மு.க.ஸ்டாலின்

தேசிய அளவில் சாதிவாதி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய அளவில் சாதிவாதி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது இறுதியாக 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் அரசு நடத்தியது. அதன் முடிவுகள் த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில், 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் (36.0148 %) பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (EBC) சேர்ந்தவர்கள். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் (27.1286 %) பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (BC) சேர்ந்தவர்கள். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (19.6518 %) பேர் பட்டியல் இனத்தைச் (SC) சேர்ந்தவர்கள்

21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் (1.6824 %) பேர் பழங்குடியினத்தைச் (ST) சேர்ந்தவர்கள். 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் (15.5224 %) பேர் பொது பிரிவினர். இந்துக்களின் மக்கள் தொகை 81.99 சதவீதமும், முஸ்லிம் மக்கள் தொகை 17.70 சதவீதம் என்பதும் தெரியவந்தது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை பாஜகவில் பலர் எதிர்த்து வருகின்றனர்.

தேசிய அளவில் சாதிவாதி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

இந்த முடிவுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவோம் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரிவானதொரு சாதிவாரிக் கணக்கெடுப்பை இணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.

​2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், வரவிருக்கக்கூடிய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும். மாநில அளவில் இதற்கான நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு, முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலைநாட்டிட இயலும். சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories