முரசொலி தலையங்கம்

“குடியுரிமை மசோதா மூலம் வெறுப்பு விதைகளை தூவும் பா.ஜ.க ” : – முரசொலி தலையங்கம்!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு, ஆளும் உரிமை தங்களுக்கு கிடைத்த பிறகு குடிமக்களின் உரிமைகளைப் படிப்படியாக பறிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டதால் பல நூறு ஆண்டுகளாய் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தேசத்தில் ‘ஒற்றுமையில் வேற்றுமை’ காணும் வெறுப்பு விதைகளைத் தூவிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.

2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்துக்கள், பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், பார்சிக்கள் ஆகியோர் இந்த குடியுரிமை பெறுவதற்கு இந்த சட்டம் வழி செய்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் நல்லதுதானே என்று நினைக்கத் தோன்றும்.

இந்த நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் அகதிகளாக வந்தால் ஏற்கமாட்டோம் என்பதுதான் மதவிரோதச் சிந்தனை. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த அகதிகளை ஏற்கமாட்டோம் என்பது பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையாக இருக்கலாம்.

ஆனால் அது எப்படி இந்திய நாட்டின் கொள்கையாகும்? இந்தியா என்ன இந்து நாடாக அறிவித்துக் கொண்ட நாடா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

banner