முரசொலி தலையங்கம்

பெரியார், அண்ணா பெயர்கள் மாற்றம்: தமிழ்நாட்டை போராட்டச் சூழலுக்கு தள்ளிவிடாதீர் - முரசொலி எச்சரிக்கை!

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் வேளையில் வேறு ஏதோ திட்டத்தோடுதான் மத்திய பாஜக அரசு பெரியார், அண்ணா, காமராசர் சாலைகளின் பெயர்களை மாற்றியிருக்கக் கூடும் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

பெரியார், அண்ணா பெயர்கள் மாற்றம்: தமிழ்நாட்டை போராட்டச் சூழலுக்கு தள்ளிவிடாதீர் - முரசொலி எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்காக மக்கள் ஆவலோடுஎதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்டவாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பில் இருக்கின்றன. இந்த நேரத்தில் பெரியார்,பேரறிஞர் அண்ணா, தியாகச்சுடர் காமராஜர் பெயரால் உள்ள சாலைகளின்பெயர்கள் மத்திய நெடுஞ்சாலைத் துறையினரின் இணையதளத்தில்வேண்டுமென்றே அதன் பழைய பெயர்களால் பதிவிடப்படுகின்றன.

இரண்டாவதாக, இந்து அறநிலையத் துறையிடமிருந்து கோயில்களின்நிர்வாகத்தை மீட்டு புதியதாக உருவாக்கும் குழுக்களிடம் தருவது போன்றதேவையற்ற முழக்கம் இப்போது எழுப்பப்படுகிறது. சாலைகளின் பெயர் மாற்றநிகழ்வும், கோயில்களைப் பற்றிய சர்ச்சையும் இப்போது கிளப்பப்படுவானேன்?சர்ச்சையைக் கிளப்புபவர்கள் யார் என்ற எண்ணம் மக்களிடம் இயல்பாகவேதோன்றுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

அது எதற்கு என்று நமக்குப்புரியாமலும் இல்லை.வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பில் இருக்கும் தருணத்தில், முடிவுக்காகமக்கள் காத்திருக்கும் காலகட்டத்தில் இப்படிப்பட்ட வீண்சர்ச்சைகள்கிளப்பி விடப்படுவது - மக்களைத் திசைத் திருப்பி விட்டு வேறொருகாரியத்தை மிக எளிதாக ஆளுங் கட்சியினர் செய்து விடுவரோ என்கிறஅச்சத்தை மக்களுக்குத் தோற்றுவித்துள்ளது.

அதாவது, வாக்குஇயந்திரங்கள் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைதான் அது! இதில் தில்லுமுல்லுஏதாகிலும் செய்வார்களோ அதற்காக இப்படி எல்லாம் திசை திருப்பல்களைஉண்டு பண்ணுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. மத்திய பா.ஜ.க.அரசின் மீது நமக்கு அப்படி ஓர் அய்யம் ஏற்படுகிறது.பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குப் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்றுஎம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் 1979 -இல் பெரியார் நூற்றாண்டின்போது சூட்டப்பட்டது.

பெரியார், அண்ணா பெயர்கள் மாற்றம்: தமிழ்நாட்டை போராட்டச் சூழலுக்கு தள்ளிவிடாதீர் - முரசொலி எச்சரிக்கை!

மவுண்ட் ரோடு அண்ணாசாலை என்றும், கடற்கரை சாலைகாமராஜர் சாலை என்றும் கலைஞர் காலத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.ஆனால், இப்போதோ தேசிய நெடுஞ்சாலையின் இணையதளத்தில் பெரியார்ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை என்பதற்குப் பதிலாக ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’எனும் பெயர் இடம் பெற்று இருக்கிறது. அண்ணா சாலை என்பதற்குப் பதிலாக,‘கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு’ என்றும், காமராஜர் சாலை என்பதற்குப் பதிலாக‘கிராண்ட் நார்தன் டிரங்க் ரோடு’ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

இம்மூன்று பெரும் சாலைகளும் மொகலாயர் காலத்தில்உருவாக்கப்பட்டன. 1850ஆம் ஆண்டு பிரிட்டிஷார் காலத்தில் இவற்றுக்குப்பெயர்கள் சூட்டப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரிஒருவர், பெயர்ப் பலகையில் பழைய பெயர் இருப்பதால் எந்தத் தவறும்இல்லை என்று கூறியிருக்கிறார். பழைய பெயர்களை மீண்டும்இணையதளத்தில் உலவ விடுவதும், பெயர்ப் பலகையில் எழுதச் செய்வதும்எப்படிச் சரியானதாக இருக்க முடியும்?பழைய பெயர்கள் அப்படியே இருந்து விடுவதில்லை. அவை பேச்சு வழக்கில்திரிபு ஏற்பட்டு மாறிவிடும்.

சில சமயம் அரசு அவற்றையே புதிய பெயர் சூட்டிஅழைக்கும் அல்லது பெயர் மாற்றம் செய்யும். இது வெல்லாம் தவிர்க்க முடியாததுஆகும். வரலாற்றில் பேசப்படுவன ஆகும். புத்தர் காலத்து பழம் பெயர்கள் எல்லாம்மாற்றப்பட்டு இருப்பதை இன்றும் வரலாற்று ஏடுகளில் காணலாம்.இப்போது அதேநிலை தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் அனுமதித்தேஆக வேண்டும். அலகாபாத் எனும் பெயரை உ.பி.யின் முதல்வர் யோகிஆதித்தியநாத ‘பிரயாக் ராஜ்’ என்று மாற்றியிருக்கிறார். அது பழம் பெயர் என்றுசொல்லப்பட்டு இப்போது தொடருகிறது. பழைய பெயர்களாக இருந்த மெட்ராஸ்,பம்பாய், கல்கத்தா ஆகியவை முறையே சென்னை, மும்பை, கொல்கத்தா என்றுமாற்றப்பட்டு உள்ளன.

ரயில்வே உண்டாக்கப்பட்ட காலத்திலிருந்து ‘மெட்ராஸ்சென்ட்ரல் ஸ்டேஷன்’ என்று இருந்து வந்ததை இன்றைய மத்திய அரசு ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் மெட்ராஸ் சென்ட்ரல் ஸ்டேஷன்’ என்று பெயர்மாற்றம் செய்து இருக்கிறது. அப்படித்தான் தி.மு.க. ஆட்சிக் காலத்திலும்அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலும் பெயர் மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன.

நாம் இதுவரை எடுத்துக் கூறியவற்றிலிருந்து பழையது, புதியது என மாறி மாறிபெயர் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அப்படி ஒரு மாற்றத்திற்குத் தேவை ஏற்படும்போது, அது மிக முக்கியத்துவம் பெறும் நிகழ்வாகி விடுகிறது. ஆவணங்களில்பதிவாகி விடுகின்றன. பழைய பெயர்களும் ஆவணங்களில் இடம் பெற்றுஇருக்கின்றன. ஆனால், அதேநேரத்தில் ஆவணங்களில் உள்ள பழம் பெயர்கள்புதியவை இருக்கும்போதே மீண்டும் நடைமுறைக்கு வருமானால், அவைபெருங்குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.

புதிய பெயர்கள், பழைய பெயர்கள் என்றமாற்றங்கள் இந்தியா முழுமையும் நடைபெற்று இருக்கின்றன.இங்கே நமது பிரச்சினை என்ன? பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை,அண்ணாசாலை, காமராஜர் சாலை ஆகியவற்றின் பெயர்களை நீக்கிவிட்டுதேசிய நெடுஞ்சாலை இணையதளத்தில் உள்ள பழைய பெயர்களைஇப்போதைய பயன்பாட்டில் இருப்பதைப் போல குறிப்பிட்டுள்ளன. பெரியார்,அண்ணா, காமராஜரின் பெயர்களை இரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்சூட்டின. அப்படி மாற்றம் செய்யப்பட்ட பெயர்கள் மத்திய அரசின்நெடுஞ்சாலைத் துறை ஆவணங்களிலும் மாற்றம் செய்யப்பட வேண்டாமா?

அப்படி ஓர் ஏற்பாடு இல்லாமல் இருக்க முடியுமா? இல்லாமல் இருந்தால்புதியதாகப் பதிவிடுதலைத் தொடங்க வேண்டாமா?மாநில அரசு மூன்று சாலைகளின் பெயர்களை மாற்றி பல ஆண்டுகள்ஆகின்றன. மக்களின் பழக்கத்திற்கும் அவை வந்துவிட்டன. அதன்பிறகுமத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை இணையதளத்திலும், பெயர்ப்பலகையிலும் மாற்றம் செய்யப்படுமானால் அது என்ன வகையான நியாயம்என்று நமக்குப் புரியவில்லை.

அதற்கு அதிகாரத் தரப்பில் உள்ளவர்கள் பழம்பெயர்களைச் சாலைகளுக்கு சூட்டியதோடு மொகலாயர் காலத்தில்அமைக்கப்பட்டவை. பிரிட்டிஷார் காலத்தில் பெயர் சூட்டப்பட்டவை. பழம் பெயர்இருந்தால் என்ன தவறு? - என்று கேட்பதெல்லாம், ஒரு மாநில அரசின் கடந்தகால நிகழ்மையை வரலாறாகி விட்ட ஒரு நிகழ்வினை மீண்டும் அதிகாரிகள்வினா எழுப்புவது போன்றது ஆகும். இது ஒரு ஜனநாயக விரோதப் போக்கே.புதிய தமிழகத்தை உருவாக்கிய சிற்பிகளான பெரியார், அண்ணா,காமராஜரைப் புறக்கணிப்பதை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

இதற்குரிய வகையில் பழம் பெயர்களை நீக்கிவிட்டு தேசிய நெடுஞ்சாலைஇணைய தளத்தில் அரசு சூட்டிய பெயர்களை எப்போதும் போல் பயன்படுத்தமுன்வர வேண்டும்.தேர்தல் முடிவுக்கு ஆவலோடு காத்திருக்கும் இந்த நேரத்தில் அதிகாரிகள்இத்தகைய திசை திருப்பல்களை வேண்டுமென்றே செய்வதற்கு வாய்ப்பில்லை.இதன் பின்னணியில் மத்திய பா.ஜ.க. அரசு இருக்கிறது என்றே தோன்றுகிறது.இது விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாகத் தலையிட்டு பெரியார்,அண்ணா, காமராஜர் பெயர்களே சாலைகளுக்கு நீட்டிக்கச் செய்ய வேண்டும்.அதற்குரிய வகையில் ஆவன செய்ய வேண்டும். தமிழ்நாட்டை ஒரு போராட்டச்சூழ்நிலைக்குத் தள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

banner

Related Stories

Related Stories