­க­ளுக்­குப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்­டும். அதில் முடிந்­த­வரை தமிழ்­நாடு உள்­ளிட்ட மாநி­லங்­­களுக்கு துரோ­கம் இழைத்து வரு­கி­றது ஒன்­றிய பா.ஜ.க. அரசு.

ஒவ்­வொரு முறை நிதி ஒதுக்­கீடு செய்­யும் போதும் பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளுக்கு அள்­ளித் தரப்­ப­டு­கி­றது. தமிழ்­நாடு உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லங்­க­ளுக்கு கிள்­ளித் தரப்­ப­டு­கி­றது. இது­தான் பா.ஜ.க. ஆட்­சிக்கு வந்த காலம் முதல் நடக்­கி­றது.

26.2.2022 ஆம் நாள் சென்னை நேரு உள்­வி­ளை­யாட்டு அரங்­கில் நடை­பெற்ற விழா­வில் பிர­த­மர் முன்­னி­லை­யில் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் பேசும் போது, “தமிழ்­நாடு பல­வ­கை­க­ளில் இந்­தி­யா­வின் முன்­னணி மாநி­ல­மாக திகழ்ந்து வரு­கி­றது. இந்­தி­யா­வின் ஒட்­டு­மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மதிப்­பில் தமிழ்­நாட்­டின் பங்கு 9.22 விழுக்­காடு. ஒன்­றிய அர­சின் மொத்த வரி வரு­வா­யில் தமிழ்­நாட்­டின் பங்கு 6 விழுக்­காடு. ஆனால் ஒன்­றிய அர­சின் வரி வரு­வா­யில் தமிழ்­நாட்­டுக்­குப் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­வது 1.21 விழுக்­காடு மட்­டுமே. எனவே தமிழ்­நாடு போன்ற வளர்ந்த மாநி­லங்­கள் அளிக்­கக் கூடிய பங்­குக்கு ஏற்ப நிதி வழங்க வேண்­டும்” என்று கேட்­டுக் கொண்­டார். இரண்டு நாட்­க­ளுக்கு முன்­னால் 1.42 லட்­சம் கோடி ரூபாயை

மாநி­லங்­க­ளுக்­குப் பகிர்ந்­த­ளித்­துள்­ளது ஒன்­றிய பா.ஜ.க. அரசு. இதில் அதி­க­பட்­ச­மாக பா.ஜ.க. ஆளும் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­துக்கு 25 ஆயி­ரத்து 495 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. தமிழ்­நாட்­டுக்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள தொகை 5 ஆயி­ரத்து 797 கோடி மட்­டும்­தான்.

பீகார் மாநி­லத்­துக்கு தரப்­பட்­டுள்ள தொகை 14 ஆயி­ரத்து 295 கோடி ரூபாய். மத்­தி­யப் பிர­தேச மாநி­லத்­துக்கு 11 ஆயி­ரத்து 157 கோடி ரூபாய் தரப்­பட்­டுள்­ளது. மகா­ராஷ்­டிரா மாநி­லத்­துக்கு 8 ஆயி­ரத்து 978 கோடி ரூபாய் தரப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளுக்கு எல்­லாம் ஏன் கொடுக்­கி­றீர்­கள் என்று நாம் கேட்­க­வில்லை. தமிழ்­நாட்­டுக்கு ஏன் கொடுக்க மறுக்­கி­றீர்­கள் என்­று­தான் கேட்­கி­றோம். ஆந்­தி­ரா­வுக்­கும் கர்­நா­ட­கா­வுக்­கும் 5 ஆயி­ரம் கோடி வரை தந்­துள்­ளார்­கள். கேர­ளா­வுக்கு 2 ஆயி­ரத்து 736 கோடி­தான் ஒதுக்­கீடு செய்­துள்­ளார்­கள். கேரள முத­ல­மைச்­சர், டெல்­லிச் சென்று ஏன் போரா­டி­னார் என்­பதை இதன் மூலம் அறி­ய­லாம். ஒன்­றிய அர­சின் சார்­பில் தொடங்­கப்­ப­டும் திட்­டங்­க­ளில் செய்­யப்­ப­டும் ஓர­வஞ்­ச­னையை பிர­த­மர் முன்­னி­லை­யில் ஒரு முறை முத­ல­மைச்­சர் விவ­ரித்­தார்.

“ஒன்­றிய அரசு தனது திட்­டங்­க­ளுக்­கான நிதிப்­பங்கை தொடக்­கத்­தில் அதி­க­மாக அளித்­தா­லும், காலப்­போக்­கில் தனது பங்­கி­னைக் குறைத்து. மாநில அரசு செல­விட வேண்­டிய நிதிப் பங்கை உயர்த்­தும் நிலை­யைப் பார்க்­கி­றோம். ஒன்­றிய மாநில அர­சு­க­ளின் பங்­க­ளிப்­போடு, பய­னா­ளி­க­ளின் பங்­கை­யும் முன்­னி­றுத்தி, பல திட்­டங்­கள் ஒன்­றிய அர­சால் செயல்­ப­டுத்­தப் படு­கி­றது. இதில் அந்­தத் தொகையை பய­னா­ளி­கள் செலுத்த முடி­யா­த­போது, மக்­க­ளு­டன் நேர­டித் தொடர்­பில் இருக்­கிற மாநில அர­சு­கள்­தான் பய­னா­ளி­க­ளின் பங்­க­ளிப்­பை­யும், சேர்த்து செலுத்த வேண்­டிய நிலை இருக்­கி­றது. இத­னால் மாநில அர­சின் நிதிச் சுமை அதி­க­ரிக்­கி­றது” என்று சுட்­டிக்­காட்­டி­னார் முத­ல­மைச்­சர் அவர்­கள். அது­தான் சென்னை மெட்ரோ திட்­டத்­தில் நடக்­கி­றது.

ஜி.எஸ்.டி.க்குப் பிறகு ஒன்­றிய அர­சி­டம் இருந்து கிடைக்­கும் வரிப்­ப­கிர்­வு­தான் மாநில நிதிக்கு மிக­மிக முக்­கி­ய­மா­னது ஆகும். அதனை முறை­யாக ஒழுங்­காக தமிழ்­நாடு போன்ற மாநி­லங்­க­ளுக்கு வழங்­கு­வது இல்லை. நிதிப்­ப­கிர்வை முறை­யாக ஒழுங்­கா­கச் செய்­கி­றோம் என்று பிர­த­மர் பேசி­னாரா? இல்லை. தமிழ்­நாட்­டுக்கு எவ்­வ­ளவு நிதி கொடுத்­துள்­ளோம் என்­பதை அவர் பேச வேண்­டி­ய­து­தானே?

–- தொட­ரும் –

banner

Related Stories

Related Stories