முரசொலி தலையங்கம்

“மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளதை உணர்கிறேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

மக்களின் எண்ணம் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருப்பதை நான் உணர்கிறேன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளதை உணர்கிறேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உள்ள 88,937 வாக்குப்பதிவு மையங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதனையடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். அதன்படி, சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், மற்றும் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

முன்னதாக அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “ குடும்பத்துடன் வந்து எங்களது ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து கொண்டு இருப்பதாக செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. மக்களின் எண்ணம் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருப்பதை நான் உணர்கிறேன். மேலும், மே-2ம் தேதி வெளியாகும் முடிவு சிறப்பானதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழகம் முழுவதும் மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியடையச் செய்கிறது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் வாக்களித்தோம்! தேர்தல் ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் வரலாற்றை மாற்றி எழுதும்! எனவே கட்டாயம் வாக்களிக்கவும்; கொரோனா முன்னெச்சரிக்கை அவசியம்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories