முரசொலி தலையங்கம்

திராவிட மாடல் ஆட்சியை பார்த்து ஆதிக்க சக்திகளுக்கு எரிச்சல் ஏற்படுவது ஏன்?.. விளக்கும் முரசொலி தலையங்கம்!

சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் பாதையில் சென்று கொண்டுள்ளது திராவிட மாடல் அரசு.

திராவிட மாடல் ஆட்சியை பார்த்து ஆதிக்க சக்திகளுக்கு எரிச்சல் ஏற்படுவது ஏன்?.. விளக்கும் முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (15-04-2023)

சமத்துவம் உருவாக்கும் காலம்!

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்து - அன்றைய தினம் சமத்துவ நாள் உறுதிமொழியை அனைவரும் ஏற்க வேண்டும் என்ற கட்டளையை இட்டு - கோடிக்கணக்கானவர்களை அன்றைய தினம் உறுதிமொழி எடுக்க வைக்கும் சமத்துவ அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு உயர்ந்து நிற்கிறது.

இவையெல்லாம் சேர்ந்துதான் ஆதிக்க சக்திகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. அதனால்தான் 'திராவிட மாடல்' ஆட்சிக்கு எதிராக பல்வேறு அவதூறுகளையும் சதிச் செயல்களையும் அவர்கள் செய்து வருகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் செயல்பட்டு வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். 'அனைவருக்குமான ஆட்சி' என்பதும், 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காட்டி வரும் அக்கறை என்பது ஒவ்வொரு துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையில் அதிகமாகவே மிளிர்ந்து வருகிறது.

ஆட்சி அமைந்ததும் பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தை முதலமைச்சர் அவர்கள் உருவாக்கினார்கள். மாநில விழிப்புணர்வு கண்காணிப்புக் கூட்டத்தை ஆறுமாதத்துக்கு ஒரு முறை மிகச் சரியாக கூட்டி வருகிறார் முதலமைச்சர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மாநில விழிப்புணர்வு கண்காணிப்புக் கூட்டத்தை நடத்தவே இல்லை. நீதிமன்றத்துக்குப் போய் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு அன்றைய ஆட்சி நடத்தவில்லை. நீதிமன்றமே அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்தது. ஆனால் இன்றைய முதலமைச்சர், தனது அரசின் முக்கியக் கடமையாகவே அதனைக் கருதி நடத்தி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல், மூன்று முறை இந்தக் கூட்டம் நடந்து விட்டது.

திராவிட மாடல் ஆட்சியை பார்த்து ஆதிக்க சக்திகளுக்கு எரிச்சல் ஏற்படுவது ஏன்?.. விளக்கும் முரசொலி தலையங்கம்!

இக்கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானம்தான், அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாகக் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை ஆகும். உடனடியாக அதனைச் செயல்படுத்திக் காட்டினார் முதலமைச்சர் அவர்கள். அதனினும் முக்கியமாக அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் அனைத்தையும் தமிழில் கொண்டுவரும் மகத்தான திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அதற்கான குழு அமைக்கப்பட்டு, அவர்களது ஆலோசனையின் பேரில் அனைத்துப் பணிகளும் தொடங்கிவிட்டன.

இந்தியா முழுமைக்கும் வகுப்புவாத, ஆதிக்கவாத சக்திகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருப்பது தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும்தான். இவர்களது சிந்தனைக்கு அஞ்சுவதைப் போல ஆயுதங்களுக்குக் கூட அவர்கள் அஞ்சுவது இல்லை. அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் அவர்கள், 'தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா ஜோதிராவ் பூலே போன்றவர்கள் பெயரில் படிப்பு வட்டத்தை உருவாக்கி சமூகநீதி வகுப்புகளை நடத்தி இன்றைய இளைஞர்களுக்குப் பயிற்சி அளியுங்கள்' என்று சொன்னதுதான் அவர்களுக்கு அச்சம் தருவதாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா போல மற்ற மாநிலங்களும் இது போல விழிப்புணர்வு பெற்றுவிட்டால் என்னாவது என்று அந்த ஜனநாயக விரோத சக்திகள் நினைக்கிறார்கள். ஆனாலும் முதலமைச்சர் தன்னுடைய கருத்துகளை அழுத்தமாக எதிரொலித்து வருகிறார்.

திராவிட மாடல் ஆட்சியை பார்த்து ஆதிக்க சக்திகளுக்கு எரிச்சல் ஏற்படுவது ஏன்?.. விளக்கும் முரசொலி தலையங்கம்!

அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை அரசின் சார்பில் வெளியிடுவதன் மூலமாக அந்தச் சிந்தனைகள் முழுமையாக அரசு மயமாக, அரசியல் மயமாக, ஆட்சியியல் மயமாகிறது. மொத்தத்தில் மக்கள் மயமாகிறது. அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை அங்கீகரிப்பதும், அதனைப் பரப்புவதும், அதனை அனைவரையும் ஏற்றுக் கொள்ள வைப்பதும் சமத்துவத்தின் முதல் படியாகும். அதனை மிகச் சரியாகச் செய்து வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

* வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு.

* வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள், வீட்டுமனைப் பட்டா.

* வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்திட காவல் துறை அதிகாரிகளுக்குப் பயிற்சிகள்.

* ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ஏற்கனவே உள்ள 22 நீதிமன்றங்களுடன் கூடுதலாக 4 நீதிமன்றங்கள்.

* அண்ணல் அம்பேத்கர் பெயரிலான விருதுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தியது.

* சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள முன்மாதிரி சிற்றூர்களின் வளர்ச்சிப்பணிக்கு ரூ.10 லட்சம்.

* தீண்டாமை இல்லாத கிராமங்களின் வளர்ச்சிப் பணிக்கு ரூ.10 லட்சம்.

* தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் மனிதநேய வார விழாக்கள் ஆண்டு தோறும் ஜனவரி 24 முதல் 30 வரை நடத்தப்படுதல்.

* ஜனவரி 26, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களிலும், அந்தந்த மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் விடுமுறை நாட்களிலும் சமத்துவ விருந்துகள் நடத்துதல்.

* ஆதிதிராவிட கல்வித் திட்டங்களுக்காக 2,206 கோடி ஒதுக்கீடு.

* ஆதிதிராவிடப் பள்ளி மேம்பாட்டுக்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு.

* ஆதிதிராவிடப் பள்ளிகள், பொதுப்பள்ளிகளுடன் இணைந்து செயல்படுதல்.

* ஆதிதிராவிடர் விடுதிகளை பழுது பார்க்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.

* என்.சி. இராஜா விடுதி மேம்பாட்டுக்கு ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கீடு.

* எம்.சி.இராஜா விடுதி வளாகத்தில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் புதிய விடுதிக் கட்டடம்.

*முனைவர் பட்ட உதவித் தொகை 1 லட்சமாக உயர்வு. இதுவரை 2,954 பேர் பெற்றுள்ளார்கள்.

* வெளிநாடு சென்று கல்வி பெறுபவர்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு. இதுவரை 18 மாணவர்கள் பெற்றுள்ளார்கள்.

* தாட்கோவின் கீழ் பயனடைவதற்கான வருமான உச்சவரம்பு மூன்று இலட்சம் ரூபாயாக உயர்வு.

* அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ரூ.100 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.

* அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.

* தமிழ்நாடு மாநில பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான ஆணையம் 987 மனுக்களுக்குத் தீர்வு கண்டுள்ளது.

- இவை அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் செய்யப்பட்ட திட்டங்கள் ஆகும்.

திராவிட மாடல் ஆட்சியை பார்த்து ஆதிக்க சக்திகளுக்கு எரிச்சல் ஏற்படுவது ஏன்?.. விளக்கும் முரசொலி தலையங்கம்!

''சிறப்புக் கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த, ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக்கீடான ரூ.77,930.30 கோடியில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக ரூ.17,075.70 கோடி(21.91%) மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1595.89 கோடி (2.05%) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் (20.01%) மற்றும் பழங்குடியின மக்கள் தொகை (1.17%) விகிதாச்சாரத்தை விட அதிகமானதாகும்" என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

''இத்தோடு அரசின் கடமை முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை.

சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்" என்பதையும் முதலமைச்சர் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் பாதையில் சென்று கொண்டுள்ளது திராவிட மாடல் அரசு.

banner

Related Stories

Related Stories