அமித்ஷாவின் இந்தி மொழியைத் திணிக்கும் முடிவுக்கு அ.தி.மு.க அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பா.ஜ.க-வை ஆதரிப்பது போலவே பேசினார். கீழடி நாகரிகத்தை தமிழ் நாகரிகம் என்று மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது, பாரதிய நாகரிகம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். இதற்கு பதிலளித்த தி.மு.க எம்.பி கனிமொழி, தமிழ் நாகரிகம் என்பது பாரதிய நாகரிகத்திற்கே அடிப்படை நாகரிகம் என்பதுதான் நாங்கள் முன்வைக்கும் கருத்து என பதிலளித்ததை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது. இது நம் வரலாற்று ஆய்வின் வெளிப்பாடாகும்.
ஓர் இன அடிப்படையில் அனைத்து இனங்களின் நாகரிக, பண்பாடாக எப்படி மாறிவிட முடியும்? ஆகவேதான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகம் அமைக்க, நமது பழம்பெரும் வரலாற்றை உறுதிசெய்ய கடிதம் எழுதியிருக்கிறார், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கைக் கடிதத்தை தக்க இடத்தில் கொண்டு சேர்த்துள்ளனர் . மாநில அமைச்சர் பாண்டியராஜனோ, அவரது கட்சியோ எந்த உறுதியிலும் இல்லை, எப்போதும் ஊசலாட்டம் தான். ஆனால் அவர்கள் வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் என முரசொலி தலையங்கம் சாடியுள்ளது.