நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பாபர் மசூதி இடிப்பு வழக்கு- பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான எந்தவித சான்றுகளும் இல்லாதபோது அநியாயமாக மசூதியை இடித்துத் தள்ளி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அப்போது உ.பி-யின் முதல்வராக இருந்த கல்யாண் சிங், மசூதியை இடித்துத் தள்ளியதை பெருமையுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் குற்றவாளிகள் யார் என்பதற்கு வெளிப்படையாக நிறைய சான்றுகள் உள்ளது என்பதை நீதிமன்றம் நன்கு அறியும். ஆனால் அவர்களை தண்டிக்க முடியாமல் 25 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது நீதிமன்றம். இன்னும் 9 மாதங்களுக்குள் சிறப்பு நீதிமன்றம் ‘நல்ல’ தீர்ப்பை வழங்க வேண்டும் என நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்று நாம் பேசாதிருந்தால், நாட்டின் அமைதி கெட்டு ஒவ்வொரு வீடும் தீக்கிரையாகும் என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.