மனிதக் கழிவுகளை கைகளாலே அகற்றித் தலையில் சுமந்து துப்புரவு தொழில் செய்து, கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிச் சுத்தப்படுத்தி, வாழ்வாதாரம் தேடும் பரிதாபமான ஆளாக்கப்படிருப்போர் அருந்ததிய மக்கள். அருந்ததியரின் பிழைப்புக்காக செய்யும் துப்புரவு தொழிலின் துயரம், சுயமரியாதை அடையாளம் ஏதுமற்ற அந்தத் தொழிலின் தன்மை கண்டு வாடிய கலைஞர், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மீட்க கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு என பல சலுகைகளை ஏற்படுத்தித் தந்தார். ஆனால் இன்றும் அருந்ததியர் மக்களின் வாழ்வு மீட்கப்பட வேண்டிய அவல நிலையில்தான் உள்ளது.
மனிதாபிமானமற்ற தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் அருந்ததியரை மீட்டு, அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என கலைஞரைப் போலவே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்மானமாகச் செயல்பட்டு வருவதை முரசொலி தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.