முரசொலி தலையங்கம் (03.12.2022)
விசாரணையைத் தொடரலாம்!
சில நாட்களுக்கு முன்னால் மகாயோக்கிப் போல பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தார் முன்னாள் அமைச்சர் மணியான வேலுமணி.
தி.மு.க. ஆட்சியை மக்கள் விரட்டத் தயாராகி விட்டார்களாம். இவரது எட்டாம் அறிவுக்கு எட்டிவீட்டது தன் மீதான வழக்குகளைப் பார்த்து மிரண்டு கிடக்கும் அவர் இப்படித்தானே பேட்டிகள் கொடுக்க முடியும் அவரது பிதற்றலுக்கு என்ன காரணம் என்பதை இரண்டு நாட்களுக்குப் பின்னர் மக்கள் அறிந்துகொண்டார்கள்.
"வேலுமணி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உறுதிப்படுத்திவிட்டது உயர்நீதிமன்றம் கூடுதல் ஆதாரங்கள் கிலடத்தால், டெண்டர் வழக்கையும் நடத்தலாம் என்றும் உயர்நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. புலன் விசாரணை அதிகாரி தனது பணிகளைத் தொடரலாம் என்றுதான் நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.
கூடுதல் ஆதாரங்கள் கிடைத்தால் டெண்டர் வழக்கை நடத்தலாம்' என்று நீதிமன்றம் சொன்னதை, 'ரத்து' என்று செய்தி போட்டு சில பத்திரிக்கைகள் மகிழ்கின்றன. தங்களது விசுவாசத்தைக் காட்டுகின்றன. தீர்ப்பை முழுமையாகப் படிக்காமல் அந்தப் பக்கம் விசுவாசத்தை மட்டும் முழுமையாகக் காட்டுகிறார்கள் இவர்கள்.
டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீ க்காரமன் ஆகியோர் இது தொடர்பாக டெக்னிக்கள் ஆன கருத்துக்களையே சொல்லி இருக்கிறார்கள்.
வேலுமணி மீதான புகார்களைப் பார்க்கும்போது டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பது தெளிவாகத் தெரிவதாகவும், ஆனால் அமைச்சர் என்ற முறையில் டெண்டரை அவரே பரிசீலித்து முடிவெடுத்தார் என்பது புகார் செய்தவர்களின் தரப்பு வழக்காக இல்லை" என்றே நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.
தரப்பட்ட புகார்களிலும் மாநகராட்சி தலைமைப் பொறியாளர். கண்காணிப்புப் பொறியாளர்கள்தான் டெண்டர் வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். முதல் தகவல் அறிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரையில், தற்போதைய நிலையில் விசாரிக்க உரிய முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் கூறவில்லை என்றும் சொல்லி இருக்கிறது நீதிமன்றம். வேலுமணிக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளனர்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னணித் தலைவருக்கு எதிராக பழிவாங்கும். நோக்கில் ஆளும்கட்சி வழக்குப்பதிவு செய்வது எளிதானது என்றாலும், குற்றச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். காவல்துறை அதிகாரத்தை ஒருசாராருக்கு ஆதரவாகப் பயன்படுத்தும்போது. நீதிமன்றத்தால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.
மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருக்காமல், நேரடியாக ஏன் வழக்குப் பதிவு செய்திருக்கக் கூடாது எனவும் உத்தரவில் கேள்வி எழுப்பி உள்ளனர்.
வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைக்கு முன்பே அரசிடம் அனுமதி பெற வேண்டுமெனவும். அவ்வாறு விசாரணை நடத்தும்போது வேலுமணி செல்வாக்கைச் செலுத்தி இருப்பது கண்டறியப்பட்டால் அவர்மீது வழக்குப் பதிவு செய்திருக்கலாம் என்றும், நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.
அதேசமயம், வழக்கின் புலன் விசாரணை அதிகாரிதனது விசாரணையைத் தொடரலாம் என்றும், அதில் வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டால், குற்றப்பத்திரிகையில் அவரைச் சேர்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
"we make it abundantly clear that it is open to the investigating officer to proceed with the investigation and if he gathers any fresh materials to implicate s. p. velumani in the process of awarding contracts to A2 to A12. he can be arrayed as an accused in the final report"
இதுவே தீர்ப்பின் சொற்கள் ஆகும்.
அதாவது, “டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணை அதிகாரி மேற்கொண்டு. விசாரணை நடத்தி எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புதிதாக ஆவணங்கள் கிடைத்தால் மீண்டும் அவரை இந்த வழக்கில் சேர்த்து, வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யலாம்" என்ற அனுமதியையும் உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. தீர்ப்பின் உள்ளடக்கத்தை முழுமையாக அறியாமல், 'ரத்து' என்று ஊடகங்கள் பெரிதாக்கிக் கொண்டன.
வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 'இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அவர். இதனை முழுமையாக நிராகரித்துவிட்டது நீதிமன்றம்.
"என்னுடைய சொத்துகள்பற்றி முறையாக தேர்தல் ஆணையத்தின் வேட்புமனுவில் சொல்லி இருக்கிறேன்” என்று வேலுமணி தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. 'இதையெல்லாம் விசாரணை நீதிமன்றத்தில் சொல்லுங்கள் என்று உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சொல்லி. வேலுமணியின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம்.
அ.தி.மு.க.ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமியின் எடுபிடிகளாக வலம் வந்த வேலுமணி, தங்கமணி, இரண்டு விஜயபாஸ்கர்கள், வீரமணி, கே.பி. அன்பழகன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களையும் பணத்தையும் கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த வழக்குகள் நடந்து வருகின்றன. இவை அனைத்தும் விசாரணை நீதிமன்றத்துக்கு விரைவில் வர இருக்கின்றன. இவை அனைத்துக்கும். பச்சைக் கொடி காட்டுவதாக எஸ்.பி.வேலுமணி வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளது.
"உங்கள் மீது ஊழல் புகார் சொல்லப்பட்டுள்ளதே?' என்று கேட்கப்பட்டபோது, 'யார்மீதுதான் ஊழல் புகார் இல்லை' என்று சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. அவர் மீதான 4800 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கும் சென்னை உயர்த்திமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு இது.
இப்படி மொத்த கும்பலும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.