முரசொலி தலையங்கம்

வறுமையை ஒழித்து டாலரில் சிரிக்கும் சீனா! - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அமெரிக்காவோடு வணிகப்போர், ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிரான கிளர்ச்சி, திபெத் பிரச்சனை, இத்தனை சிக்கல்களுக்கு இடையே சீனாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நிறுவப்பட்ட ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. 1949ல் புரட்சிகர சீன அரசு அமைந்ததிலிருந்து, விவசாயம் தொடங்கி நாட்டு மக்களின் பிரச்சனைகள் அனைத்தையும் சீன கம்யூனிஸ்டுகள் கையில் எடுத்து பணியாற்றி வருகிறார்கள்.

இப்போது சீனா உலகப் பொருளாதாரத்தில் 2வது இடத்தை வகித்து டாலர்களில் சிரிக்கிறது, அமெரிக்கா சீனாவைக் கண்டு திணறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதன் விளைவாக 85 கோடி பேரை சீனா வறுமையிலிருந்து மீட்டிருப்பதாக உலக வங்கி அறிவித்திருக்கிறது. சீனாவும் இந்தியாவைப் போல பழம்பெரும் நாடு, ஆனால் புரட்சிக்குப் பின் அதன் முன்னேற்றம் நமக்கு அதிர்ச்சியை தருவதையும் நாம் மறக்கமுடியாது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

banner