மு.க.ஸ்டாலின்

“அன்புநெறியை பின்பற்றும் இசுலாமியப் பெருமக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இசுலாமியப் பெருமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“அன்புநெறியை பின்பற்றும் இசுலாமியப் பெருமக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பக்ரீத் பண்டிகையின் போது இறைத்தூதர் இப்ராஹிம் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக கால்நடைகளை குர்பானி கொடுத்து அதனை ஏழை மக்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து மன நிறைவு பெறுவது வழக்கம்.

அந்த வகையில், உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்றும் நாளையும் (ஜூன் 16, 17) பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து திடல் போன்ற திறந்த வெளிகளில் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு நாடு முழுவதும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“அன்புநெறியை பின்பற்றும் இசுலாமியப் பெருமக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு :

நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம் - சகோதரத்துவம் - அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்!

“அன்புநெறியை பின்பற்றும் இசுலாமியப் பெருமக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள்! நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன.

நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories