கொல்கத்தா ராமகிருஷ்ணா மடத்தில் பிரதமர் அரசியல் பேசியதை அவர்களே விரும்பவில்லை. அதனால் தான் ராமகிருஷ்ணா மடத்தின் பொதுச் செயலாளர் சுவாமி சுவீரானந்தா, "நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அரசியல் சார்பற்றவர்கள்.
எங்கள் அமைப்பில் இந்து, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவ மதங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் ஒருதாய் மக்களை விடவும் மேலாக ஒற்றுமையும் வாழ்கிறோம்" என பிரதமர் மோடிக்கு பதிலளித்தார்.
குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, யார் குடியுரிமையும் பறிக்கப்படாது, யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற பொய்யையும் உதிர்த்துள்ளார்.
ராமகிருஷ்ணா மடத்திற்குச் சென்று பொய் சொல்வதா? குதர்க்க வாதம் வைப்பதா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.