கருப்புப் பணம் வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையளர்களின் விவரங்கள் கடந்த ஓராண்டில், இந்திய அரசாணை அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் ஸ்விஸ் வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை தாமதமின்றி மீட்டு கொண்டுவர வேண்டும் என முரசொலி வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியின்படி, ‘15 லட்சம் ரூபாய்க்கு பதிலாக முதல் தவணையாக சில லட்சம் ரூபாயையாவது இந்திய குடிமக்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும்’ என்று எதிர்பாப்பது தவறு அல்லவே என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.