முரசொலி தலையங்கம்

அப்போது 'ஒன்றியம்'.. இப்போது 'இந்தியா' என்ற சொல்லைப் பார்த்து பயந்து நடுங்கும் பா.ஜ.க : முரசொலி!

'இந்தியா' என்ற சொல்லைப் பார்த்து பயப்படுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தைப் பார்த்தால் பயம். நாடாளுமன்றத்தைப் பார்த்தால் பயம். தேர்தலைப் பார்த்தால் பயம். பின்னர் மக்களைப் பார்த்தால் பயம்.

அப்போது 'ஒன்றியம்'.. இப்போது 'இந்தியா' என்ற சொல்லைப் பார்த்து பயந்து நடுங்கும் பா.ஜ.க :  முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (27-07-2023)

இந்தியாவைப் பார்த்தாலே பயமா?

Indian national developmental inclusive alliance- என்று எப்போது பெயர் சூட்டினார்களோ அப்போதில் இருந்து INDIA-என்ற பெயரைக் கேட்டாலே பயப்படுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் ‘இந்தியா’ என்ற பெயர் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, '‘இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா- – ஆகிய பெயர்களில் கூட ‘இந்தியா’ என்ற பெயர் உள்ளதாக கேலி செய்துள்ளார். நாடாளுமன்றத்தை முடக்கி வரும் எதிர்க்கட்சியினரை “திக்கற்றவர்கள்” (directionless) என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க. எம்.பி.க்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் பேசும்போது, "இதுநாள் வரையில் நான் இதுபோன்ற திக்கற்ற எதிர்க்கட்சியினரைப் பார்த்தது இல்லை. ‘இந்தியா’ என்ற பெயருக்காக அவர்கள் தங்களையே புகழ்ந்து கொள்கிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றிலும் இந்தியா என்ற பெயர் இருக்கிறது. அதனால், ‘இந்தியா’ என்ற பெயரால் ஒன்றும் ஆகிவிடாது. நாட்டின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மக்களைத் தவறாக வழிநடத்த முடியாது. தோல்வி, சோர்வு, நம்பிக்கையின்மை போன்றவற்றால் என்னை எதிர்ப்பது ஒன்றையே கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்க்கட்சிகளாக மட்டுமே இருக்க முடிவு செய்திருப்பதையே அவர்களின் நடத்தை காட்டுகிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் பா.ஜ.க. எளிதில் வெற்றி பெறும்" என்று பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார்.

இப்படி ஒரு பிரதமர் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. தொடர் தோல்விகளால் சோர்ந்து போய் நம்பிக்கையற்றவராகக் காணப்படுவது அவர் தானே தவிர வேறு யாருமல்ல. அவரது நம்பிக்கையின்மைதான் எதிர்க்கட்சிகளை இப்படிச் சொல்லி கொச்சைப்படுத்த வைக்கிறது.

அப்போது 'ஒன்றியம்'.. இப்போது 'இந்தியா' என்ற சொல்லைப் பார்த்து பயந்து நடுங்கும் பா.ஜ.க :  முரசொலி!

'இந்தியா' என்ற பெயரே அவர்களை ஆட்டம் காண வைத்திருக்கிறது. இப்படித் தான் 'ஒன்றியம்' என்று நம்முடைய முதலமைச்சர் சொல்வதைப் பார்த்து பயந்து போய்க் கிடந்தார்கள். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் வரி, ''இந்தியா அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்" என்றுதான் உள்ளது. '' India that is bharat shall be a union of states" என்றுதான் இருக்கிறது. அதைத் தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை அல்ல. அப்போது, ஒன்றியம் என்ற சொல்லைப் பார்த்து பயப்பட்டார்கள். இப்போது 'இந்தியா' என்ற சொல்லைப் பார்த்து பயப்படுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தைப் பார்த்தால் பயம். நாடாளுமன்றத்தைப் பார்த்தால் பயம். தேர்தலைப் பார்த்தால் பயம். பின்னர் மக்களைப் பார்த்தால் பயம்.

'இந்தியா' என்பது கூட்டணிக்கு வைக்கப்பட்டுள்ள பெயரின் கூட்டுச் சேர்க்கை. அவ்வளவுதான். அதுவே பிரதமரை மிரட்டுகிறது. 'இந்தியா என்ற பெயர் தீவிரவாத அமைப்பின் பெயர்களில் இருக்கிறது' என்று சொல்ல நினைப்பதன் நோக்கம் என்ன? ஜனநாயக அரசியல் கட்சிகளையும் தீவிரவாத அமைப்புகளாகக் காட்ட நினைக்கிறார் பிரதமர். இந்தியா என்பது நாட்டின் பெயர். இடத்தின் பெயர். எல்லையின் பெயர். இந்த எல்லைக்குள் இயங்குபவர்கள் அந்தப் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். அதில் என்ன தவறு?

யாரெல்லாம் இந்தியா என்ற பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று கண்டுபிடிப்பதும், விமர்சிப்பதும் தர்க்கம் அல்ல, அபத்தம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் சொல்லி இருக்கிறார்... '' மிஸ்டர் மோடி அவர்களே! நாட்டை விட்டு தப்பி ஓடியவர்களான லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோர் பெயர்களில் கூட மோடி என்பது இருக்கிறதே!" என்று கேட்டு இருக்கிறார். இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?

நரேந்திரர் என்று பெயர் வைத்திருப்பதால், அவர் விவேகானந்தர் ஆகிவிடுவாரா? பாரதி நடத்திய பத்திரிக்கைக்கு பெயர் 'இந்தியா'. அதற்காக எங்கள் கூட்டணிக் கட்சியின் பெயரில் தான் பாரதியாரே பத்திரிக்கை நடத்தினார் என்று சொல்லிக் கொள்ள முடியுமா?

அப்போது 'ஒன்றியம்'.. இப்போது 'இந்தியா' என்ற சொல்லைப் பார்த்து பயந்து நடுங்கும் பா.ஜ.க :  முரசொலி!

இந்தியாவின் புகழ்பெற்ற தத்துவாசிரியர் ராகுல்ஜி எனப்படும் ராகுல சாங்கிருதியாயன் எழுதினார்: ''ஆரியர்களுடன் ரத்த உறவுகொண்ட அண்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஈரானியர் 'ச'வை 'ஹ' என உச்சரித்து வந்தனர். அதனால் 'சப்த சிந்து' பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து கொண்டிருந்த தமது சகோதரர்களின் நாட்டை அவர்கள், 'ஹப்த ஹிந்து' என்று அழைத்து வந்தனர். அதன் சுருக்கமே 'ஹிந்த்' என்பது. அக்காலத்தில் மேற்கத்திய நாடுகளில் சிறந்து விளங்கிய கிரீஸ் நாட்டினர் 'ஹ'வை 'அ' என்று உச்சரித்து வந்தனர். அதனால் 'ஹிந்த்' என்பது 'இந்து', 'இந்த்' என ஆகிவிட்டது. இன்று எங்கும் நமது நாடு இதே பெயரில் தான் வழங்கப்படுகிறது" என்கிறார்.

உலகப் புகழ் பெற்ற வரலாற்றறிஞர் ஏ.எல்.பசாம் அவர்கள், ''The wonder that was india'' என்ற நூலை எழுதினார். 'வியத்தகு இந்தியா' என தமிழில் வெளியாகி உள்ளது. ''சிந்து என்றுதான் அந்த நதியை இந்தியர்கள் சொன்னார்கள். பாரசீகர் மொழிமுதற் சகரத்தை ஒலிக்க இடர்பட்டமையால், அதனை இந்து என்றனர். பாரசீகத்தில் இருந்து இச்சொல் கிரீசுக்குச் செல்ல, அது இந்தியா முழுமைக்குமேயான பெயராக சுட்டப்பட்டது" என்று சொல்லி இருக்கிறார்.

எனவே, 'இந்தியா' என்பது இடப்பெயர்தான். பிரதமர் பயப்படத் தேவையில்லை.

'தெனாலி' படத்தில் கமலுக்கு வரும் 'பயம்' போல. எல்லாம் 'பயமயம்'!

'காடு பயம், நாடு பயம், கூடு பயம், குளம் பயம், குளத்துக்குள்ள இருக்கும் நண்டு பயம், பூச்செண்டு பயம், செண்டுக்குள்ள இருக்கும் வண்டு பயம்....

banner

Related Stories

Related Stories