முரசொலி தலையங்கம்

பா.ஜ.க அரசு என்ன செய்தாலும் தமிழர்களின் தொன்மையை மறைக்க முடியாது! - முரசொலி தலையங்கம்  

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழை, தமிழரை முதன்மைப்படுத்துகிற கீழடி அகழாய்வை ஏன் மூன்றாம் கட்டத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்? கீழடி பணிகளை மேற்கொண்ட தொல்லியல் துறைகண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை ஏன் மாற்றம் செய்ய வேண்டும்? இதுவரை நிகழ்ந்த பணிக்கான ஆய்வு அறிக்கைகளை ஏன் மத்திய அரசு வெளியிடவில்லை? என்ற முக்கிய கேள்விகளை முரசொலி முன்வைத்துள்ளது. 5ம் கட்டத்தோடு ஆய்வு முடிவுபெற்று பணிகளை நிறுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள்.ஆய்வு தொடருமா, நீடிக்குமா என்று தெரியவில்லை.

மத்திய அரசு ஏன் எல்லாவற்றிலும் தமிழ்நாட்டுக்கு இடையூறு விளைவிக்கிறது என்றால், நாம் தொன்மை மிக்கவர்கள் என்பதை உலகில் நிலைநாட்டிவிடக்கூடாது என்பதற்காகவும், அந்தத் தொன்மை ஆர்.எஸ்,எஸ்., பா.ஜ.க., சங்பரிவார் வகையறாக்களின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் என்பதுதான். இவர்கள் தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்துவிடக்கூடாது என என்ன சூழ்ச்சி செய்தாலும் இமயமலையை துணிகொண்டு மூடிவைக்க முடியுமா என்ன?

banner