மு.க.ஸ்டாலின்

ஆளுநரை வலியுறுத்தி எழுவர் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து கவலைப்படாமல் இருக்கும் அ.தி.மு.க அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பளித்துள்ளார்.

ஆளுநரை வலியுறுத்தி எழுவர் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கோப்புக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கவும், கோப்புகளை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இத்தனை மாதங்கள் கோப்புகளை நிலுவையில் வைத்திருப்பது ஏன் என ஆளுநருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கான பதிலை ஆளுநரிடம் தமிழக அரசுதான் கேட்டுப்பெற வேண்டுமே தவிர நீதிமன்றம் அல்ல என்றும் கூறினர்.

ஆளுநரை வலியுறுத்தி எழுவர் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

இதனையடுத்து, இரண்டு வாரங்களில் இது தொடர்பான பதிலை ஆளுநரிடம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு வரவேற்பு அளித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், "பேரறிவாளன்உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு, இரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு அ.தி.மு.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

அமைச்சரவை தீர்மானம் மற்றும் மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அ.தி.மு.க அரசிற்கு உச்சநீதிமன்றம் "குட்டு" வைத்துள்ளது.

எனவே இனியாவது உடனடியாக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநரை வலியுறுத்தி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories