முரசொலி தலையங்கம்

ஆளுநர் அத்துமீறல்கள்.. குடியரசு தலைவருக்கு முதல்வர் எழுதியுள்ளது கடிதம் அல்ல குற்றப்பத்திரிக்கை: முரசொலி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுப்பியுள்ள குற்றப்பத்திரிக்கை மிகமிகத் தெளிவானது. வெளிப்படையானது. சட்டபூர்வமானது.

ஆளுநர் அத்துமீறல்கள்.. குடியரசு தலைவருக்கு முதல்வர் எழுதியுள்ளது கடிதம் அல்ல குற்றப்பத்திரிக்கை: முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (11-07-2023)

குற்றப்பத்திரிக்கை - 1

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறல்கள் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ளது கடிதம் அல்ல, குற்றப்பத்திரிக்கை!

இப்படி எழுதலாமா, முன்னுதாரணம் இருக்கிறதா என்றெல்லாம் சிலர் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். ''ராஜ்பவனில் போட்டி அரசு நடத்தும் ஆளுநர், மாநில நிர்வாகத்தை சீர்குலைக்கும் கருவியாக ராஜ்பவனை மாற்றியுள்ளார். ஆளுநர் பதவிக்கான கண்ணியத்தை அவர் இழந்துவிட்டார். மாநில அரசையும் கூட்டாட்சி அமைப்பையும் வலுவிழக்கச் செய்யும் ஆளுநரை திரும்பப்பெற வேண்டும்" - என்று சொன்னவர் 2011 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி தான். எனவே முன்னுதாரணம் இருக்கிறது. மோடிதான் அந்த முன்னுதாரணம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுப்பியுள்ள குற்றப்பத்திரிக்கை மிகமிகத் தெளிவானது. வெளிப்படையானது. சட்டபூர்வமானது.

ஆளுநர் அத்துமீறல்கள்.. குடியரசு தலைவருக்கு முதல்வர் எழுதியுள்ளது கடிதம் அல்ல குற்றப்பத்திரிக்கை: முரசொலி!

1. ஆளுநர் என்பவர், முக்கியமான அரசியலமைப்பு கடமைகளைச் செய்பவராகவும், பாரபட்சமற்ற வராகவும், அப்பழுக்கற்ற நேர்மையான நபராகவும் இருக்க வேண்டும். அரசியல் சாசனத்தின் மீதும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் மீதும் ஆளுநருக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால் அப்படிப்பட்டவராக ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லை.

2. இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு. இந்த அடிப்படைக் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை இல்லாத ஆளுநர், அரசியலமைப்பு பதவியை வகிக்கத் தகுதி அற்றவர்.

3.அரசியல்வாதியாக மாறும் ஒரு ஆளுநர், அப்பதவியில் தொடரவே கூடாது.

4. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை, செயல்பாடுகள், முடிவுகளுக்கு சவால் விடும் வகையில் அவர் செயல்படுகிறார்.

5. சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்து முட்டுக்கட்டை போடுகிறார்.

6. 2021- செப்டம்பரில் தமிழ்நாடு ஆளுநராக அவர் பொறுப்பேற்றது முதல், சட்டபூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக அரசுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் ஈடுபட்டு வருகிறார்.

7. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் மக்களுக்குச் சேவை செய்வதைத் தடுத்து வருகிறார்.

8.ஊழல் புரிந்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்கள்மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.

9. பி.வி.ரமணா @ பி.வெங்கட்ரமணா - முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் – கோப்பு எண் AC/495/2022, நாள் 12.9.2022 என்ற கோப்பை கிடப்பில் போட்டுள்ளார்.

ஆளுநர் அத்துமீறல்கள்.. குடியரசு தலைவருக்கு முதல்வர் எழுதியுள்ளது கடிதம் அல்ல குற்றப்பத்திரிக்கை: முரசொலி!

10. சி. விஜயபாஸ்கர் - முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் – கோப்பு எண் AC/495/2022, நாள் 12.9.2022 என்ற கோப்பை கிடப்பில் போட்டுள்ளார்.

11. கே.சி. வீரமணி - முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் – கோப்பு எண் AC/454/2021, நாள் 12.9.2022 என்ற கோப்பை கிடப்பில் போட்டுள்ளார்.

12. எம்.ஆர்.விஜயபாஸ்கர் – முன்னாள் போக்கு வரத்துத் துறை அமைச்சர் –கோப்பு எண் AC/351/2021, நாள் 15.5.2023 என்ற கோப்பை கிடப்பில் போட்டுள்ளார்.

13. ஆளுநர் தனிப்பட்ட முறையில், தனது அரசியல் மற்றும் மதக் கருத்துகளைத் தொடர்ந்து பொது வெளியில் தெரிவித்து வருவது, அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு மிகவும் பொருத்தமற்றது.

14. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி மற்றும் தவறான எண்ணத்தைத் தூண்ட முயல்கிறார்.

15. இந்த நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை அடிக்கடி தனது பிளவுபடுத்தும் பேச்சுகளின் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார்.

16. "உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவும் ஒற்றை மதத்தைச் சார்ந்துள்ளது" என்று அவர் சொல்வது இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும்.

17.திருக்குறளை வகுப்புவாதப்படுத்துகிறார்.

18. தமிழ் மக்களையும், பண்பாட்டையும், இலக்கியத்தையும், திராவிடக் கருத்தியலையும், அரசியலையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார்.

19. திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று அவர் சொல்வது அவதூறு மட்டுமல்ல, அவரது அறியாமை ஆகும்.

20. கூட்டாட்சித் தத்துவம் என்றால் என்ன என்றே அவருக்குத் தெரியவில்லை.

21. இலக்கியம் மக்களுக்கு மிக மோசமாக போதிக்கப் பட்டுள்ளது என்று சொல்வதன் மூலமாக தமிழ் இலக்கியங்களை அவமானப்படுத்துகிறார்.

22. தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் "தமிழ்நாடு" என்ற பெயரை சிதைக்க நினைக்கிறார்.

23. இவர் தமிழர் நலனுக்கு எதிரானவர்.

24. தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மீது விவரிக்க முடியாத, ஆழமாக வேரூன்றிய பகைமை கொண்டவராக இருக்கிறார்.

25. அவரது சொற்களும், பேச்சுகளும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை செயல்படவிடாமல் தடுப்பது மட்டுமல்லாமல், சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பு, அவமதிப்பு மற்றும் அதிருப்தியையும் அவர் தூண்டுகிறார்.

-தொடரும்

banner

Related Stories

Related Stories