NEET, இருமொழிக் கொள்கை என ஏழை கிராமப்புற மாணவர்களின் தலையைக் கொய்ய முடிவுசெய்துவிட்டது பாசிச பா.ஜ.க அரசு. இந்த காவி ஆட்சியாளர்கள் மீண்டும் அமல்படுத்த நினைப்பதெல்லாம் கற்காலக் கல்விக் கொள்கையே அன்றி வேறொன்றும் இல்லை.
மக்கள் 'மக்கள் கல்விக்காக' போராட வேண்டிய சூழல் நெருங்கிவிட்டது. பா.ஜ.க-வின் கல்விக் கொள்கைகளை அனுமதித்தோமானால், கூலி வேலைக்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் உ.பி செல்லும் காலம் நெருங்கிவிடும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.