முரசொலி தலையங்கம்

கீழடி ஆய்வுகளை உலக மக்­கள் மத்­தி­யி­லும் கொண்டு சேர்த்துவிட்டார் முத­ல­மைச்­சர் -முரசொலி புகழாரம் !

அழ­கன்­கு­ளம், கொற்கை, சிவ­களை, ஆதிச்­ச ­நல்­லூர், கொடு­ம­ணல், மயி­லா­டும்­பாறை, கங்­கை­கொண்ட சோழ­பு­ரம் ஆகிய இடங்­க­ளில் ஆய்­வு­கள் இப்­போது மீண்­டும் சிறப்­பா­கத் தொடங்க இருக்­கி­றது.

கீழடி ஆய்வுகளை உலக மக்­கள் மத்­தி­யி­லும் கொண்டு சேர்த்துவிட்டார் முத­ல­மைச்­சர் -முரசொலி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (7.3.2023)

சொல்லியலும் தொல்லியலும் 1

‘‘இந்­தி­யத் துணைக்­கண்­டத்­தின் வர­லாறு, இனி தமிழ் நிலப்­ப­ரப்­பில் இருந்­து ­தான் தொடங்கி எழு­தப்­பட வேண்­டும்” என்று சொல்லி வரும் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அதற்­கான ஆதார மையத்தை நேற்­றைய தினம் (5.3.2023) திறந்து வைத்­தி­ருக்­கி­றார். கீழடி அருங்­காட்­சி­யத்தை அழ­கிய வடி­வில் கட்டி எழுப்பி இருக்­கி­றார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

எல்­லாச்­சொல்­லும் பொருள் குறித்­த­னவே என்ற தொல்­காப்­பி­யத் தமி­ழும்,

பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும் என்ற திருக்­கு­றள் தமி­ழும்,

யாதும் ஊரே யாவ­ரும் கேளிர் என்ற சங்­கத்­த­மி­ழும்,

பஃறுளி ஆறும் பன்­மலை யடுக்­கத்­துக்

கும­ரிக்­கோ­டும் கொடுங்­க­டல் கொள்ள

வட­தி­சைக் கங்­கை­யும் இம­ய­மும் கொண்டு

தென் திசை ஆண்ட தென்­ன­வன் வாழி என்ற சிலப்­ப­தி­கா­ரத்­த­மி­ழும்,

அறம் செய விரும்பு என்ற ஒள­வைத் தமி­ழும்,

எல்­லோ­ரும் இன்­புற்­றி­ருக்க நினைப்­பதுவே அல்­லா­மல் வேறொன்றும­றி­யேன் பரா­ப­ரமே என்ற தாயு­மா­ன­வத் தமி­ழும்,

வாடிய பயி­ரைக் கண்­ட­போ­தெல்­லாம் வாடி­னேன் என்ற வள்­ள­லார் தமி­ழும்,

சாகச் செய்­வா­னைச் சாகச் செய்­யா­மல் சாகின்­றாய் தமிழா சாகின்­றாயே என்ற பாவேந்­தர் தமி­ழும்,

தமி­ழன் என்­றோர் இன­முண்டு, தனியே அவர்க்­கோர் குண­முண்டு என்ற நாமக்­க­லார் தமி­ழும் –- உல­விய மண் இந்த தமிழ் மண். இத்­த­கைய பண்­பாட்டு விழு­மி­யங்­கள் நமக்கு எப்­படி வாய்த்­தது?

கீழடி ஆய்வுகளை உலக மக்­கள் மத்­தி­யி­லும் கொண்டு சேர்த்துவிட்டார் முத­ல­மைச்­சர் -முரசொலி புகழாரம் !

அவை நமது மொழிக்­குள் இருக்­கி­றது. நமது சொல்­லுக்­குள் இருக்­கி­றது. நமது மண்­ணுக்­குள்­ளும் இருக்­கி­றது. அத­னால் தான் மண்­ணுக்­கும் பெயர் வைத்து இலக்­க­ணம் வகுத்­தான் தமி­ழன். மண்­ணும் மக்­க­ளு­மாக இணைந்து பண்­பட்ட பூமி தமிழ்ப் பூமி.கல்­தோன்றி மண் தோன்­றாக் காலத்தே வாளோடு முன் தோன்­றிய மூத்­த­குடி –- என்று நாம் சொல்­லும் போது, ‘ஆமாம் இது பாட்டு தானே’ என்று புறம் பேசி­ய­வர் உண்டு.

‘தென் தமிழ் மது­ரைச் செழுங்­க­லைப் பாவாய் –- என்று சொல்­லும் போது இது கவி­ஞ­னின் கற்­பனை என்­பார்கள்.

‘யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்

தீதும் நன்­றும் பிறர்­தர வாரா

நோத­லும் தணி­த­லும் அவற்­றோர் அன்ன

சாத­லும் புகு­வது அன்றே வாழ்­தல்

இனி­தென மகிழ்ந்­தன்­றும் இலமே -– என்­ப­தைக் கேட்க நன்­றாக இருக்­கி­றது. நடை­மு­றை­யில் நடக்­குமா என்­பார்­கள்.

இவை அனைத்­தும் நடந்­த­வை­தான், நடந்­த­வை­தான் இலக்­கி­ய­மா­னது என்­றால் ‘கற்­பனை’ என்­றார்­கள். நிலத்­தின் இயல்­புக்கு தகுந்­த­வாறு மக்­க­ளின் வாழ்க்கை முறை­யும் பண்­பா­டும் அமை­யும் என்­பதை வைத்தே பண்­பாட்டை ‘முதற்­பொ­ருள்’ என்று சொன்­ன­வன் தமி­ழன். இத்­த­கைய முதற்­பொ­ருள் பண்­பாட்டு விழு­மி­யங்­க­ளைக் கண்­டெ­டுத்து உல­குக்கு உணர்த்­தும் பணியை தன்­ப­ணி­யாய் மேற்­போட்­டுக் கொண்­டுள்­ளார் முத­ல­மைச்­சர் அவர்­கள். அவ­ருக்­குக் தாய்­ம­டி­யான கீழடி கிடைத்­துள்­ளது.தமி­ழுக்­கும் தமி­ழி­னத்­துக்­கும் தமிழ்­நாட்­டுக்­கும் சொல்­லி­ய­லாக மட்­டும் இருந்த பெரு­மையை தொல்­லி­ய­லாக அடை­யா­ளப் படுத்­தி­விட்­டார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

கீழடி ஆய்வுகளை உலக மக்­கள் மத்­தி­யி­லும் கொண்டு சேர்த்துவிட்டார் முத­ல­மைச்­சர் -முரசொலி புகழாரம் !

கீழ­டி­யில் கிடைத்த ஆதா­ரங்­கள்தான் இந்த வர­லாற்று வழித்­த­டத்தை மீண்­டும் புதுப்­பித்­துள்­ளது. அழ­கன்­கு­ளம், கொற்கை, சிவ­களை, ஆதிச்­ச ­நல்­லூர், கொடு­ம­ணல், மயி­லா­டும்­பாறை, கங்­கை­கொண்ட சோழ­பு­ரம் ஆகிய இடங்­க­ளில் ஆய்­வு­கள் இப்­போது மீண்­டும் சிறப்­பா­கத் தொடங்க இருக்­கி­றது.

‘தண் பொருநை’ என்று அழைக்­கப்­பட்ட தாமி­ர­ப­ரணி ஆற்­றங்­கரை நாக­ரி­கம் மூவா­யி­ரத்து இரு­நூறு ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது என்­பதை அறி­வி­யல்­பூர்வ ஆய்­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கீழடி ஆய்வுகளை உலக மக்­கள் மத்­தி­யி­லும் கொண்டு சேர்த்துவிட்டார் முத­ல­மைச்­சர் -முரசொலி புகழாரம் !

* கீழடி மற்­றும் அத­னைச் சுற்­றி­யுள்ள இடங்­கள் (கொந்­தகை, அக­ரம்,

மண­லூர்), சிவ­கங்கை மாவட்­டம்

* சிவ­களை, தூத்­துக்­குடி மாவட்­டம்

* கங்­கை­கொண்­ட­சோ­ழ­பு­ரம், அரி­ய­லூர் மாவட்­டம்

* மயி­லா­டும்­பாறை, கிருஷ்­ண­கிரி மாவட்­டம்

* வெம்­பக்­கோட்டை, விரு­து­ந­கர் மாவட்­டம்

* துலுக்­கர்­பட்டி, திரு­நெல்­வேலி மாவட்­டம்

* பெரும்­பாலை, தர்­ம­புரி மாவட்­டம்- – முதல் கட்­டம் –- ஆகிய ஏழு இடங்­க­ளில் விரி­வான ஆய்­வு­களை நடத்­து­வ­தற்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் உத்­த­ர­விட்­டார்­கள்.

* கீழ­டிக்கு அரு­கில் அக­ரம் அக­ழாய்­வுத் தளத்­தில் சேக­ரிக்­கப்­பட்ட மண் மாதி­ரி­களை ஆய்வு செய்தபோது அங்கே நெல்­ம­ணி­கள் பயி­ரி­டப்பட்­ட­தற்­கான சான்­று­கள் கிடைத்­தி­ருக்­கின்­றன.

* சிவ­களை வாழ்­வி­டப் பகு­தி­யில் சேக­ரிக்­கப்­பட்ட மண் மாதி­ரிகளை ஆய்வு செய்­த­தில் அங்கே நீர் செல்­லும் செங்­கல் வடி­கா­லில் நன்­னீர் சென்­றுள்­ள­தும், தேக்கி வைக்­கப்­பட்ட நீர் நிலை­யில் இருந்து இந்­நீர் கொண்டு வரப்­பட்­ட­தா­க­வும் தெரிய வந்­துள்­ளது.

* கிருஷ்­ண­கிரி மாவட்­டம் மயி­லா­டும்­பா­றை­யில் கிடைத்த பொரு­ளா­னது கி.மு. 1615 – - கி.மு. 2172 என காலக்­க­ணக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அதன்­படி தமிழ்­நாட்­டில் இரும்­பின் பயன்­பாடு 4200 ஆண்­டு­க­ளுக்கு முந்­தை­யது எனக் கணக்­கீடு செய்­யப்பட்­டுள்­ளது. இந்­திய அள­வில் செய்­யப்­பட்ட ஆய்­வு­க­ளின் படி, காலத்­தால் முந்­தி­யது மயி­லா­டும்­பாறை தான். இப்­படி தொடர்ச்­சி­யாக வர இருக்­கின்­றன. இவற்றை ஆய்­வா­ளர்­க­ளுக்­குள் மட்­டுமே வைத்­து­வி­டா­மல் தமிழ் மக்­க­ளோடு சேர்த்து உலக மக்­கள் மத்­தி­யி­லும் கொண்டு சேர்த்­து­விட்­டார் முத­ல­மைச்­சர்.

- தொட­ரும்.

banner

Related Stories

Related Stories