மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ள கேவலங்களைப் பார்க்கும்போது, மக்களை எத்தகைய மடையர்களாக அவர்கள் நினைக்கிறார்கள் என்பது புரிகிறது. இதைத்தான் ‘தி டெலிகிராப்’ ஆங்கில நாளிதழ் ‘நாம் முட்டாள்கள்’ என்ற பொருளில் தனது தலைகுனிவை வெளிப்படுத்தியுள்ளது.
இதெல்லாம் யாருக்குச் சுடவேண்டுமோ அவர்களுக்குச் சுடாது. ஏனென்றால் தடித்த தோல் கொண்டவர்கள் அவர்கள். இதெல்லாம் ஜனநாயகமா? இல்லை இந்த நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஒருபோதும் இல்லை. இவர்கள் எல்லாம் அரசியல் சட்ட விழுமியங்களைப் பற்றி பேசலாமா? இந்தியாவை ஏழைகள் தேசம் என்பார்கள்.அது கூட அவமானம் இல்லை, முட்டாள்கள் தேசமாக ஆக்குகிறார்கள் இதுதான் மாபெரும் அவமானம் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.