கல்வி மேம்பாட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன, அதற்காக ஒதுக்கப்படும் தொகையைப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் முறைகேடுகளின் மூலம் கையாடல் செய்து வருகின்றனர். கையாடல் செய்த தொகை ரூ.17 கோடியே 36 லட்சமாகும். இந்த விவரம் தணிக்கை குழு வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது.
இதுகுறித்து விளக்கமளிக்க ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளரை உயர்நீதிமன்றம் ஆஜராக உத்தரவிட்டிருப்பதை முரசொலி குறிப்பிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் வெளியிட்ட சுற்றறிக்கையையே இல்லை என்கிறார்கள். ஆனால் நாளேடுகளில் நகல்களே வெளியாகிவிட்டன. உண்மை வெட்ட வெளிச்சமான பிறகும் மறுக்கிறீர்களே! இதைச்செய்ய உங்களுக்கு கொஞ்சம் கூட நாணமில்லையா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.