மு.க.ஸ்டாலின்

’எந்த முதல்வருக்கும் இல்லாத தைரியம்’: உச்ச நீதிபதி இருக்கும் மேடையிலேயே முக்கிய கோரிக்கை வைத்த ஸ்டாலின்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் முன்னிலையில் 3 முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.

’எந்த முதல்வருக்கும் இல்லாத தைரியம்’: உச்ச நீதிபதி இருக்கும் மேடையிலேயே முக்கிய கோரிக்கை வைத்த ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நீதிமன்றக் கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு வருகை தந்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்பமை ரமணா அவர்கள் வருகை தந்திருந்தார். அதே மேடையில், அவர் முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்தார்.

« உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்

« தமிழ் மொழியினையும் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும்.

« பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

’எந்த முதல்வருக்கும் இல்லாத தைரியம்’: உச்ச நீதிபதி இருக்கும் மேடையிலேயே முக்கிய கோரிக்கை வைத்த ஸ்டாலின்!

அதனைத் தொடர்ந்து பேசிய அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, "எவருக்கும் புரியாத வகையில் மந்திரம் உச்சரிப்பதைப் போன்று இல்லாமல், வழக்காடுபவர்கள் நீதித்துறையின் நிர்வாக செயல்பாடுகளை புரிந்து கொள்ளும் வகையில் நீதிமன்றங்களின் வழக்காடு மொழியாக மாநில மொழிகள் ஆக்கப்பட்ட வேண்டியது அவசியம்" என்று குறிப்பிட்டார்.

ஆனால், சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்குமாறு தமிழ்நாடு அரசு வழங்கிய பரிந்துரை மற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

’எந்த முதல்வருக்கும் இல்லாத தைரியம்’: உச்ச நீதிபதி இருக்கும் மேடையிலேயே முக்கிய கோரிக்கை வைத்த ஸ்டாலின்!

சட்டப்பிரிவு 348 (1)(A)-ன் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக மாநில மொழிகளை அறிவிக்கலாம் என்ற நிலையில், அதற்க்கு அனுமதி மறுக்கப்பட்டது மாநில மொழிகள் மீதான ஒன்றிய அரசின் பார்வையை வெளிப்படுத்தியது.

இந்த நிலையில், மதுரை மாவட்ட உயர்நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் முன்னிலையில் 3 முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மொழியை வழக்காடு மொழியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கவேண்டும். உச்சநீதிமன்ற கிளை சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் கொண்டு வர வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையிலான பணி நியமனம் பின்பற்றப்படவேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் முன்னிலையில் பேசினார். அவரின் இந்த பேச்சு இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

banner

Related Stories

Related Stories