மு.க.ஸ்டாலின்

பாஜக தமிழ்நாட்டின் நலன்களை புறக்கணிக்க காரணம் என்ன ? - முதலமைச்சர் பேட்டியின் முழு விவரம் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் The News Minute ஆங்கில டிஜிட்டல் செய்திதளத்திற்கு பேட்டியளித்தார்.

பாஜக தமிழ்நாட்டின் நலன்களை புறக்கணிக்க காரணம் என்ன ? -  முதலமைச்சர் பேட்டியின் முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் The News Minute ஆங்கில டிஜிட்டல் செய்திதளத்திற்கு பேட்டியளித்தார். அதன் விவரம்.

கேள்வி 1: Why have you termed this election as a fight between Democracy and Dictatorship?

பதில்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, மாநில உரிமை இவை எல்லாவற்றுக்கும் எதிரான ஆட்சியைத்தான் கடந்த 10 ஆண்டுகளாகப் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நடத்தி வந்திருக்கிறது. எந்த ஒரு தரப்பினரும் அச்சமின்றி நிம்மதியாக வாழ முடியாது என்ற நிலைதான் இந்தியாவில் நிலவுகிறது. ஒரு வித பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது ஜனநாயக நெறிமுறைகளுக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது. இந்த ஆபத்தான நிலையை மாற்றி, மீண்டும் ஜனநாயகம் நிலைப்பெற வேண்டும் என்பதே தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நோக்கம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அரசியல் இயக்கங்கள் மக்களின் ஆதரவுடன் சர்வாதிகாரத்தை வீழ்த்திக் காட்டுவற்கான களமே இந்த நாடாளுமன்றத் தேர்தல்.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இனி தேர்தலே இருக்காது என்று சொல்லி வருகிறோம். இதுவரை இந்தக் குற்றச்சாட்டை மோடி மறுக்கவில்லையே!

கேள்வி 2: The BJP has engineered defections and has toppled several elected governments in other states? Did they also attempt to destabilise your government in the past 3 years?

பதில்: தி.மு.க என்பது கொள்கை உறுதிமிக்க இயக்கம். அதனால் மற்ற பல மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் குதிரை பேரம் நடத்த முடியவில்லை. எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சியில் செய்தது போல பா.ஜ.க.வால் இங்கு குதிரை சவாரியும் செய்ய முடியவில்லை. அதனால் தமிழ்நாட்டின் நலன்களைப் புறக்கணிப்பது, தமிழ்நாட்டிற்கான உரிமைகளை மறுப்பது, போதிய நிதி வழங்காமல் தவிர்ப்பது, பொய்யான விமர்சனங்களைப் பரப்புவது, ஒன்றிய அரசின் துறைகளான ஐ.டி, ஈ.டி மூலமாக மாநில அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என நெருக்கடிகளைக் கொடுத்தது பா.ஜ.க அரசு. இவை எல்லாவற்றையும் சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெறுகிற ஜனநாயக இயக்கம்தான் தி.மு.கழகம்.

பாஜக தமிழ்நாட்டின் நலன்களை புறக்கணிக்க காரணம் என்ன ? -  முதலமைச்சர் பேட்டியின் முழு விவரம் !

கேள்வி 3: The DMK faces two fronts this time. But who is your primary opponent? The BJP or the AIADMK?

பதில்: தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. அப்படி ஒரு செல்வாக்கு இருப்பது போன்ற மாய பிம்பத்தை கட்டியமைக்கப் பார்க்கிறார்கள். பா.ஜ.க.வின் மதவாத அரசியல் கொள்கைகளை-வன்முறை செயல்பாடுகளை அமைதியை விரும்பும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால், தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் களம் என்பது தி.மு.கவுக்கும் அ.தி.மு.க.வுக்குமான போட்டிதான். பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த அ.தி.மு.க. இப்போதும்கூட பிரதமர் மோடியையோ பா.ஜ.கவின் செயல்பாடுகளையோ கடுமையாக விமர்சிக்காமல் கள்ளக்கூட்டணி அமைத்து செயல்படுகிறது. ஒரு சில தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு உதவிடும் நோக்கத்தில் அ.தி.மு.க. சைலன்ட் மோடுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு பழனிசாமி செய்யும் துரோகம்.

கேள்வி 4: The BJP has however positioned itself as your major opponent. PM Modi has been leading that narrative. They claim BJP will win more than 25% votes.

பதில்: தி.மு.க. என்பது பா.ஜ.க.வுக்கு கொள்கை ரீதியான அரசியல் எதிரி. அத்துடன், தமிழ்நாட்டில் மிகுந்த செல்வாக்கு மிக்க அரசியல் கட்சி. திமுகவிற்கு பா.ஜ.க. போட்டியே இல்லை. அ.தி.மு.க.வின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு- பிரதமர் மோடியும் அவரது கட்சியினரும் அப்படியொரு கற்பனை பிம்பத்தை உருவாக்க ஊடகத்தைப் பயன்படுத்துகிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது அந்த போலி பிம்பமும் உடைந்துவிடும்.

கேள்வி 5: India has seen coalition govt's before- but they all had a strong narrative. Like the coalition that was against Indira or Rajiv Gandhi. Does the INDIA alliance lack that kind of a narrative?

பதில்: இந்தியா கூட்டணி ஜனநாயகத்தின் பக்கம் நிற்கிறது. அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இன்றைக்கு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானதும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் நம்பிக்கை கொண்டதுமான கட்சிகள்தான். ஆகவே கடந்த காலங்களைப் போல்- சித்தாந்த ரீதியாக பா.ஜ.க.விற்கு எதிராக களத்தில் நிற்கும் இந்திய கூட்டணி வலுவான கூட்டணிதான்! நாடு முழுவதும் பா.ஜ.க.வால் உருவாகியுள்ள பிரச்சினைகள், மாநிலத்திற்கேற்ற பிரச்சினைகள் என இரண்டு வகையிலும் பா.ஜ.க.வின் ஜனநாயக விரோதப் போக்கை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்து களத்தில் நிற்கிறதே!

கேள்வி 6: There are several leaders like KCR and Jagan who have stayed away from both NDA and INDIA. What would you want to say to them?

பதில்: தேர்தல் அரசியல் களத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு. அவர்கள் மாநில அரசியல் சார்ந்து சில முடிவுகள் மேற்கொள்ளலாம். ஆனால் தென் மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதுதானே நிஜம்.

பாஜக தமிழ்நாட்டின் நலன்களை புறக்கணிக்க காரணம் என்ன ? -  முதலமைச்சர் பேட்டியின் முழு விவரம் !

கேள்வி 7: If the need arises, will you personally speak to them regarding joining the alliance?

பதில்: தேர்தல் முடிவு வரும் வரை காத்திருப்போம்.

கேள்வி 8: TV channels-especially English- are all about Annamalai. Do you think he has a quality which previous BJP leaders in the state did not have? Has he really made the BJP popular?

பதில்: தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஊடங்கள் மூலம் கற்பனையான பிம்பத்தைக் கட்டமைப்பதுதான் பா.ஜ.க.வின் தொடர்ச்சியான வேலைத்திட்டமாக உள்ளது என்பதைத் தவிர வேறு பதில் தேவையில்லை என்று கருதுகிறேன்.

கேள்வி 9: The BJP has taken a high moral ground on the electoral bond scheme. Has the opposition failed in comering them?

பதில்: தேர்தல் பத்திரம் என்பது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆதாயத்திற்காகவும், நிறுவனங்களை I.T, ED மூலம் மிரட்டியும் பா.ஜ.க. பெரியளவில் நிதி வசூலித்துள்ளது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து வெளியான வங்கிக் கணக்கு விவரங்களிலிருந்து அம்பலமாகிவிட்டது. இதுவரை ஒன்றியத்தில் ஆட்சி செய்த எந்தக் கட்சியும் செய்யாத அளவிற்கு- பா.ஜ.க. எந்தளவுக்கு ஊழலை சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது என்பது மக்களுக்கு மிகத் தெளிவாக புரிந்திருக்கிறது.

கேள்வி 10: Opposition parties like the DMK too have been questioned for the kind of money they have got through bonds.

பதில்: தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க பெற்ற நிதி குறித்த விவரங்களை எங்கள் கட்சியின் பொருளாளர் வெளிப்படையாக அறிவித்தார். யாருக்கும் ஆதாயம் அளிப்பதற்காக தி.மு.க. நிதி பெறவில்லை. அரசு இயந்திரங்களை வைத்து மிரட்டியும் எந்த நிறுவனத்திடமும் நிதி பெறவில்லை.

கேள்வி 11: What do you think will happen If BJP comes back to power after 2024?

அப்படியொரு ஆபத்தை இந்தியா சந்திக்காது என உறுதியாக நம்புகிறேன். இந்தியா ஜனநாயக நாடாக தொடர வேண்டும் என்பதில் மக்களின் தீர்ப்பு தெளிவாக இருக்கும்.

banner

Related Stories

Related Stories