முரசொலி தலையங்கம்

“ஓராண்டு நிறைவடைந்த ரஷ்யா, உக்ரைன் போர்; இனியும் தொடர்வது நியாயமல்ல”: மனசாட்சியை தட்டி எழுப்பும் முரசொலி!

ஆனால் ஓராண்டு காலமாக போர் நடந்திருக்கிறது. இனியும் அது தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை!

“ஓராண்டு நிறைவடைந்த ரஷ்யா, உக்ரைன் போர்; இனியும் தொடர்வது நியாயமல்ல”: மனசாட்சியை தட்டி எழுப்பும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

போர் தொடர்வது நியாயமல்ல!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. போர் நிறைவடையவில்லை. போர் எந்த நோக்கத்துக்காக நடத்தப்பட்டாலும் அதில் மரணிப்பது அப்பாவி மக்கள்தான். இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 16 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக உக்ரைன் அரசு சொல்கிறது. உக்ரைன் ராணுவ வீரர்களும், ரஷ்ய ராணுவ வீரர்களும் பலியாகி இருக்கிறார்கள். இந்த ஓராண்டு காலத்தில் உக்ரைனின் குறிப்பிட்ட பகுதிகள் ரஷ்யாவின் வசம் வந்துள்ளன.

‘’ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்து எங்களது படைகளை தீவிரப்படுத்த இருக்கிறோம். இனி ரஷ்ய படையினர் மீதான பதிலடி தாக்குதல்கள் தீவிரப் படுத்தப்படும்’’ என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி சொல்லி இருக்கிறார். ரஷ்யாவை மிகக்கடுமையாக எதிர்கொள்ள உக்ரைனும் தயாராகி வருகிறது என்பதையே இது காட்டுகிறது.

“ஓராண்டு நிறைவடைந்த ரஷ்யா, உக்ரைன் போர்; இனியும் தொடர்வது நியாயமல்ல”: மனசாட்சியை தட்டி எழுப்பும் முரசொலி!

உக்ரைனுக்கு உதவும் போர்வையில் உள்ளே பல நாடுகள் நுழையத் தொடங்கி இருக்கின்றன. அந்த நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணம் மேற்கொண்டு, 50 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவப் பொருள்களை அளிக்க இருப்பதாக உறுதி அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் அதிபரும், அமெரிக்கா சென்று திரும்பி இருக்கிறார்.

உக்ரைனுக்கு முதல் ஐரோப்பிய பீரங்கி வந்துள்ளது. ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட பீரங்கி இது. போலந்து நாடு வாங்கி, அதனை உக்ரைனுக்குத் தந்துள்ளது. போலந்து பிரதமரும் உக்ரைனுக்கு வந்து தங்களது நாட்டு ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். ஜெர்மனி நாடும் உக்ரைனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. மேலும் சில ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு தனது ஆதரவைத் தந்துள்ளன.

“ஓராண்டு நிறைவடைந்த ரஷ்யா, உக்ரைன் போர்; இனியும் தொடர்வது நியாயமல்ல”: மனசாட்சியை தட்டி எழுப்பும் முரசொலி!

ஐரோப்பிய நாடுகள் நேரடியாக போருக்குள் நுழையாவிட்டாலும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. ஆயுதங்களையும் நிதி உதவிகளையும் செய்து வருகின்றன. ‘உள்ளூர் பிரச்சினையை மேற்கத்திய நாடுகள் உலகப் பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கின்றன’ என்று ரஷ்ய அதிபர் புதின் சொல்லி இருக்கிறார். உலகப் பிரச்சினையாக ஆக்காமல் புதினும் பார்த்துக் கொள்ள வேண்டும்தானே?

இது ரஷ்யா ஒரு பக்கமும் - உக்ரைன் இன்னொரு பக்கமுமாக உலக நாடுகளை பிளவுபடுத்தும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றன. இது ரஷ்யா, உக்ரைனுக்கு மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் நல்லதல்ல. இந்தப் பிளவு அதிகம் ஆனால், ஆபத்துகள் அனைத்தையும் அனைத்துலக நாடுகளும் எதிர்கொள்ள வேண்டி நேரும்.

“ஓராண்டு நிறைவடைந்த ரஷ்யா, உக்ரைன் போர்; இனியும் தொடர்வது நியாயமல்ல”: மனசாட்சியை தட்டி எழுப்பும் முரசொலி!

நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தப் போர் அனைத்து நாடுகளையும் பாதித்து வருகிறது. இதில் அரசியல் பாதிப்புகளும் உண்டு. பொருளாதாரப் பாதிப்புகளும் உண்டு. உக்ரைனுக்குப் படிக்கப் போன தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை இழந்து நிற்பதும் இதில் ஒரு முகம் தான்.

பொருளாதாரச் சங்கிலி அறுபட்டுள்ளது. எரிபொருள் விலை கூடிவருகிறது. தட்டுப்பாடும் இதில் உண்டு. எனவே, இந்தப் போர் தொடர்வது நியாயமல்ல. இந்தப் போர் தொடர்வது, பல்லாண்டு பின்னடைவுக்கே வழிவகுக்கும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கப்பட்ட 25.2.2022 அன்று ‘முரசொலி’யில் எழுதிய தலையங்க வரிகளே இன்றும் பொருத்தமானவையாக இருக்கின்றன.

“ஓராண்டு நிறைவடைந்த ரஷ்யா, உக்ரைன் போர்; இனியும் தொடர்வது நியாயமல்ல”: மனசாட்சியை தட்டி எழுப்பும் முரசொலி!

‘’இந்தத் தாக்குதலை உடனே நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இவற்றில் நல்ல நோக்கம் கொண்ட நாடுகளும் உண்டு. நல்லவர்களைப் போல நடிக்கும் நாடுகளும் உண்டு. ரஷ்யாவை மையம் கொண்டு விமர்சிப்பதன் மூலமாக கம்யூனிச நாடுகளையும் தத்துவத்தையும் விமர்சிக்கும் தந்திரத்தையும் சிலர் செய்யத்தான் செய்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்காத வகையில் ரஷ்யாவும் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல், ரஷ்யாவை விமர்சிப்பதும் கம்யூனிசத் தத்துவத்தை விமர்சிப்பதாகவும் ஆகாது.

டான்பாஸ் மக்கள் குடியரசு உதவிகோரி ரஷ்யாவை நாடியதால் அது தொடர்பாக நான் தலையிட்டேன் என்று புதின் சொல்லி இருக்கிறார். உக்ரைன் நாட்டில் இனப்படுகொலை நடப்பதாகவும், அந்த மக்களைக் காக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார். இது அந்த நாட்டின் உள் விவகாரம். அதில் ரஷ்யா தலையிடுவதை உலக நாடுகள் கண்டிக்கின்றன. இதற்கு ரஷ்யா சொல்லும் சமாதானங்கள் சரியானதாக இல்லை. பிரிவினை சக்திகள், எதிரி நாடுகளின் தயவை எதிர்பார்ப்பதும், அவர்கள் உதவியை நாடுவதும் எல்லா நாட்டுப் பிரச்சினைகளிலுமே உண்டு. அந்த ஆக்கிரமிப்பை, ‘உதவி’யாகப் பார்க்க முடியாது. அர்த்தப்படுத்த முடியாது.

“ஓராண்டு நிறைவடைந்த ரஷ்யா, உக்ரைன் போர்; இனியும் தொடர்வது நியாயமல்ல”: மனசாட்சியை தட்டி எழுப்பும் முரசொலி!

பெரும் நாடுகள் தங்களது அடங்காத ஆசைகளை இது போன்ற சிறிய நாடுகளில் தீர்த்துக் கொள்ளுதல் பல்வேறு இடங்களில் நடக்கிறது. ‘’வெளியில் இருந்து எந்த நாடாவது தலையிட நினைத்தால் அந்த நாடு வரலாற்றில் சந்தித்ததை விட பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று புதின் சொல்லி இருக்கிறார். வெளியில் இருந்து தலையீடு இல்லாமல் எந்த நாடும் இன்றைய சூழலில் போரை நடத்த முடியாது. போர்களுக்கு நியாயங்கள் இருக்கலாம்.

ஆனால் போரை நியாயவாதிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்வது இல்லை. அது அநியாயவாதி களுக்குத்தான் அதிகம் பயன்படும். இதனை புத்தின் போன்றவர்கள் உணராமல் இருப்பது சரியல்ல. இந்தப் பிரச்சினையை சில நாடுகள் தங்களது உள்நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பதால் இந்தப் பிரச்சினையை சோவியத் தவிர்ப்பதே பொதுவாக நல்லது” என்று எழுதி இருந்தோம். ஆனால் ஓராண்டு காலமாக போர் நடந்திருக்கிறது. இனியும் அது தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை!

- முரசொலி தலையங்கம் (27.02.2023)

banner

Related Stories

Related Stories