இந்திய பொருளாதார கொள்கை அறிக்கையில், இனி இந்திய அரசு நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக நிதி முதலீடு செய்யாது என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய பா.ஜ.க அரசு தனியார்மயத்திற்கான பாதையில் தீர்மானமாகப் பயணிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம் என முரசொலி கூறியுள்ளது.
மத்திய பா.ஜ.க அரசின் மனம் கோணாமல் இருப்பதற்காக, அ.தி.மு.க அரசு குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து மின்சார வாரியத்தையும் தனியார் மயமாக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. மின்சாரம் தனியார்மயமானால், அது சந்தைப் பொருளாக மாறி பணம் படைத்தவர்களுக்கே மின்சாரம் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்பதையும் முரசொலி தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.