முரசொலி தலையங்கம்

“எல்லா நாளும் மலரும் ‘முரசொலி’ தாளும் கலைஞரின் தோளுக்கு விழும் புகழ்மணி மாலைகளே!” : முரசொலி புகழாரம்!

'மூத்தபிள்ளையாம்' முரசொலி தனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறது! தினமும் எல்லா நாளும் மலரும் 'முரசொலி' தாளும் கலைஞரின் தோளுக்கு விழும் புகழ்மணி மாலைகளே!

“எல்லா நாளும் மலரும் ‘முரசொலி’ தாளும் கலைஞரின் தோளுக்கு விழும் புகழ்மணி மாலைகளே!” : முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நூற்றாண்டின் தலைவர்!

நூறு ஆண்டுகள் வாழ்ந்தவர்களுக்கு எல்லாம் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன் என்னவாக வாழ்ந்தார்கள் என்பதை வைத்தே நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. வாழ்ந்த காலத்திலேயே நூற்றாண்டின் தலைவராக வாழ்ந்தார் கலைஞர். அதனால் அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது!

நூறு ஆண்டுகள் வாழ்ந்த அனைவருமே நூற்றாண்டின் தலைவராகப் போற்றப்படுவது இல்லை. தான் வாழ்ந்த காலத்தின் திசையைத் தீர்மானிப்பவராக யார் இருந்தார்களோ, அவர்களே நூற்றாண்டின் தலைவராகப் போற்றப்படு கிறார்கள். நேற்றும், இன்றும் மட்டுமல்ல, நாளைய திசையையும் தீர்மானிப்பவராகக் கலைஞர் அவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் நூற்றாண்டின் தலைவராகப் போற்றப்படுகிறார்!

“எல்லா நாளும் மலரும் ‘முரசொலி’ தாளும் கலைஞரின் தோளுக்கு விழும் புகழ்மணி மாலைகளே!” : முரசொலி புகழாரம்!
Shubham Tiwari

எப்படி அவருக்கு இத்தனை புகழ்கள் வந்து சேர்ந்தன? வாழ்ந்த காலத்தில் போற்றுதலுக்குரிய அனைத்தையும் அவர் செய்து காட்டினார். அதனால்தான் இத்தனை புகழ்கள்!

எதனால் அவர் மீது இத்தனை பழிச்சொற்கள்? சிறந்த செயல் செய்த அனைவரும் பழிச்சொற்களைத் தாங்கித்தான் ஆக வேண்டும்? உலகம் போற்றும் தந்தை பெரியார் மீது இல்லாத பழிச்சொற்களா? ரசிகமணி டி.கே.சி. எழுதினார்: 'ஒருவர் நல்ல தலைவராக இருந்தால் அவர் மீது ஏராளமான பழிச்சொற்கள் இருக்க வேண்டும்' என்று சொன்னார்.

பல்லாயிரமாண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைக் குரலை எழுப்பியவர் கலைஞர். அவர்களை ஒடுக்கி வைத்திருந்தவர்களுக்கு எதிரி கலைஞர். எதிர்ப்பு என்பது இவர்களிடம் இருந்து வருவது தான். இந்தத் தரப்பிடம் இருந்து எதிர்ப்பு வருவது இயல்பு தானே! அந்த எதிர்ப்பில்தான் கலைஞர் எனும் நெருப்பின் இருப்பு அடங்கி இருக்கிறது. நெருப்பு அடங்காமல் இருந்தது இறுதி வரையில்!

“எல்லா நாளும் மலரும் ‘முரசொலி’ தாளும் கலைஞரின் தோளுக்கு விழும் புகழ்மணி மாலைகளே!” : முரசொலி புகழாரம்!

அறம்பாடும் வள்ளுவனாய்,

காவியம் தீட்டும் இளங்கோவாய்,

போர்ப்பரணி பாடும் பாரதிதாசனாய்,

பகுத்தறிவு எரிமலைப் பெரியாராய்,

இனம்மொழி காக்கும் அண்ணாவாய்,

மேடையில் அஞ்சாநெஞ்சு பட்டுக்கோட்டை அழகிரியாய்,

சட்டமன்றங்களில் சங்கநாதமாய்,

மக்கள் மன்றத்தில் மாபெரும் வேந்தராய், வாழ்ந்த காலமெல்லாம் தினமும் ஒன்றாக உயர்ந்து நின்றார் திருவாரூர்க் கலைஞர்.

எல்லோரும் யாரோ ஒருவரின் வார்ப்பாக இருப்பது இயல்பு தான். ஆனால் எல்லோரது வார்ப்பாகவும் வாய்த்தவர் கலைஞர். தனக்கு முன்னால் இருந்த மொத்தத் தலைவர்கள் இருந்த இடத்தையும் இட்டு நிரப்பும் ஆற்றல் அவருக்கு இருந்தது. எல்லா இடத்திலும், எப்போதும் முதலிடம் பிடிப்பதை ஆற்றல், சிறப்பாற்றல், பேராற்றல் என்று சொல்லிச் சுருக்கி விட முடியாது. அந்தச் சொற்களில் அது முழுமையடைய முடியாது. இந்த அனைத்து ஆற்றல்களும் கொண்ட ஒருவரே 'கலைஞர்' என்ற சொல்லுக்குத் தகுதி வாய்ந்தவர். அத்தகைய 'கலைஞர்' என்ற சொல்லுக்குப் பொருத்தமானவர் கலைஞர்!

“எல்லா நாளும் மலரும் ‘முரசொலி’ தாளும் கலைஞரின் தோளுக்கு விழும் புகழ்மணி மாலைகளே!” : முரசொலி புகழாரம்!

தமிழூராய், தமிழனூராய், கவியூராய், கொள்கையூராய், புரட்சியூராய், சேவையூராய், சட்டவூராய், திட்டவூராய் வாழ்ந்தார் கலைஞர். மொத்தத்தில் திருவூர் அவர். இவை அவராகத் திட்டமிட்டுக் கொண்ட வாழ்க்கையல்ல. அதுவாக, இயல்பாக அமைந்த வாழ்க்கையாகும்.

'எனக்கு மகிழ்ச்சி என்பது நீண்ட நேரம் நீடிப்பது இல்லை' என்று சொல்லிக் கொண்டார். தமிழ்ச் சமுதாயத்தின் நீண்ட நேர மகிழ்ச்சிக்குக் காரணம் அவர்!

'நான் மிகமிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன், எத்தனை மிகமிக என்று வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்' என்றார். ஆனால் மிகமிக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை மிக மிக மிக முன்னேற்றியவர் அவரே. எத்தனை 'மிக மிக மிக' வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்!

“எல்லா நாளும் மலரும் ‘முரசொலி’ தாளும் கலைஞரின் தோளுக்கு விழும் புகழ்மணி மாலைகளே!” : முரசொலி புகழாரம்!

'' நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும்'' என்பது அவரது புகழ்பெற்ற மொழிகளில் ஒன்று. அதிக உயரம் தாண்ட வேண்டும் என்ற சாதனைக்காக அவர் நீண்ட தூரம் ஓடி வரவில்லை. தமிழ்ச்சமுதாயத்தை நீண்ட உயரத்துக்கு உயர்த்த வேண்டும் என்பதற்காக நீண்ட தூரம் ஓடி வந்தார் கலைஞர். ஓடினார்... ஓடினார்... சமுதாயத்தின் உயர்வுக்காகவே ஓடினார். 95 வயது வரைக்கும் ஓடினார். 95 வயதோடு அவரது ஓட்டம் முடிந்துவிட்டதா என்றால் இல்லை!

அதற்கும் அவரே பதில் சொல்லி இருக்கிறார். ''ஒருவனின் வாழ்க்கை என்பது அவனது மரணத்துக்குப் பின்னால் இருந்து கணக்கிட வேண்டும்' என்று சொன்னவர் கலைஞர்!

“எல்லா நாளும் மலரும் ‘முரசொலி’ தாளும் கலைஞரின் தோளுக்கு விழும் புகழ்மணி மாலைகளே!” : முரசொலி புகழாரம்!

அவர் பேசப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார். நினைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார். புகழப்பட்டுக் கொண்டே இருக்கிறார். போற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார். வாழ வைத்துக் கொண்டேதான் இருக்கிறார். தான் இருந்து செய்திருக்க வேண்டிய செயல்களை எல்லாம் தனது வார்ப்பான 'உழைப்பின் சிகரம்' மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைத்தே சென்றிருக்கிறார்.

பலரின் வெற்றிடத்தை தான் நிரப்பியவராக மட்டுமல்ல கலைஞர், தனது இடத்தையும் நிரப்பும் ஆற்றலாளரை உருவாக்கிக் கொடுத்தவர் கலைஞர். இதனால் தான் கடந்த நூற்றாண்டின் தலைவராக மட்டுமல்ல, வரும் நூற்றாண்டுகளின் தலைவராகவும் கலைஞர் ஆகப் போகிறார். காலங்கள் கடந்தும் வாழப் போகிறார்.

'மூத்தபிள்ளையாம்' முரசொலி தனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறது! தினமும் எல்லா நாளும் மலரும் 'முரசொலி' தாளும் கலைஞரின் தோளுக்கு விழும் புகழ்மணி மாலைகளே!

banner

Related Stories

Related Stories