முரசொலி தலையங்கம்

'முத்­த­மி­ழ­றி­ஞர் பதிப்­ப­கம்' : அறிவியக்கத்தின் தொடர்ச்சி என்பதை உணர்த்திய உதயநிதி.. முரசொலி !

'முத்­த­மி­ழ­றி­ஞர் பதிப்­ப­கம்' : அறிவியக்கத்தின் தொடர்ச்சி என்பதை உணர்த்திய உதயநிதி..  முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முத்தமிழறிஞரின் பேரால்....!

சென்னை புத்­த­கக் கண்­காட்­சியை மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்களுக்­குப் பதி­லா­கத் திறந்து வைத்து உரை­யாற்­றிய மாண்­பு­மிகு அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள், ‘ஒரு பதிப்­பா­ள­ரா­க­வும் நான் இந்த நிகழ்ச்­சி­யில் கலந்து கொள்­கி­றேன்’ என்று சொன்­னார்­கள். ஆம்! ‘முத்­த­மி­ழ­றி­ஞர் பதிப்­ப­கம்’ என்று முத்­த­மி­ழ­றி­ஞ­ரின் பெய­ரால் புதிய பதிப்­ப­கத்தை உரு­வாக்கி இருக்­கி­றார் மாண்­பு­மிகு உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள்.

திரா­விட இயக்­கம் என்­பது படைப்­பா­ளி­கள் இயக்­கம். அந்த படைப்­பா­ளி­கள் இயக்­கத்­தின் தொடர்ச்­சி­தான் தான் என்­பதை மாண்­பு­மிகு அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் மெய்ப்­பித்­துக் காட்டி இருக்­கி­றார்.

திரா­விட இயக்­கம் என்­பது அறி­வி­யக்­கம். அத்­த­கைய அறி­வி­யக்­கத்­தின் தொடர்ச்­சி­தான் தான் என்­பதை அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் உல­குக்கு உணர்த்தி இருக்­கி­றார். கழ­கம் முதன் முத­லில் ஆட்­சிக்கு வந்­த­போது பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யில் ஆட்சி அமைந்­தது. முத­ல­மைச்­சர் பேர­றி­ஞர் அண்ணா

உள்­பட அந்த அமைச்­ச­ர­வை­யில் இருந்த ஐந்து பேர் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் என்­பது இந்த இயக்­கத்­துக்கு மட்­டு­மல்ல, பத்­தி­ரிகை உல­கத்­துக்­கும் பெருமை ஆகும். திரா­வி­ட­நா­டும், காஞ்­சி­யும் அண்ணா நடத்­தி­யவை. மன்­ற­மும் மக்­க­ளாட்­சி­யும் நாவ­லர் நடத்­தி­யவை. முர­சொ­லி­யும் முத்­தா­ர­மும் மற­வன் மட­லும் கலை­ஞர் நடத்­தி­யவை. அன்னை இதழை நடத்­தி­ய­வர் சத்­தி­ய­வாணி முத்து. தென்­ன­கம் நடத்­தி­ய­வர் மதி­ய­ழ­கன். அந்த வகை­யில் திரா­விட பத்­தி­ரி­கை­யா­ளர் அமைச்­ச­ர­வை­யா­கவே அது அமைந்­தி­ருந்­தது.

தமிழ்­நாட்டு இத­ழி­யல் வளர்ச்­சிக்கு திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மாபெ­ரும் பங்­க­ளிப்பு இது. இதழ்­களை உரு­வாக்­கி­னார்­கள். எழுத்­தா­ளர்­கள், படைப்­பா­ளி­களை உரு­வாக்­கி­னார்­கள். இதன் மூல­மாக அறி­வா­ளர்­களை தமிழ்ச் சமூ­கத்­தில் உரு­வாக்­கி­னார்­கள். இவை அர­சி­யல் இதழ்­க­ளாக மட்­டு­மல்ல, இலக்­கிய இதழ்­க­ளா­க­வும் இருந்­தன. அர­சி­யல் கட்­டு­ரை­க­ளோடு சேர்ந்து கதை, புதி­னம், கவிதை, நாட­கங்­க­ளை­யும் வெளி­யிட்­டன. தமிழ் இத­ழி­யல் மட்­டு­மல்ல, தமிழ் இலக்­கி­ய­மும் வளர்ந்­தது. புதிய படைப்­பு­க­ளும் படைப்­பா­ளி­க­ளும் கிடைத்­தார்­கள்.

'முத்­த­மி­ழ­றி­ஞர் பதிப்­ப­கம்' : அறிவியக்கத்தின் தொடர்ச்சி என்பதை உணர்த்திய உதயநிதி..  முரசொலி !

புதிய கருத்­துக்­கள் சொல்­லப்­பட்­டன. சாதி ஒழிப்பு, மூட­நம்­பிக்கை ஒழிப்பு, பார்ப்­பன ஆதிக்க எதிர்ப்பு, சமஸ்­கி­ருத எதிர்ப்பு, வட­வர் ஆதிக்­கம், இந்தி எதிர்ப்பு, பெண்­ணின் உரி­மை­கள், இனப்­பற்று, மொழிப்­பற்று ஆகி­யவை அதி­க­மாக இந்த இதழ்­க­ளில் பேசப்­பட்­டன. இதே­போல் சிறு­சிறு புத்­த­கங்­களை வெளி­யிட்டு மக்­க­ளி­டம் பரப்­பி­னார்­கள். தந்தை பெரி­யார் போட்­டுத் தந்த பாதை­யா­கும் இது. தொடக்­கக் காலத்­தில் தி.மு.க. கொள்கை முழக்­கப் புத்­த­கங்­களை திரா­வி­டப் பண்ணை, அறி­வுப் பண்ணை, திரா­வி­டன் பதிப்­ப­கம், செல்வ நிலை­யம், முன்­னேற்­றப் பண்ணை, புகழ் நிலை­யம், பாரி நிலை­யம், தலை­வன் பதிப்­ப­கம், அஞ்­சு­கம் பதிப்­ப­கம், தூய­ம­லர் நிலை­யம் --– உள்­ளிட்ட பதிப்­ப­கங்­கள் தொடர்ச்­சி­யாக வெளி­யிட்­டன.என்­னைக் கவர்ந்த புத்­த­கங்­கள், வீட்­டிற்­கோர் புத்­த­கச்­சாலை, சொல்­வ­தெல்­லாம் செய்­தல் சுதந்­தி­ரம், ஆரிய மாயை, திரா­வி­டர் நிலை, வாழ்க திரா­வி­டம், நிலை­யும் நினைப்­பும், கருஞ்­சட்­டைப் படை ஒழிய வேண்­டுமா?, நாட­கக் கலை­யின்

முன்­னேற்­றம், கோவை­யில் கரு­ணா­நிதி உரை, இன­மு­ழக்­கம், கோவில்­பட்டி தலைமை உரை, பலி­பீ­டம் நோக்கி, அறப்­போர் -– ஆகி­யவை தொடக்க காலத்­தில் பர­ப­ரப்­பாக விற்ற புத்­த­கங்­கள்.

திரா­விட இயக்­கத்­த­வர் நடத்­திய இதழ்­க­ளும், வெளி­யிட்ட புத்­த­கங்­க­ளும்­தான் இந்த இயக்­கத்தை நோக்கி தமிழ்­நாட்­டையே பார்க்க வைத்­தது. அதன் தொடர்ச்­சியை மாண்­பு­மிகு அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் மீண்­டும் உரு­வாக்­கிக் காட்டி இருக்­கி­றார். ‘முத்­த­மி­ழ­றி­ஞர் பதிப்­ப­கம்’ ஒன்­பது நூல்­களை வெளி­யிட்டு இருக்­கி­றது.

2023 பொங்­கல் முதல் கலை­ஞ­ரின் மூத்த பிள்­ளை­யான ‘முர­சொ­லி’­யின் கடை­சிப் பக்­கம் பாச­றைப் பகு­தி­யாக உரு­வா­னது. நாள்­தோ­றும் ஒரு கட்­டுரை வெளி­யா­னது. அவை புத்­த­கங்­க­ளாக ஆகி இருக்­கின்­றன.

* வழக்­க­றி­ஞர் அ. அருள்­மொழி ‘திரா­வி­டப் போரா­ளி­கள்’ என்ற தலைப்­பின் பெண் போரா­ளி­களை வரி­சைப்­ப­டுத்தி வழங்­கி­னார்.

* ‘இடம்- – பொருள் –- கலை­ஞர்’ என்ற தலைப்­பில் காலத்­தால் அழி­யாத கலை­ஞ­ரின் உட்­கட்­ட­மைப்­பு­கள் தீட்­டப்­பட்­டது.

* சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் மருத்­து­வ­ரு­மான எழி­லன் நாக­நா­தன், ‘டாக்­டர்’

கலை­ஞர் என்ற தலைப்­பின் கீழ் கலை­ஞர் உரு­வாக்­கிய மருத்­து­வக் கட்­ட­மைப்பு குறித்து எடுத்­துச் சொன்­னார்.

* பேரா­சி­ரி­யர் சுப.குண­ரா­ஜன் ‘திரா­விட சினிமா’ தீட்­டி­னார்.

* ‘திரா­விட மாடல் அரசு’ பத்­தி­ரி­கை­யா­ளர் ந.வினோத் குமா­ரால் எழு­தப்­பட்­டது.

* கலை­ஞ­ரும் நானும் என்ற தலைப்­பில் குறிப்­பி­டத்­தக்க மனி­தர்­கள் தங்­க­ளது நட்பை வெளிப்­ப­டுத்­தி­னார்­கள். நீரை,மகேந்­தி­ரன் தொகுத்து எழு­தி­யவை.

* ‘உடன்­பி­றப்பே’ என்­பது தலை­வர் கலை­ஞ­ரின் உயி­ரி­னும் மேலான அன்பு

உடன்­பி­றப்­பு­க­ளின் வர­லாற்­றைச் சொல்­வ­தாக அமைந்­தி­ருந்­தது. நீரை.மகேந்­தி­ரன், ந.வினோத்­கு­மார், விஷ்­ணு­ராஜ், கெள­தம் ஆகி­யோ­ரால் எழு­தப்­பட்­டவை.

* பத்­தி­ரி­கை­யா­ளர் கோவி லெனின் எழுதி கி.சொக்­க­லிங்­கத்­தின் ஓவி­யத்­தால் இடம் பெற்ற ‘திரா­வி­டத்­தால் வாழ்­கி­றோம்’ என்ற படக்­கதை தினந்­தோ­றும் ‘முர­சொலி’ கடை­சிப் பக்­கத்­தில் வெளி­யாகி வரு­கி­றது. இதன் இரண்டு தொகுப்­பு­கள்.

இவை அனைத்­தை­யும் ‘முத்­த­மி­ழ­றி­ஞர் பதிப்­ப­கம்’ சார்­பில் புத்­த­கங்­க­ளா­கக் கொண்டு வந்­துள்­ளார் இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ரும் மாண்­பு­மிகு அமைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள். மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர்- – கழ­கத் தலை­வர் அவர்­கள் சன­வரி 2 அன்று இந்த புத்­த­கங்­களை வெளி­யிட்­டார்­கள்.

'முத்­த­மி­ழ­றி­ஞர் பதிப்­ப­கம்' : அறிவியக்கத்தின் தொடர்ச்சி என்பதை உணர்த்திய உதயநிதி..  முரசொலி !

திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் நின்று நிலை­பெ­றக் கார­ணம், அதன் அடிப்­ப­டைக் கொள்­கை­களே. அர­சி­யல் இயக்­க­மாக – - தேர்­தல் களத்­தில் பங்­கெ­டுக்­கும் இயக்­க­மா­கவே இருந்­தா­லும் தனது அடிப்­ப­டைக் கொள்­கையை வென்­றெ­டுக்­கவே தேர்­தல் அர­சி­யல் என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கி­றது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். அது­தான் 75 ஆண்­டு­க­ளாக கழ­கத்­தைக் காத்து வரு­கி­றது. தமி­ழின எதி­ரி­க­ளுக்கு கழ­கத்­தைப் பார்த்து கோப­மும் பொறா­மை­யும் ஏற்­ப­டு­வ­தற்­குக் கார­ண­மும் இந்­தக் கொள்கை உரம்­தான்.

காலங்­கள் தோறும் இயக்­கம் தன்னை புதுப்­பித்­துக் கொள்­கி­றது. புதிய சொல் -– புதிய பாணி -– புதிய வேகம் -– புதிய பாதை­யில் நடை­பெ­றும் இயக்­க­மாக இதனை தலை­வர் கலை­ஞ­ரும் –- அவ­ரது வழித்­த­டத்­தில் செயல்­ப­டும் மாண்­பு­மிகு ‘திரா­விட நாய­கன்’ -– தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளும் செயல்­பட்டு வரு­கி­றார்­கள். இளை­ஞ­ர­ணிக்­கான பாச­றைக் கூட்­டங்­கள் வாயி­லாக திரா­வி­டத்­தின் தொடர்ச்­சியை தொய்­வில்­லா­மல் கொண்டு செலுத்தி வரு­கி­றார் மாண்­பு­மிகு உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள்.

இணைய தள உல­கம் பர­ப­ரப்­பைக் காட்­டி­னா­லும் புத்­தக உல­கம் என்­பது என்­றென்­றும் இணை­யற்ற உல­கம் என்­ப­தால் ‘முத்­த­மி­ழ­றி­ஞர் பேரால் பதிப்­ப­கம் தொடங்கி –- அறி­வா­யு­தங்­களை கூர்­தீட்டி வரும் மாண்­பு­மிகு அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் செயலை போற்­று­வோம். வாழ்த்­து­வோம். பாராட்­டு­வோம்.

அறி­வுத் தீ பர­வட்­டும்! அறி­யாமை இருள் அக­லட்­டும்!

banner

Related Stories

Related Stories