சர்வதேச அளவில் உள்ள ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்திற்கு முதலீட்டு ஈட்டுவது குறித்தும் முன்னணி நிறுவன தலைவர்களுடன் பேச உள்ளார். மேலும் தமிழக முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முக்கிய குறிக்கோள் உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு.
தமிழக முதலமைச்சரின் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான் பிரான்சிஸ் கோ, சிக்காகோ உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உலகம் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். சென்னையில் இருந்து 27-ம் தேதி அமெரிக்கா செல்லும் தமிழக முதலமைச்சர், மறுநாள் (28 ஆம் தேதி) சான் பிரான்சிஸ்கோ செல்கிறார்.
பின்னர் 28 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 2 தேதி வரை சான் பிரான்சிஸ்கோவில் முக்கிய முன்னணி நிறுவனங்களுடன் முதலமைச்சர் சந்தித்து பேச உள்ளார். அதோடு ஆகஸ்ட் 29 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் இன்வெஸ்டர் கான்க்ளேவ் (investors conclave) மற்றும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமெரிக்காவில் புலம்பெயர்ந்த தமிழக மக்களுடன் முதலமைச்சர் கலந்தாய்வு மேற்கொள்கிறார்.
செப்டம்பர் 2 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிக்காகோ செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 12 ஆம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டர்களை சந்திக்க உள்ளார். பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களுடன் தமிழக முதலமைச்சர் சந்தித்து பேச உள்ளார். செப்டம்பர் 7 ஆம் தேதி வெளிநாட்டு வாழ் தமிழர்களுடன் முதலமைச்சர் சந்தித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.