அறிஞர் அண்ணா மும்மொழித் திட்டத்தை ஆதரித்தாரா? கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறை இருந்தாரா? ’முரசொலி’ நாளேடு இருக்கும் இடம் பஞ்சமி நிலமா? போன்ற நேர்மையற்ற விமர்சனங்களை ஊடகங்களின் மூலம் பரப்பி, நாட்டு மக்களின் முக்கிய பிரச்சனைகளில் இருந்து தப்பி ஒளிந்துகொள்ளப் பார்க்கிறது அ.தி.மு.க அரசு.
இப்படி போலியான செய்திகளை பரப்புவதில் அ.தி.மு.க-வின் அண்ணனான பா.ஜ.க-வோ இந்த யுக்தியை பயன்படுத்தி நாட்டையே ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். பொருளாதார வீழ்ச்சி, மும்மொழிக் கொள்கை மூலம் நாடு முழுவதும் இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது, காவி மயமாக்குதல் என இவர்களின் சூழ்ச்சிகளிலிருந்து மக்கள் விழித்துக்கொள்ளாமல் இருப்பதற்காகவே வதந்திகளை உண்மைகளைப் போல பரப்புவார்கள்.
இப்படிப்பட்ட ஆட்சியாளர்களின் இந்த ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ திட்டமே, சிறுபான்மை இஸ்லாமியரை குறிவைப்பதற்காக நடத்தும் திசை திருப்பும் முயற்சிதான் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.