முரசொலி தலையங்கம்

"அம்மாவின் ஆவி பலி வாங்கிவிட்டது என்று சூனியக்காரரை போல பேட்டி கொடுத்தவர்தான் பழனிசாமி" - முரசொலி தாக்கு!

"அம்மாவின் ஆவி பலி வாங்கிவிட்டது" என்று சூனியக்காரரைப் போல பேட்டி கொடுத்தவர்தான் இந்த பழனிசாமி. இவருக்கு ஆளவும் தெரியாது, ஆள்வோரின் நல்லெண்ணமும் புரியாது!" என்று முரசொலி கடுமையாக தாக்கியுள்ளது.

"அம்மாவின் ஆவி பலி வாங்கிவிட்டது என்று சூனியக்காரரை போல பேட்டி கொடுத்தவர்தான் பழனிசாமி" - முரசொலி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

234 தொகுதிக்கும் !

234 தொகுதியையும் தனது தொகுதியாக நினைத்து முதலமைச்சர் அவர்கள் தீட்டியிருக்கும் திட்டம் உண்மையில் இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டம் ஆகும். 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை அனைத்துத் தொகுதிக்கும் விரிவுபடுத்தியதன் மூலமாக அனைத்துத் தொகுதிக்கும் நானே சட்டமன்ற உறுப்பினர் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

கோவையில் நடந்த மாநாடு போன்ற அரசு விழாவில் இது குறித்து முதலமைச்சர் அவர்கள் விரிவாகப் பேசி இருக்கிறார்கள். கோவை செல்வதற்கு முன்னதாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் ஒரு கடிதத்தை அனுப்பி இருக்கிறார்கள். அதனை மக்களுக்கு நினைவூட்டி பேசி இருக்கிறார்கள்.

"எனது கொளத்தூர் தொகுதியைப் போலவே எல்லார் தொகுதிகளையும் நான் நினைக்கிறேன். உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை 234 தொகுதிக்கும் விரிவுபடுத்தி இருக்கிறேன். அதற்கான கடிதத்தைத்தான் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி இருக்கிறேன்.

"அம்மாவின் ஆவி பலி வாங்கிவிட்டது என்று சூனியக்காரரை போல பேட்டி கொடுத்தவர்தான் பழனிசாமி" - முரசொலி தாக்கு!

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்க்கும் அவரது தொகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு இருக்கிறது. சில தேவைகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்திட இயலாத நிலை இருக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியப் பணிகள் குறித்து அந்தந்தத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, இவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட இத்திட்டத்தின் படி உத்தரவிட்டுள்ளேன்.

"அம்மாவின் ஆவி பலி வாங்கிவிட்டது என்று சூனியக்காரரை போல பேட்டி கொடுத்தவர்தான் பழனிசாமி" - முரசொலி தாக்கு!

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், தங்கள் தொகுதியின் முக்கியமான பத்து திட்டங்களின் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கலாம். பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளேன்.

மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அடுத்த 15 தினங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று முதலமைச்சர் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

"அம்மாவின் ஆவி பலி வாங்கிவிட்டது என்று சூனியக்காரரை போல பேட்டி கொடுத்தவர்தான் பழனிசாமி" - முரசொலி தாக்கு!

முதலமைச்சர் தொகுதி என்பதால் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. அமைச்சர் என்பதால் சிறப்பு கவனிப்பு இருக்கிறது. ஆளும்கட்சி உறுப்பினர் என்பதால் முக்கியமாகப் பார்க்கிறார்கள் என்று குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான திட்டம் இது. அ.தி.மு.க. உறுப்பினராக இருந்தாலும், பா.ஜ.க. உறுப்பினராக இருந்தாலும் அவர் தனது தொகுதியில் நீண்ட காலப் பிரச்சினை இருக்குமானால், நிறைவேறாத திட்டமாக இருக்குமானால் அதனை இதில் கொண்டு வந்து சேர்த்து அதனை நிறைவேற வைக்கலாம்.

"அம்மாவின் ஆவி பலி வாங்கிவிட்டது என்று சூனியக்காரரை போல பேட்டி கொடுத்தவர்தான் பழனிசாமி" - முரசொலி தாக்கு!

அந்த சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் இணைந்து முடிவெடுக்கலாம். அவர்கள் இருவரும் சேர்ந்து அரசுக்குச் சொன்னால், அது நிறைவேற்றித் தரப்படும். அந்த வகையில் மகத்தான திட்டம் இது.

  • குடிநீர் மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தக் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள்,

  • வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்குரிய பணிகள்,

  • இணைப்புப் பாலங்கள் மற்றும் சாலைகள்,

  • மருத்துவ வசதிகள், பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. போன்ற புதிய நிறுவனங்கள் அல்லது தற்போதுள்ள கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் உட்கட்டமைப்புப் பணிகள்,

  • தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய வசதிகள்.

  • மின்மயானம், நவீனநூலகம் நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள், புதிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகள்

  • சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகள்

- என்று இதனை வரையறுத்துள்ளார் முதலமைச்சர். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இது ஒரு மகத்தான வாய்ப்பு ஆகும்.

"அம்மாவின் ஆவி பலி வாங்கிவிட்டது என்று சூனியக்காரரை போல பேட்டி கொடுத்தவர்தான் பழனிசாமி" - முரசொலி தாக்கு!

'வாக்களித்தவர்க்கு மட்டுமல்ல. வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்துதான் நான் முதலமைச்சர்' என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி உச்சரித்து வருகிறார்கள். அது வெறும் வாய்வார்த்தை அல்ல. இதயத்தின் அடியாழத்தில் இருந்து சொல்வது என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தக் கடிதம்.

'நாங்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது' என்று இனிச் சொல்ல முடியாது. அவர்கள் தொகுதிக்கான திட்டத்தைக் கொடுத்து அவர்களே நிறைவேற்ற வைத்துக் கொள்ளலாம்.

உண்மையான அக்கறை மக்கள் மீது இருக்குமானால், தான் வெற்றி பெற்ற தொகுதி மீது இருக்குமானால் அவர்களுக்கு நன்மை செய்ய பெரும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக நினைத்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இந்தத் திட்டத்தை வரவேற்றிருக்க வேண்டும். அய்யோ பாவம்! அ.தி.மு.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறோம் என்பதே அவருக்கு இப்போது நினைவில் இருக்காது. அந்தளவுக்கு சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கும் அவர், ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்.

"அம்மாவின் ஆவி பலி வாங்கிவிட்டது என்று சூனியக்காரரை போல பேட்டி கொடுத்தவர்தான் பழனிசாமி" - முரசொலி தாக்கு!

"நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? கொலைகள் அதிகமாகி விட்டது" என்று அறிக்கை கொடுத்திருக்கிறார் பழனிசாமி. அப்படி எதுவும் அதிகமாகிவிடவில்லை . 'கொலைகள்' என்றால் இவர் ஏன் பதறுகிறார். இவரது ஜீவகாருண்ய சிந்தனையைத்தான் நாடு பார்த்ததே!

பழனிசாமிக்கும். பன்னீருக்குமான கும்மாங்குத்துச் சண்டையில் அ.தி.மு.க. தலைமைக் கழகம் உடைக்கப்பட்டது.

"எங்கள் அலுவலகத்தை உடைத்த ஒருவர் விபத்தில் செத்துவிட்டார். இன்னொருவருக்கு இரண்டு காலும் போய்விட்டது. அம்மாவின் ஆவி பலி வாங்கிவிட்டது" என்று சூனியக்காரரைப் போல பேட்டி கொடுத்தவர்தான் இந்த பழனிசாமி. இவருக்கு ஆளவும் தெரியாது, ஆள்வோரின் நல்லெண்ணமும் புரியாது!

banner

Related Stories

Related Stories