‘பக்கத்துவீடு இடிகிறது என்றால் நம் வீட்டில் விரிசல் விழுகிறது, அடி மண் சரியப்போகிறது என்றே அர்த்தம்’, எனவே தான் காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க அரசை தமிழகம் எதிர்க்கிறது. இதை இந்தியாவின் பிற மாநிலத் தலைவர்கள் உணராதது வருத்தமாக இருக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியிருப்பதை முரசொலி சுட்டிக் காட்டியுள்ளது.
அன்று கலைஞர்; இன்று மு.க.ஸ்டாலின் - என்றுமே மாநில சுயாட்சிக்கு ஆபத்து நேர்ந்து, அவசர நிலை ஏற்படும் போதெல்லாம் எதிர்த்து ஒலிக்கும் முதல் குரல் திராவிட முன்னேற்ற கழகத்துடையதாகத்தான் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது முரசொலி.