முரசொலி தலையங்கம்

பிற்படுத்தப்பட்டோரை திட்டமிட்டு வஞ்சிக்கும் பா.ஜ.க அரசு - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் நமது நாட்டில் சமூக நீதி எந்த அளவுக்கு புறக்கணிக்கப்படுகிறது, இந்திய சமூகத்தில் மேல்தட்டில் இருக்கும் முன்னேறிய வகுப்பினர் எப்படியெல்லாம் தமது முன்னேற்றத்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன.

மண்டல் கமிஷன் பிற்படுத்தப்பட்டொருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிடப் பரிந்துரை செய்தது. தி.மு.க பங்கெடுத்துக் கொண்ட தேசிய முன்னணி ஆட்சி அமைந்த பிறகுதான் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களின் வற்புறுத்தல் காரணமாக 27% இடஒதுக்கீடு செயலாக்கத்திற்கு வந்தது. அதைச் செயல்படுத்தியவர் பிரதமராக இருந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் என்பது வரலாறு.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகும், 27% இட ஒதுக்கீடு மத்திய அரசுப் பணிகளில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது பெரும் அவலம் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

banner