சென்னை ஐ.ஐ.டி-யில் சாதி, மத ரீதியான ஆதிக்கமும் பாகுபாடும் இருப்பதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு எழுந்து வந்தது. பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, சிறுபான்மைச் சமூகங்களை சேர்ந்த மாணவர்களிடம் நிறுவனம் காட்டிய பாகுபாட்டினால் தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது. அதுவே மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் உயிரையும் பறித்துள்ளது.
ஆசிரியர் நியமனங்களிலும் ஆதிக்க சாதியினரின் அடாவடிகள். இதுபோன்று அனைத்து ரீதியிலும் சமூகநீதி சாய்ந்து போகும்போது, சென்னை ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் துயர் ஊற்றெடுக்கும் நிறுவனங்களாகி உயிர் பறிக்கும் நிறுவனங்களாகும் என்பதற்கு ஃபாத்திமாவின் மரணம் மற்றுமொரு சான்றாகும். இதிலிருந்தாவது பாடம் பெறுவாரா ஆளவந்தார்? நம்பிக்கை இல்லை நாட்டினர்க்கு! என முரசொலி குறிப்பிட்டுள்ளது.