மு.க.ஸ்டாலின்

3 புதிய குற்றவியல் சட்டம் - உறுப்பினரின் கேள்விக்கு பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

3 புதிய குற்றவியல் சட்டம் - உறுப்பினரின் கேள்விக்கு பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.எச்.ஜவாஹிருல்லா புதிய குற்றவியல் நடைமுறைச் சட்ட மாற்றங்கள் குறித்து சட்டமன்றப் பேரவையில் பேசியதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில்.

மாண்புமிகு உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் ஒரு கோரிக்கையை எடுத்து வைத்தார்கள்.

நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலாக்கப்படவுள்ள புதிய சட்டங்கள் மீது உறுதிப்பாடு / புரிந்துணர்தல் ஏற்பட கால அவகாசம் தேவை என்பது உண்மைதான். இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டபோதே அவற்றை நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்த்தது. அதுமட்டுமல்ல, அவரே குறிப்பிட்டார், ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு நானே விரிவான கடிதம் எழுதி, “புதிய குற்றவியல் சட்டங்களின் செயலாக்கத்தைத் தள்ளி வைத்து, மாநிலங்களுடன் முறையான ஆலோசனை நடத்திட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

எனினும், நாடு முழுவதும் இச்சட்டங்கள் வரும் 01-07-2024 முதல் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, CCTNS மென்பொருளும் அதற்கேற்றவாறு மாற்றம் செய்யப்படவுள்ளது. அதனை மனதில் வைத்து, இச்சட்டம் குறித்தும் அதன் அமலாக்கம் முறையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும் நீதித் துறை மற்றும் காவல் துறையினருக்கு உரிய, விரைவான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவற்றை விரைந்து முடிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மாமன்ற உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories