நீட் தேர்வினால் பலியான 7 உயிர்கள் உணர்த்த முடியாத உண்மையை, ஆள் மாறாட்டம் செய்த 7 பேர் கைது உணர்த்திவிட்டது. இதுவரை கைதான 7 பேர் மட்டுமல்லாது 'நீட்' தேர்வில் இதுவரை ஆள்மாறாட்டம் நடத்தி போலியாய் உள்ளே புகுந்தவர்கள் எத்தனை பேர்? இந்த ஆள்மாறாட்டத்திற்கு உதவி செய்யும் புரோக்கர்களுக்கும் நீட் தேர்வுகள் நடத்துபவர்களுக்கும் என்ன தொடர்பு? இதற்காக எவ்வளவு பணம் கைமாறியுள்ளது? உள்ளிட்டவைகளை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என முரசொலி தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக இப்படி திருட்டுச் சுவர் தாண்டி தேர்வு எழுதும் அவசியம் ஏன் வந்தது என்பதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். மொத்தத்தில் 'நீட்' என்பதே ஒரு சமூகக் குற்றம் என்பதை உணர்ந்து மத்திய அரசு தேர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் முரசொலி தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.